தங்கம் விலை ஆறு மடங்கு உயருமா.. 1980ல் ஈரானில் நடந்த இதே சம்பவம்.. பொருளாதார நிபுணர் விளக்கம்
சென்னை: இன்று என்ன பிரச்சனை எல்லாம் ஈரானால் வந்ததோ, அதேபோல் 1980களில் பிரச்சனை வந்தது. ஈரான் பிரச்சனையால் ஆறே மாதத்தில் தங்கம் விலை நான்கு மடங்கு உயர்ந்தது. இதுபற்றி பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர். சுந்தர் ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பேசினார். குறிப்பாக ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா மோதல் மற்றும் இந்தியாவில் அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விளக்கம் அளித்தார். தங்கம் விலை எந்த அளவிற்கு உயரும். பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் இறக்குமதி விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய போகிறது என்பது குறித்தும் வீடியோவில் பேசினார்
ஈரானில் 1979ல் ஏற்பட்ட அரசியல் புரட்சியால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஈரான் உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதியாளராக இருந்ததால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்தது. 1980களில் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே செப்டம்பரில் போர் தொடங்கியவுடன், இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி முனையங்களை அழித்தன. இதனால் கச்சா எண்ணெய் விலை மிகக் குறுகிய காலத்தில் ஒரு பேரலுக்கு $15-லிருந்து சுமார் $40 வரை உயர்ந்தது.

இந்தியா தனது தேவையில் பெரும் பகுதியை ஈரானிடமிருந்து பெற்று வந்ததால், உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்தன. வரிசைகளில் நின்று எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டது. இது பற்றி பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர். சுந்தர் ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் 16500 மெட்ரிக் டன் தேவைப்படுவதாவும்,இதில் 6500 டன் தான் இந்தியாவில் கிடைக்கிறது என்றும் சுமார் 10 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை இந்தியா இறக்குமதி தான் செய்கிறது என்றும் கூறினார். தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர வேண்டிய எண்ணெய் வர முடியாமல் இருக்கிறது என்றும், ஈரான் கப்பல்களை தாக்கி அழிப்பதாகவும வீடியோவில் கூறினார்.
பி.ஆர். சுந்தர் மேலும் பேசும் போது, உலகளாவிய போர்கள் காரணமாக தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 மடங்கு இந்திய ரூபாயின்மதிப்பில் ஏறி உள்ளது, அமெரிக்க டாலர் மதிப்பில் பார்த்தால் 3 மடங்கு ஏறி உள்ளது. ஆனால் ஈரானில் உள்நாட்டு பிரச்சனை 1980களில் வந்தபோது, வெறும் ஆறு மாதத்தில் இந்தியாவில் தங்கம் விலை நான்கு மடங்கு உயர்ந்தது, வெள்ளியில் விலை 10 மடங்கு ஏறியது.
எனவே 1980களிலேயே தனக்கு பிரச்சனை ஏற்பட்டால் என்னாகும் என்பதை ஈரான் சர்வதேச நாடுகளுக்கு காட்டிவிட்டது. ஆனால் நிறைய நாடுகள் அந்த படத்தை சரியாக கற்கவில்லை.. ஏனெனில் பிரச்சனை வந்தால், எப்படி சமாளிக்கவேண்டும்.. எரிபொருள் தேவையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
விஜய் கட்சி ஆரம்பித்தபோது தமிழ் தேசியம் ஒரு கண், திராவிடம் ஒரு எண் என இரண்டு பக்கமும் இருந்தார். அப்போது சீமான், சாலையில் ஏதாவது ஒரு பக்கம் நில்..இரண்டு பக்கமும் நிற்காதே. நடுவில் அடிப்பட்டு போவாய் என்று விஜய்யை எச்சரித்தார். இந்தியாவை பொறுத்தவரை, இரண்டு நாடுகள் பக்கமும் நிற்காது. நடுநிலையாகவே இருக்கிறது. சீனாவை பொறுத்தவரை ஈரானின் நட்பு நாடு என்பதால், அவர்களுக்கு எண்ணெய் போய்விட்டது. ஆனால் ஈரான் இஸ்ரேல் இரண்டுமே நமக்கு எந்த உதவியும் செய்யவில்லை" என்றார். தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறி அவர், ஆபத்தை தடுக்கும் விஷயத்தில் இந்தியாவின் அணுகுமுறை குறித்தும் விமர்சித்தார். முழு தகவலை செய்தியுடன் இணைக்கப்பட்ட வீடியோவில் பாருங்கள்,
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications