தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கடைகள்.. அடேங்கப்பா.. இவ்வளவா?.. அரசு சொன்ன சூப்பர் செய்தி..!
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கடைகள் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது..!
தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்மை அடைந்து வருகின்றனர்.
அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் உள்ளது.. மற்றொரு புறம், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு
இதனிடையே, கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகி கொண்டிருக்கிறது.. கடந்த முறை தமிழக சட்டப்பேரவையில், கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு ஐ பெரியசாமி பதிலளித்து பேசும்போது, நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

ஐ பெரியசாமி
அதன்படியே குறிப்பிட்ட பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகின்றன.. இந்நிலையில் திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட், சட்டப்பேரவையில், கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.. நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. இதையடுத்து, இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

ரேஷன் கார்டுகள்
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று திருப்பூர் தெற்கு உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்... அதற்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "திருப்பூரில் நியாய விலைக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. 1,000 அட்டை உள்ள நியாய விலைக் கடைகளை பிரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்..

அமைச்சர் பெரியசாமி
மேலும், 150 ரேசன் அட்டைகளுக்குப் பகுதி நேர கடைகளும், 200 ரேசன் அட்டைகளுக்கு மேல் இருந்தால் முழு நேரக் கடைகளும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. 3 முழு நேர கடைகள், 7 பகுதி நேர கடைகள் திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது... நிதி நெருக்கடி இருப்பினும் தேவைப்படும் இடங்களில் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படும்" என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்தார்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications