தவெக விஜய் உடன் ஒரே மேடையில் பங்கேற்பா? திருமாவளவனே கொடுத்த பரபர விளக்கம்!
சென்னை: விஜய்யுடன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு திருமாவளவன் அளித்த பதிலை பார்க்கலாம்.
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய விஜய், தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று கூறினார். விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளானது.

குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது எழுப்பி வருகிறது. இதற்கு மத்தியில்தான் விஜய் இவ்வாறு பேசியிருப்பது, விசிகவுக்கு விடுத்த மறைமுக அழைப்பாக கூட இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. எனினும், விஜய்யை கடுமையாக விமர்சித்து திருமாவளவன் அறிவிக்கை வெளியிட்டார்.
பண்டிகை கால ஆஃபர் போல விஜய் அறிவித்து இருக்கிறார் என்றும் கடுமையாக சாடினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடனே கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தான், அடுத்த மாதம் 6 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் புத்தக வௌயீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யும் பங்கேற்பார் என்று தகவல் வெளியானது.
இருவரும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஒரே மேடையில் அம்பேத்கர் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்பது குறித்து திருமாவளவன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தொல் திருமாவளவன் கூறியதாவது:-
புத்தக வெளியீடு தொடர்பாக ஓராண்டுக்கு முன்பே எடுத்த முடிவு இது. நான் வந்து இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பேன் என்று அறிவித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது இந்த புத்தகம் வெளியிடப்படும் என்று திட்டமிடப்பட்டு இருந்தது.
விகடன் பதிப்பகமும், ஆதவ் அர்ஜூனன் தலைமையிலான விஓசி நிறுவனமும் இணைந்து இந்த புத்தகத்தை கொண்டு வருகிறார்கள். ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்திருந்தால் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று சொல்லியிருந்தனர். அவர் மட்டுமில்லை ராகுல் காந்தியையும் அழைக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள்.
பத்திரிகையாளர் இந்து ராம் அவர்களும், அம்பேத்கரின் உறவினரான ஆனந்த் டெல்டுண்டுவும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லியிருந்தார்கள். என்னிடமும் கட்டுரை கேட்டிருந்தார்கள். 40 பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் எல்லோருக்குமான தலைவர் டாக்டர் அம்பேத்கர் என்ற பெயரில் தொகுப்பாக வெளி வர இருக்கிறது.
ஆகவே இந்த புத்தக வெளியீட்டு விழாவானது இப்போது முடிவானது இல்லை. முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால் இப்போது ஒருசில வாரங்களுக்கு முன்பு தவெக மாநாடு நடைபெறுவதற்கு முன்பு விஜய்யை அழைக்க இருக்கிறோம் என்றும், அவர் நிச்சயம் வருவார் என்ற தகவலை சொல்லியிருந்தனர். ரஜினிகாந்தும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருந்தனர்.
இப்படித்தான் அது சொல்லப்பட்டது. அதற்கு நாங்களும் பதில் சொல்லியிருந்தோம். இப்போது விஜய் பங்கேற்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே, இன்றைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் முடிவு செய்வோம். முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி எங்கள் முடிவை சொல்லுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன











Click it and Unblock the Notifications