"சூப்பர்" நெருக்கம்.. தொகுதியில் தெரியாத ஆளே இல்லை.. திரும்பி பார்க்க வைக்கும் முத்தமிழ்செல்வன்
செங்கல்பட்டில் முத்தமிழ்செல்வன் ஐஜேகே சார்பில் போட்டியிடுகிறார்
சென்னை: செங்கற்பட்டு தொகுதியில் ஐஜேகே முத்தமிழ்செல்வனுக்குதான் வெற்றி வாய்ப்பு உள்ளதாக அடித்து சொல்கிறார்கள் மக்கள்.. காரணம், மக்களிடம் நெருங்கி பழகும் இயல்புதானாம்.
யார் இந்த முத்தமிழ்செல்வன்?
வரும் தேர்தலில், செங்கல்பட்டு தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் களமிறக்கப்படுபவர்தான் முத்தமிழ் செல்வன்.. இந்திய ஜனநாயக கட்சியின் தொடக்க காலத்தில் கட்சியின் விளம்பரப் பிரிவு செயலாளராக பணியாற்றியவர்.. 2010 ஆண்டு முதல் காஞ்சிபுரம் -செங்கற்பட்டு மாவட்ட தலைவராக பணியாற்ற தொடங்கினார்.

அரசியல்
காலேஜ் படிக்கும்போதே, முத்தமிழ் செல்வனுக்கு அரசியலின் மீது அதிக ஆர்வம் இருந்தது... ஏழை, எளிய மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.. பாரிவேந்தர் ஆரம்பித்த இந்திய ஜனநாயகக் கட்சியியிலும் தன்னை இணைத்துக் கொண்டார்... பிறகு முழு நேரமும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

விளம்பரம்
கட்சிக் கூட்டம் எங்கு நடந்தாலும், உடனே ஓடிப்போய், கொடி கம்பங்கள் நடுவாராம்.. விளம்பரங்கள் ரெடி செய்துவிடுவாராம்.. சோஷியல் மீடியாவிலும் கட்சி பிரச்சாரத்தை கொண்டு சென்று மக்களிடம் சேர்த்துவிடுவாராம்.. அதனால்தான், காஞ்சிபுரம், செங்கற்பட்டு என்ற 2 இரண்டு மாவட்ட மக்களிடமும் ஓவர் நெருக்கத்துடன் இருக்கிறார் முத்தமிழ் செல்வன். கட்சியில் இவரை தெரியாத ஆட்களே இல்லை என்கிற அளவுக்கு, ஃபேமஸ் நபர். அதனால்தான் இங்கு களமிறக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு
ஆனால், செங்கற்பட்டு தொகுதியில் ஏராளமான பிரச்சனைகள் சூழந்துள்ளன.. பாதாளச் சாக்கடைத் திட்டம் தற்போது பல்லாண்டுகளாக நிறைவேற்றப்படாமல், உள்ளது.. அடிப்படை தேவைகளில் மிக முக்கியமானதாக விளங்கும் பாதாள சாக்கடைத் திட்டத்தை அரசு ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால், ஐஜேகே சார்பில் தான் வெற்றிபெற்றால், முதல் திட்டமாக பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கப்படும் என்று உறுதியாக சொல்கிறார் முத்தமிழ்செல்வன்.

முற்றுப்புள்ளி
அதேபோல, மும்மலை பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கு முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இங்கு குப்பைகளை எரிக்கும்போது வெளியேறும் நச்சுப் புகையால், சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி தன்னால் வைக்கப்படும் என்று அடித்து சொல்கிறார் முத்தமிழ்செல்வன்,.

குடிநீர்
அதுமட்டுமல்ல, செங்கற்பட்டு மக்களின் மிக முக்கியப் பிரச்னையாக குடிநீர் பற்றாக்குறையை தீர்த்து, கொளவாய் ஏரி தூர் வாரப்பட்டு, ஏரி நீர் மாசுபடாமல் சுத்திகரிப்புச் செய்யப்பட்டு. மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்பதையும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.

வசதிகள்
இந்த தொகுதியின் சுற்றுவட்டார பகுதியில், 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன... 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிந்தும் வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை சொல்கிறார் முத்தமிழ் செல்வன்.

அடிப்படை புரிதல்
மேலும், கூடுவாஞ்சேரி முதல் செங்கற்பட்டுவரை சாலை ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என மக்களின் நீண்டகாலமாகக் கோரிக்கையை நிறைவேற்ற தன்னால் முடியும் என்று உறுதியாக சொல்லும் முத்தமிழ்செல்வனுக்கு, தொகுதி மக்களிடம் நல்ல பெயர், தொகுதி பற்றின அடிப்படைப் புரிதல் போன்றவை துணையாக நின்று வெற்றி பெற வைக்கும் என்றும் சொல்கிறார்கள் தொகுதி மக்கள்...!
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..!












Click it and Unblock the Notifications