ஜனநாயகன் முன்பு 3 ஆக்ஷன்.. மின்னி மறையுதா விஜய்யின் அரசியல் சீன்கள்? இதை விட்டால் வழியில்லை
சென்னை: விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம், கடுமையான இடியாப்ப சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.. சென்சார் வாரியம், திரைப்படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கண்டுபிடித்து, சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.. நேற்றைய தினம் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், படக்குழு அடுத்து என்ன செய்ய போகிறது? என்ன முடிவெடுக்க போகிறது? என்பதும் மிகப்பெரிய ஆர்வத்தை கிளப்பி விட்டுள்ளது..!!
ஜனநாயகன் விவகாரம் போகிற போக்கை பார்த்தால், ஒரு சினிமா வெளியீடு தொடர்பான மோதலாக தெரியவில்லை; அது சென்சார் போர்டின் அதிகாரத்துக்கும், ஒரு படைப்பாளியின் சுதந்திரத்துக்கும் இடையேயான யுத்தமாகவே மாறியிருப்பது போல உள்ளது..

ஜனநாயகன் படம்
பொங்கல் பண்டிகைக்கு எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற இலக்குடன் துவங்கப்பட்ட இந்த படம், இப்போது கோர்ட்டிலேயே தேங்கி நிற்கிறது... தனி நீதிபதியின் உத்தரவை டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்திருப்பது, படக்குழுவுக்குக் கிடைத்துள்ள பின்னடைவு என்பதையும் தாண்டி, சட்ட ரீதியான ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாரிப்பாளர்களை தள்ளியுள்ளது என்றே சொல்லலாம்..
சமூகப் பிரச்சனை என்ற வாதத்தை சென்சார் வாரியம் முன்வைக்கிறது.. படத்தின் சில சீன்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாரியம் சொல்வது, படத்தின் அரசியல் வீரியத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது...
சென்சார் போர்டு கறார்
தணிக்கை வாரியத்திற்கு உரிய அவகாசம் வழங்கப்படவில்லை என்ற நீதிமன்றத்தின் கருத்து, இனிவரும் நாட்களில் இந்த வழக்கை மேலும் நீட்டிக்கவே செய்யும். வழக்கறிஞர் சதீஷ் பராசரனுடன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவசர ஆலோசனை, படத்தின் வணிக நலன் மற்றும் அரசியல் சூழல் ஆகிய இரண்டையும் மையப்படுத்தியே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் படக்குழுவின் முன்னால் இருக்கும் சவால்கள் மிகவும் சிக்கலானதாகவே உள்ளது.. ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு போவது, மற்றொன்று மறுஆய்வுக்கு செல்வது, இன்னொன்று தனி நீதிபதியிடம் மீண்டும் அணுகி வழக்கை விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்வது என்ற ஆப்ஷன்கள் உள்ளன..
சட்டப்போராட்டத்தை சுப்ரீம் உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றால், அது நீதிக்கான வெற்றியாக அமையலாம், ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி மாதக்கணக்கில் தள்ளிப்போகக்கூடும் என்று படக்குழு யோசிக்கிறது..
விஜய்க்கு 3 ஆப்ஷன்கள்
சென்சார் போர்டு பரிந்துரைப்படி மறு ஆய்வுக்கு செல்வது எனப்து, படைப்பின் ஆன்மாவாகக் கருதப்படும் சில காட்சிகளை தியாகம் செய்வதற்கு சமம்... இதில் எதை தேர்ந்தெடுப்பது என்ற தர்ம சங்கடத்தில் படக்குழு தவிப்பதாக தெரிகிறது..
இவை அனைத்தையும் விட, மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து நிற்பது வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தல்தான்..
ஒரு அரசியல் பின்னணி கொண்ட படம், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே தியேட்டருக்கு வராவிட்டால், அதன் பிறகு தேர்தல் ஆணையத்தின் கடும் நிபந்தனைகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்...
அதாவது தேர்தல் அறிவிப்புக்கு முன் படம் வெளியிட முடியாவிட்டால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி வரும் வரைபடம் திரையரங்குகளை நோக்கி செல்ல முடியாது. அது இந்த படத்தின் வசூலையும், படக்கருத்துக்களின் தாக்கத்தையும் பெருமளவு பாதிக்கவே செய்யும்.. எனவே படக் குழு என்ன முடிவெடுக்க போகிறது? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications