சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"செம".. சீமான் ஒன்று சொல்ல.. பதிலுக்கு கமல் உறுதிமொழி அளிக்க.. பக்காவாக ரெடியாகும் கலகல கூட்டணி!

மக்கள் நீதி மய்யத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்கும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சீமான் ஒரு உறுதிமொழியை கமலுக்கு தர, பதிலுக்கு மற்றொரு வாக்குறுதியை சீமானுக்கு கமல் தர.. இப்படி அரசியல் களமே அப்படியே பரபரத்து காணப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆரம்பத்தில் இருந்தே ரஜினி அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ஆர்வமாக இருப்பவர்.. இதற்கு தமிழ் இனவாத உணர்வு காரணமா அல்லது வேறு காரணத்திற்காக கொதித்து போகிறாரா என தெரியவில்லை.

ஆனால் கமல் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அறிவித்தபோது அமைதியாக அதை ஏற்றார் இதே சீமான்தான்.. இன்னும் சொல்லப்போனால், மக்கள் நீதி மய்யம் ஆரம்பிப்பதற்கு முன்பு, குறிப்பிட்ட சில தலைவர்களை சந்தித்து பேசி வந்தபோது, சீமான் நேரடியாக சென்று கமலை ஆழ்வார்பேட்டையில் சந்தித்து பேசிய நிகழ்வும் நடந்தது.

 மண்ணின் மைந்தர்கள்

மண்ணின் மைந்தர்கள்

அப்போதே இருவரும் கைகோர்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது... இதற்கு காரணம் கமல், சீமான் இருவருமே இந்த மண்ணின் மைந்தர்கள்... தமிழ் மீது பற்றுள்ளவர்கள்... தமிழர்களின் உணர்வை உளப்பூர்வமாக அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டவர்கள்... சீமானின் தொண்டர்களாக இருந்தாலும் சரி, கமலின் மய்ய உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, மக்களிடையே தனித்துவம் பெற்று மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து வருபவர்கள்.

 எம்பி தேர்தல்

எம்பி தேர்தல்

இவர்கள் இருவரும் கொள்கை ரீதியாக மாறுபட்டிருக்கலாம், சீனியர், ஜுனியர் என்ற அரசியல் கால ஒப்பீடு இருக்கலாம், ஆனால் கமலும், சீமானும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் அது ஒரு வலுவான கூட்டணியாகதான் இருக்கும் என்றும் பரவலாக எம்பி தேர்தலுக்கு முன்பேயே கிசுகிசுக்கப்பட்டது. இதே சீமான் அன்று நினைத்திருந்தால் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிறைய தேர்தல்களை சந்தித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்தது இல்லை. ஒன்று தனித்து போட்டியிடுவார், இல்லையென்றால் போட்டியிடாமல் ஒதுங்கி விடுவார்... அதையேதான் கடந்த முறை எம்பி தேர்தலின்போதும் கமலின் முடிவாக இருந்தது.

மய்யம்

மய்யம்

நல்லவர்கள் இணையலாம் என்று ஒரு ஹின்ட் கமல் அப்போது தந்தபோதும் சீமான் மய்யத்துடன் இணையவில்லை.. அதேசமயம், "கொள்கை ஒத்துப்போனால் கூட்டணி அமையும்" என்று இவர்கள் இருவரும் வெளிப்படையாக சொன்னதையும் மறுக்க முடியாது... ஆனால், வரப்போகும் தேர்தலில் நிலைமை அப்படி இல்லை.. தனித்து போட்டியிட்டால் மறுபடியும் மண்ணை கவ்வ வேண்டியதுதான் என்பதை கமலும், சீமானும் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.. கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால்தான், தங்கள் கட்சியின் அடிப்படை வாக்கு சதவீதத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற எதார்த்தத்தை புரிந்துள்ளனர்.

 சீனியர், ஜூனியர்

சீனியர், ஜூனியர்

அந்த வகையில் இருவருமே தற்போது இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது.. சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடுகளை தூக்கி வீசிவிட்டு, ஈகோவையும் தூக்கி தூர போட்டுவிட்டு, இருவருமே கை கோர்க்கும் வேலையில் இறங்கி உள்ளனராம்.. ஆமாம்.. வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் மக்கள் மய்யம் கட்சியும் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 கூடுதல் பலம்

கூடுதல் பலம்

கடந்த தேர்தல்களில் இரு கட்சிகளுமே கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன.. அந்த வகையில் இவர்கள் இணைந்தால் இந்த வாக்கு சதவீதம் மேலும் பெருகும், அது தங்கள் கூட்டணிக்கு கூடுதல் பலமாக இணையும் என்று முடிவெடுத்துள்ளனராம்.. இதற்காக சிறு,சிறு கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட போவதாக சீமான் கமலிடம் சொல்லி உள்ளாராம்.. அதற்கு கமல், வாக்கு வங்கி அதிகமுள்ள ஒரு பெரிய கட்சியை கூட்டணிக்குள் இழுத்து வருகிறேன் என்று சீமானுக்கு வாக்கு தந்திருக்கிறாராம்.

 ஒருங்கிணைப்பு

ஒருங்கிணைப்பு

அதாவது, கமல், உள்ளிருந்து பணியை தொடங்க, சீமானோ வெளியில் இருக்கக்கூடிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை தொடங்கி விட்டாராம்.. ஒருசில கட்சியின் முக்கிய நிர்வாகிககளையும் சந்தித்து பேசி வருகிறாராம்.. திமுகவுடன் சென்றால் ஒற்றை இலக்க சீட் தான் தருவார்கள், எங்களுடன் வாருங்கள், விரும்பிய சீட்டை தருகிறோம் என்று சொல்லி வருகிறாராம்.

 சூப்பர்

சூப்பர்

தனித்து போட்டி என்ற பிடிவாதத்தில் இருந்து கமலும், சீமானும் இணங்கி, இறங்கி வந்துள்ளது மிகப்பெரிய தாக்கத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இவர்கள் இருவரும் கடந்த முறை தேர்தல்களில், 10 பைசாகூட ஓட்டுக்கு காசு தராமல், உண்மையான வாக்காளர்களை சம்பாதித்து வைத்துள்ளதே இவர்களின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு அடித்தளமாக இருந்து வருகிறது!

English summary
Will Kamalhasan join with Seeman in Assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X