அடிச்சு தூக்குது திமுக.. "அவரை"யும் கை நழுவ விடுகிறாரே எடப்பாடி பழனிசாமி.. பாஜக வேற உற்று பார்க்குதே
சென்னை: அதிமுகவில் இன்னும் கூட்டணி முடிவாகாத நிலையில், பெரும் பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.. அந்தவகையில், தற்போதும் தகவல் ஒன்று இணையத்தை வட்டமடிக்க துவங்கி உள்ளது.
இஸ்லாமிய சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருந்த தமிமுன் அன்சாரி, பிப்ரவரி 10ம் தேதி திருச்சியில் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பானது,தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

முயற்சிகள்: இதனிடையே, அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் வாக்குகளை கொண்டுவர வேண்டும் என்பதற்காக, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, ஆகிய 2 கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை முன்னெடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், அதில் அவரால் முழுமையாக வெற்றி பெறமுடியவில்லை.. இப்போதுவரை அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ. மட்டும் உள்ளதே தவிர, தமிமுன் அன்சாரி இன்னும் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
காங்கிரஸ் தூது: நேரடியாக சென்று எடப்பாடிக்கு ஆதரவை தெரிவித்தும்கூட, தமிமுன் அன்சாரி ஏன் அதிமுக கூட்டணியில் இணையாமல் இருக்கிறார் என்ற சந்தேகமும் வலுப்பெற்றவாறே இருந்தது. அப்போதுதான், காங்கிரஸ் தரப்பில் தூது அனுப்பப்பட்ட சமாச்சாரமே வெளியே கசிந்தது..
எங்களுக்காகவாவது, இந்தியா கூட்டணியை தமிழ்நாட்டில் ஆதரியுங்கள் என்று தமிமுன் அன்சாரியிடம் காங்கிரஸ் மேலிட முக்கிய பிரமுகர் ஒருவர் கேட்டுக கொண்டாராம்.. அதுமட்டுமல்ல, ராகுல் காந்தியுடன் தமிமுன் அன்சாரியை சந்திக்க வைக்கவும் காங்கிரஸ் மேலிட பிரமுகர் ஏற்பாடு செய்து செய்வதாகவும் சொன்னாராம்..
நாகை: இந்த விஷயம் தெரிந்து, நாகை தொகுதியில் களமிறங்கும் யோசனையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா , அன்சாரியை தொடர்பு கொண்டு பேசி, அதிமுக பக்கம் செல்லவே வேண்டாம் என கெஞ்சாத குறையாக கேட்டாராம்.
எனினும் தமிமுன் அன்சாரி தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாகவே தெரிகிறது.. இதற்கு காரணம், தேர்தலுக்கு பிறகு ஒருவேளை அதிமுக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டால், அது தனக்கு தர்ம சங்கடமான சூழலை உருவாக்கிவிடுமே என்று அன்சாரி நினைக்கிறாராம்..
எனினும், திமுகவுக்காக இல்லாவிட்டாலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக இந்தியா கூட்டணியை அன்சாரி ஆதரிப்பாரா அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என்பது புரியாத புதிராக நீண்டு கொண்டிருக்கிறது.
யாருக்கு ஆதரவு: இப்படிப்பட்ட சூழலில்தான், திமுகவுக்கு தமிமுன் அன்சாரி தன்னுடைய ஆதரவை தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இத்தனைக்கும் தமிமுன் அன்சாரிக்காக, மயிலாடுதுறை தொகுதியை கூட ஒதுக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
என்றாலும், தன் கையிலுள்ள ஆதரவை எடப்பாடி பழனிசாமி நழுவவிடுகிறாரோ? என்று இப்போதே குமுறல்கள் அதிமுகவுக்குள் வெடிக்க துவங்கிவிட்டனவாம்.
பரபரப்பு: அதுமட்டுமல்ல, சிறுபான்மையினர் வாக்குகளை மையப்படுத்திதான், பாஜக கூட்டணியை எடப்பாடி உதறி தள்ளியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, அன்சாரி திமுகவுக்கு ஆதரவை தருவாரானால், அது அதிமுகவுக்கு மேலும் சரிவையே தரும் என்கிறார்கள். அனைத்து கட்சிகளிலுமே, கூட்டணி விவகாரத்தில் உச்சக்கட்ட பரபரப்புகள் நிலவி கொண்டிருப்பதால், எதுவானாலும் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications