இதுதான்டா திமுக.. ஸ்டாலின் "மார்க்" போடுறாராமே.. அவங்க பதவியும் பறிபோகுதாமே?.. நடுங்கும் புள்ளிகள்
சில திமுக மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்கிறார்கள்
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே புதுசு புதுசாக முன்னெடுப்புகளை செய்து கொண்டிருக்கிறது.. அதன் செயல்பாடுகள் பல கட்சிகளுக்கு வியப்பை தருகின்றன.. அதேசமயம், திமுகவின் வளர்ச்சிக்கும் அவைகள் பெரிதும் உதவிக் கொண்டும் இருக்கின்றன.
இந்த முறை தேர்தலில் கிட்டத்தட்ட 30 இடங்களை மிஸ் பண்ணிட்டோமே என்ற வருத்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்னும் இருக்கிறது. அதனால்தான் தேர்தலில் முக்கிய தொகுதிகளில் தோல்வி அடைந்தது ஏன்? காரணம் என்ன? என்று கேட்டிருந்தார்.
அதன்படியே காரணங்களும் லிஸ்ட் போட்டு முதல்வர் கைக்கு தரப்பட்டுள்ளது.. அந்த லிஸ்ட்டின் அடிப்படையில் களையெடுப்புகளும் நடந்து வருகின்றன..

ஸ்டாலின்
அதேசமயம், மாவட்ட செயலாளர்களின் கூட்டம் சமீபத்தில் நடந்தது.. அப்போது ஸ்டாலின் பேசும்போது, இனி தவறு செய்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை பாயும்.. மா.செ.க்கள் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

களப்பணி
எனவே, எந்த நேரத்திலும் தங்களின் பதவி பறிக்கப்படும் என்ற பீதியில் மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்கள்.. இதுபோலவே, திமுக அமைச்சரவை பதவியேற்றதும், முதல் வேலையாக அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. "யார் தவறு செய்தாலும் சரி, அவர்களின் அமைச்சர் பதவிகள் தயவுதாட்சண்யம் இன்றி பறிக்கப்படும்" என்றும் எச்சரித்திருந்தார்.

வார்னிங்
இதையடுத்து, அமைச்சர்களும் அன்று முதல் இந்த நொடி வரை சின்சியராக வேலை பார்த்து வருகிறார்கள்.. எந்த அமைச்சரையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு செயல்பாடுகள் சிறப்பாக இருந்து வருகின்றன.. ஆக, மாவட்ட செயலாளர்கள் + அமைச்சர்களுக்கு வார்னிங் தந்திருந்த நிலையில், அதில் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளதாகவே தெரிகிறது.

திமுக அமைச்சர்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு முக்கியமான விஷயம் கசிந்து வருகிறது... திமுக ஆட்சியை பிடித்து 2 மாதங்கள் ஆகிறது இல்லையா? இந்த 100-வது நாளில் திமுக அமைச்சர்களின் பெர்ஃபாமன்ஸ் பற்றி மதிப்பீடுகள் தயார் செய்கிறாராம் ஸ்டாலின்... அதாவது எத்தனை அமைச்சர்கள் இதில் பாஸ் ஆகப் போகிறார்கள் என்று இப்போதே ஒவ்வொரு அமைச்சரை பற்றியும் பெட் கட்டுகிற அளவுக்கு அறிவாலயம் தரப்பில் விவாதிக்கப்படுகிறது. இதில், ஃபெயில் ஆகும் அமைச்சர்கள் கல்தா கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது..

மாவட்ட செயலாளர்கள்
இன்னொரு விஷயம் சொல்கிறார்கள், அமைச்சர்கள் பலரும் மாவட்ட செயலாளர்களாகவும் இருக்கிறார்கள்.. அதனால் அவர்களிடமிருந்து அந்த பதவியை பறித்து விடலாம் என்றும், அதை மற்றொருவருக்கு வாய்ப்பளிக்கலாம் என்றும் கிச்சன் கேபினெட்டின் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றுள்ளனர்... கிச்சன் கேபினெட்டுக்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலரிடமும் மாவட்ட செயலாளர்கள் பதவி இருப்பதால் அது குறித்து ஸ்டாலினிடம் சொல்ல கிச்சன் கேபினெட் யோசித்து வருகிறதாம்..!
-
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ்












Click it and Unblock the Notifications