சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டிரைட்டா திமுகவுக்கே வச்ச குறி.. அதிமுகவை "இந்த" விஷயத்தில் முந்தாமல் போயிடுமோ.. பலே பாமக..!

திமுகவை வடமாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு முந்துகிறது போலும்

Google Oneindia Tamil News

சென்னை: பாமக தனது பலத்தை இழக்கவில்லை என்பது வெளிவந்து கொண்டிருக்கும் கருத்து கணிப்புகள் நிரூபித்துள்ளன.. இதனால் வடக்கு மண்டலத்தில் அதிமுக திமுகவுக்கு கடும் போட்டியை தந்துள்ளது.

இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் எனர்ஜி தரக்கூடிய ஒரே கட்சி பாமகதான்.. பாமகவை சரிக்கட்ட அதிமுக எடுத்து கொண்ட முயற்சி அளவுக்கு அதிகமானது..

இதற்கு காரணம், தமிழகத்தில் 20 மக்களவை தொகுதிகள் மற்றும் வடக்கு, மேற்கில் உள்ள சில தொகுதிகள் உள்ளிட்டவற்றில், வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கின்ற சமுதாயமாக வன்னியர்கள் எப்போதுமே திகழ்ந்து வருகிறார்கள். ஆட்சியை நிர்ணயம் செய்யக்கூடிய அளவுக்கு வாக்கு வங்கி நிரம்பியவர்கள் இவர்கள் என்பதை மறுக்க முடியாது.

 ராமதாஸ்

ராமதாஸ்

அதனால்தான், வடமாவட்டங்களில் பாமக செல்வாக்குடன் அடித்தளத்தை வலுவாக வைத்திருக்கிறது.. சமூக நீதியை முன் வைத்துதான் ஆரம்பத்தில் பாமக களம் இறங்கினாலும், அப்போது முதல் இப்போது வரை ஏற்ற இறக்கத்துடன் வாக்கு வங்கியை தக்க வைத்தும் வருகிறது.. எனினும், தங்கள் செல்வாக்கையும் பலத்தையும் மேலும் நிரூபிக்க, இடஒதுக்கீட்டு அரசியலை தூக்கி பிடித்தது.. அதில் போராடி வெற்றியும் பெற்றது.

 தென்மண்டலம்

தென்மண்டலம்

இதனால் மற்ற சமுதாயத்தினரின் அதிருப்தியை அதிமுக தலைமை வெகு எளிதாக சம்பாதித்துவிட்டது.. பாமகவுக்காக அதிமுக கொடுத்த இந்த விலை சற்று அதிகமானதே.. தென்மண்டலங்களில் இதன் அதிருப்தி அதிகமாக வெளிப்பட்டு வருகிறது.. தன்னை ஆலோசிக்காமல் முதல்வர், இந்த முடிவை எடுத்துவிட்டதாக ஓபிஎஸ் ஒரு பக்கம் புலம்பியதாக செய்திகள் கசிந்தாலும், கனகச்சிதமாகவே எடப்பாடியார் இந்த விஷயத்தை கையாண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

 வடக்கு மண்டலம்

வடக்கு மண்டலம்

இதற்கான பலனை கருத்து கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன.. கடந்த வாரம் புதிய தலைமுறை கருத்து கணிப்பை வெளியிட்டிருந்தது.. அதில் வடமாவட்டங்களில் திமுகவுக்கு வெற்றி என்ற ரீதியில் கணிப்பு வெளியாகி இருந்தது.. அதாவது தமிழகத்தில் வடக்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 19-24 இடங்கள் கிடைக்கும், ஆனால் தமிழகத்தில் வடக்கு மண்டலத்தில் திமுகவுக்கு 54-59 இடங்கள் கிடைக்கும். இதுவரை இல்லாத அளவிற்கு வடக்கு மாவட்டங்களில் திமுக அதிக இடங்களை வெல்ல போவதாக கணிப்பு தெரிவித்தது.

திமுக

திமுக

ஆனால், இந்த கணிப்பை முற்றிலுமாக ஏற்று கொள்வதற்கில்லை என்பதை நாம் அப்போதே சுட்டிக்காட்டினோம்.. நம்பும்படியாகவும் இல்லை என்பதை கூறியிருந்தோம். காரணம், திமுகவுக்கு வடமாவட்டங்களில் செல்வாக்கு இருப்பது உண்மையே.. மறுக்க முடியாது.. துரைமுருகன், ஜெகத்ரட்சகன், போன்ற வன்னிய சக்திகள் திமுகவுக்கு ஆதரவாக இருந்தாலும் பாமகவை மிஞ்ச முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்.. ஒருவேளை வேல்முருகனை நம்பியே வடமாவட்டங்களில் இந்த வெற்றியை திமுக பெறுமா என்பதும் சந்தேகம்தான்.

 கொங்கு மாவட்டம்

கொங்கு மாவட்டம்

ஆனால், நேற்றைய சத்தியம் டிவியின் கருத்து கணிப்பை எடுத்து கொண்டால், பாமக அதே பலத்தை தக்க வைத்து வருகிறது என்பது தெளிவாகிறது.. இதற்கு முக்கியக் காரணம் பாமகவாகவே இருக்க முடியும்... களப்பணியை ஆழமாக இறங்கி அந்த கட்சி பார்த்துள்ளதாக தெரிகிறது.. அதேபோல சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொங்கு மாவட்டங்களிலும் பாமகவும், அதிமுகவும் சற்று சிறப்பாகவே செயல்பட்டுள்ளன. அந்த வகையில் பாமகவின் செல்வாக்கில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை உணர முடிகிறது..

 கூட்டணி

கூட்டணி

அதுமட்டுமல்ல, திமுகவுக்கு வடமாவட்டங்களில் பாமக ஒரு செக் வைத்துள்ளதாகவே தெரிகிறது.. இந்த மண்டலங்களில் அதிமுக கூட்டணியை திமுக வென்றெடுக்குமா என்பதும் கேள்விக்குறிதான். வேண்டுமானால், அந்த பகுதியில் உள்ள முதலியார், உடையார் போன்ற சமூகத்தினர் ஏற்கனவே அதிமுக மீது அதிருப்தியில் உள்ளதாலும், விஜயகாந்த்தும் அமமுக பக்கம் சென்றுவிட்டதாலும், அந்த ஓட்டுக்கள் வேண்டுமானால் திமுக பக்கம் திரும்பக்கூடும்.. அல்லது காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களை வேல்முருகன் திமுக பக்கம் திருப்பிவிடக்கூடும்..

ஏற்றம்

ஏற்றம்

பார்த்தாலும், ஓரிரு சதவீத அளவிலேயே மாற்றத்தையும், ஏற்றத்தையும் உண்டாக்குமே தவிர, அதிமுக கூட்டணியை காலி செய்யும் அளவுக்கு திமுக அங்கு வெற்றி பெறாது என்பதைதான் இதுவரை வந்த கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. எனினும், கருத்து கணிப்புகளை அப்படியே எடுத்து கொள்ளவும் முடியாது என்பதால், இந்த நிலையும் இனி மாறலாம்.. பார்ப்போம்..!

English summary
Will MK Stalins DMK Alliance win in the Northern districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X