"இந்தியா ஒளிரும்".. பாஜகவை துரத்தும் பழைய "கெட்ட கனவு".. பதற்றத்தில் டெல்லி தலைகள்.. என்ன நடக்குது?
சென்னை: 2024 லோக்சபா தேர்தல் 2004 தேர்தல் போல மாறிவிடக்கூடாது என்று பாஜக தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம். இந்தியா ஒளிரும் போல மோடி கேரண்டி சொதப்பி விட கூடாது என்று பாஜகவின் தேசிய தலைகள் பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
2004 லோக்சபா தேர்தலில் வாஜ்பாய் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட என்டிஏ கூட்டணி இந்தியா ஒளிரும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது. டிவி தொடங்கி தெரு பிரச்சாரம் வரை இந்தியா ஒளிரும் என்ற "ஹஸ்கி" குரலில் ஒரு பிரச்சாரம் ஓடிக்கொண்டே இருந்தது.

இந்தியா ஒளிரும் பிரச்சாரம் பாஜகவின் டிரேட் மார்க் பிரச்சாரமாக இருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் இதுதான் இருந்தது. அப்போது தேர்தலை கணித்த பல கணிப்பாளர்கள் மீண்டும் வாஜ்பாய் வருவார் என்றே கூறி இருந்தனர்.
பல தேர்தல் கணிப்பாளர்கள் வாஜ்பாய் அலை இருக்கிறது என்றுதான் கணிப்புகளை கூறி இருந்தனர். பலரும் பாஜக அலை இருப்பதாகவே தேசிய அளவில் கணிப்புகளை வெளியிட்டனர். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் 145 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது.
பாஜக 138 இடங்களை வென்றது. சிபிஐ(எம்) 43 இடங்களை வென்றது. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. இப்போது "இந்தியா ஒளிரும்" பிரச்சாரம் போல மீண்டும் "மோடி கேரண்டி" பிரச்சாரம் தங்களுக்கு எதிராக திரும்புமா என்ற அச்சம் பாஜக டாப் தலைவர்களுக்கு ஏற்பட்டு உள்ளதாம். 2024 லோக்சபா தேர்தல் 2004 தேர்தல் போல மாறிவிடக்கூடாது என்று பாஜக தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
பாஜக நம்பர் கேம்: 2024 லோக்சபா தேர்தல் தொடக்கத்தில் 400 இடங்களை பெறுவோம் என்று பாஜக முழக்கம் வைக்க தொடங்கியது. ஆப் கி பார்.. சார்சோ பார் என்று கோஷம் போட்டது. அதாவது இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் என்று கோஷம் போட்டது.
பாஜக கோஷம்: ஆனால் பாஜக இப்படி கோஷமிட்டது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. 400 இடங்களை வெல்வோம் என்று அந்த கட்சியின் முழக்கம் முதல் கட்ட தேர்தலில் மிக பலமாக ஒலித்தது. ஆனால் இரண்டமாக கட்ட பிரச்சாரம் எதிலும்.. மூன்றாம் கட்ட பிரச்சாரத்திலும் அந்த சத்தம் கேட்கவே இல்லை.
உதாரணமாக மோடி கடைசியாக ராஜஸ்தானில் செய்த மூன்று பிரச்சாரத்திலும் 400 என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதை மட்டுமே கூறினார். மாறாக இலக்கு 400 என்பதை அவர் எங்குமே குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை.
கோஷம் இல்லை: லோக்சபா தேர்தலில் கடந்த 3ம் கட்ட தேர்தலில் இருந்து நடக்க உள்ள 7ம் கட்ட தேர்தல் வரை எங்கும் பிரச்சாரத்தில் பாஜக 400 இலக்கு என்பது தொடர்பான சார்சோ பார் கோஷத்தை எழுப்பவில்லை.
பாஜகவின் 400 இலக்கு அந்த கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளது. இடஒதுக்கீட்டை பாஜக நீக்கும், இறையாண்மைக்கு எதிராக அரசியல் சாசனத்தை பாஜக மாற்றும் என்றெல்லாம் மக்கள் இடையே எதிர்ப்பு வந்தது. அதோடு இல்லாமல் எதிர்கட்சிகளுக்கு பலம் இல்லை என்றால் பாஜக நினைத்ததை எல்லாம் செய்யும். அது மக்களுக்கே எதிராக செல்லும் என்று மக்கள் இடையே அச்சம் எழுந்தது.
அதோடு பாஜக 400 இடங்களை வெல்ல வாய்ப்பே இல்லை என்றும் கணிப்புகள் வர தொடங்கின. இதன் காரணமாக தற்போது பாஜக 400 இலக்கு என்பதற்கான சார்சோ பார் கோஷத்தை எழுப்புவதை நிறுத்தி உள்ளது. அதோடு 370 என்ற கோஷத்தையும் பாஜக எழுப்பவில்லை.
மேலும் அரசியல் ஆராய்ச்சியாளர் யோகேந்திர யாதவ், தற்போதைய அரசியல் நிலவரப்படி பாஜக 250க்கும் குறைவான இடங்களையே பெறும்.. இறுதிக்கட்டத்தின் போது உ.பி. மற்றும் பீகாரில் இருந்து கடைசியாக பாஜக எதிர்ப்பு வாக்குகள் அதிகம் ஆகும் பட்சத்தில் பாஜகவிற்கு மட்டுமல்ல என்டிஏவுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். என்டிஏவை விட இந்திய கூட்டணி அதிக இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும்.
பாஜக மெஜாரிட்டி தனித்து பெறுவதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவாகவே உள்ளன. சிலர் சர்வே ரீதியாக பொய்களை சொல்கின்றனர்., என்று அரசியல் ஆராய்ச்சியாளர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
பாஜக கேம்பில் திக்திக்: இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவிற்கு மோடி கேரண்டி பிரச்சாரம் எதிராக திரும்பி விடுமோ என்ற குழப்பமும், அச்சமும் ஏற்பட்டு உள்ளதாம். மோடி அலை இப்போதும் இருக்கிறது.. ஆனால் தனியாக மெஜாரிட்டி எடுக்கும் அளவிற்கு அலை இருக்கிறதா என்ற குழப்பம் பாஜக கேம்பில் ஏற்பட்டு இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications