சின்னம் போனதால் வந்த சிக்கல்.. நாம் தமிழருக்கு பெரிய சவால்.. சீமான் மட்டும் இதை சமாளிச்சிட்டாருன்னா!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் சின்னம் பிரச்சனை காரணமாக அந்த கட்சி பழைய வாக்கு வங்கியை தக்க வைக்க இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார்.

தமிழ்நாட்டில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.
ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில்தான் அந்த கட்சியின் கரும்பு சின்னம் பறிபோய் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக கிட்டத்தட்ட மாறி இருந்த இந்த சின்னம் தற்போது கர்நாடகாவில் இருக்கும் கட்சிக்கு சென்றுவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கூட, சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது.
உங்களுக்கு இந்த சின்னம் வேண்டும் என்றால் நீங்கள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருக்க வேண்டும். அப்போது தாமதம் செய்துவிட்டீர்கள். இப்போது கேட்டு என்ன பலன். அதோடு இந்த சின்னம் உங்களுக்கு ராசியான சின்னம் போலவும் தெரியவில்லை. என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019 லோசபா தேர்தல் தொடங்கி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் போட்டி: நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சின்னத்தோடு அந்த கட்சி தற்போது தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாம். பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டி போட முடிவு செய்துள்ளது., தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் நாம் தமிழர் வாக்குகள் வெகுவாக சிதறும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் பலரும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழருடன் இணைத்து பார்க்கும் நிலையில் கிராமங்களில் பலரும் இந்த கட்சியின் சின்னத்தை பார்த்து நாம் தமிழர் என்று நினைத்துக்கொண்டு மாறி வாக்களிக்கும் நிலை ஏற்படலாம்.
வாக்கு வங்கி: நாம் தமிழர் கட்சியின் சின்னம் பிரச்சனை காரணமாக அந்த கட்சி பழைய வாக்கு வங்கியை தக்க வைக்க இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் கணிப்புகளில் நாம் தமிழருக்கு 8 சதவிகிதம் வரை வாக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. உதாரணமாக தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் உங்கள் தொகுதியில் வெற்றிபெற போவது யார் ? என்ற கேள்விக்கு.
திமுக 43 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்.
அதிமுக 33 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
பாஜக 12 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
நாம் தமிழர் 8 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
மற்றவை 4 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
தந்தி டிவி சார்பாக 2024ல் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு.
திமுக 42 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
அதிமுக 30 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
பாஜக 13 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
நாம் தமிழர் 8 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
மற்றவை 7 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்
நாம் தமிழர் அடித்து தூக்குகிறது; 2019 மக்களவைத் தேர்தலில் கட்சியின் அதிகபட்ச வாக்கு எண்ணிக்கையான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் எச்.மகேந்திரனுக்கு கிடைத்தது. அங்கே நாம் தமிழர் 84,855 வாக்குகளைப் பெற்றது. அதேபோல் V. ஜெயின்டீன் கன்னியாகுமரி தொகுதியில் 17,069 வாக்குகளைப் பெற்றார். 2019 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் மொத்தம் 1,645,185 வாக்குகளைப் பெற்றது. மாநிலத்தில் பதிவான 42,083,544 வாக்குகளில் 3.909 சதவீதம் வாக்குகளை நாம் தமிழர் பெற்றது.
தந்தி டிவி கணிப்பில் இந்த முறை நாம் தமிழர் 8 சதவிகிதம் பெறும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019 தேர்தல்:
திமுக கூட்டணி 53.15%
திமுக 33.52%
காங்கிரஸ் 12.61%
அதிமுக கூட்டணி 30.57%
அதிமுக 19.39%
பாஜக 3.66%
பாமக 5.36%
தேமுதிக 2.16%
நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளை 2019ல் நாம் தமிழர் பெற்றது. அப்படி இருக்க.. தற்போது சின்னம் காரணமாக ஏற்படும் குழப்பத்தால் நாம் தமிழர் இதே வாக்கு வங்கியை தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications