விஷாலை காதலிக்கவில்லை.. அரசியலுக்கு வருவது உறுதி.. மனம் திறந்தார் வரலட்சுமி சரத்குமார்!
Recommended Video

சென்னை: நடிகர் விஷாலை திருமணம் செய்யப்போவதில்லை என்றும், அரசியலுக்கு வருவது உறுதி என்றும், நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
'ஒன்இந்தியாவிற்கு' வரலட்சுமி சரத்குமார் அளித்த பிரத்யேக பேட்டியில் இத்தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் கூறியதாவது:
நடிகர் விஷால் என்க்கு நெருக்கமான நண்பர். எல்லா விஷயங்களையும் இருவரையும் ஷேர் செய்து கொள்வோம்.

பெண் பார்ப்பேன்
ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மையில்லை. விஷாலுக்கு, திருமணத்திற்கு பெண் பார்த்தால், நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்றார்.

மக்கள் கையில் முடிவு
அரசியல் எதிர்காலம் குறித்து கேட்டபோது, தமிழகத்தில் அரசியல் காலியிடம் உள்ளது உண்மைதான். அந்த காலியிடத்தை நிரப்பத்தான், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசியலுக்கு வருவேன்
ஜெயலலிதா சிறப்பான ஆளுமை மிக்க தலைவர். இதுவரை அவரை 3 முறை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் அவர் எனக்கு உந்து சக்தியாக உள்ளார். சிறப்பான ஆட்சியாளர், சிறப்பான கல்வியாளர். தனியொரு பெண்மணியாக மொத்த மாநிலத்திலும் ஆளுமை செலுத்தினார். இன்னும் 5 வருடங்களில், அரசியலுக்கு வருவேன்.

சரத்குமார் கட்சி இல்லை
எனது தந்தை அவரது கட்சியில் சேருவதற்கு ஏற்கனவே அழைப்புவிடுத்தார். நான்தான் மறுத்துவிட்டேன். நான் தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வரமாட்டேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை பிறகு தெரிவிக்கிறேன். இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications