ரவீந்திரநாத் போடும் மாஸ்டர் பிளான்.. ஒர்க்அவுட் ஆகுமா.. தடுமாறுகிறதா ஓபிஎஸ் டீம்.. கிளம்பிய விவாதம்
ஓபி ரவீந்திரநாத் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, ஓபிஎஸ் தரப்பு என்ன செய்ய போகிறது
சென்னை: ரவீந்திரநாத் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, ஓபிஎஸ் தரப்பு கடுமையான அதிர்ச்சியில் உள்ளார்களாம்.. இதையடுத்து, அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனைகளும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் பிரச்சனை வெடித்துவிட்டது. இதனால் 2 அணிகள் பிரிந்து கிடக்கின்றன.. எடப்பாடி பழனிசாமி தரப்பு சிலரையும், ஓபிஎஸ் தரப்பு சிலரையும் மாற்றி மாற்றி கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.
இருவரின் அதிகார சண்டையும் இதுவரை முடிவுக்கு வராதநிலையில், கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கும் நடவடிக்கையும் தொடர்ந்தபடியே வருகிறது.

ரவீந்திரநாத்
அந்தவகையில் நேற்று எடப்பாடி பழனிசாமி சார்பில் எம்பி ரவீந்திரநாத், அவருடைய சகோதரர் ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.. ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் சையது கான், ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் , இளையமகன் ஜெயபிரதீப் ஆக்கியோர் உட்பட 17 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியானது.

கோமாளி
இந்த நீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானதுமே, எம்பி ரவீந்திரநாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.. அதில், "இரட்டை இலையை அங்கீகரித்த ஒரே ஒரு வெற்றி.. அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி... கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் எனக்கு கொடுத்த வரம்.. அதை நீக்கவும்.. ஒதுக்கவும் .. எடுக்கவும்.. கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்... கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகு தூரம் !!

எடையில்லா பாடி
பதவி கொடுத்தவர்களுக்கே.. பாதகம் விளைவித்த இடையில் வந்த 'எடை'யில்லா 'பாடி'க்கு விடை கொடுக்க வேண்டி வந்துவிட்டது நேரம்!! ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களே ஒன்றிணைவோம்... ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்..." என்று பதிவிட்டிருந்தார்.. ஏற்கெனவே ஓபிஎஸ், தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லாது என்றும், அதிமுக இப்போதும் தன்னிடம்தான் இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்துக்கு லெட்டர் அனுப்பியிருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்திரநாத்
நேற்றைய இரவு, அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த அரசியல் நடவடிக்கைகள் மிகுந்த பரபரப்பையும், விவாதத்தையும் உண்டுபண்ணி உள்ளது. ரவீந்திரநாத்தை விலக்கி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை, எடப்பாடி பழனிசாமி அறிவிக்கின்ற எந்த அறிவிப்பும் கழக சட்டப்படி செல்லாது என்று ஓபிஎஸ் மீண்டும் ஆவேசமாகி உள்ளார்.. 38 இடங்களில் போட்டி போட்டு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று தேனி நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளோம்... இப்படி விலக்கி இருப்பது சரியா? சர்வாதிகாரத்தின் உச்சநிலைதானே இது? என்று ஓபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு இதுவரை எடப்பாடி தரப்பில் பதில் இல்லை.

கேலி கிண்டல்
அரசியல் களத்தில் மனசாட்சியின்படி, உண்மையாகவும், நேர்மையாகவும் மக்கள் பணி செய்கிறோம்... யாருடைய நலனுக்காக உடல் வருத்தி போராடுகிறோமோ, அவர்களாலேயே கேலியையும், கிண்டலையும், பொய்களையும், விமர்சனங்களையும், சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் எதிர்கொள்ளும்போது, என்ன தான் அரசியல் பயணத்தில், மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத் தான் செய்கிறது... கடந்த, 2001ல் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த பின், கட்சி சொந்தங்கள் யாரையும், பொது வெளியில் விமர்சிக்கக் கூடாது என, கொள்கை முடிவு எடுத்ததால் அமைதியாக இருக்கிறேன் என்று ஜெயபிரதீப் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

ஜெயபிரதீப்
ஒருபக்கம் ரவீந்திரநாத், மறுபக்கம் ஜெயபிரதீப், இதற்கு நடுவில் ஓபிஎஸ் என 3 பேருமே ஒரே நேரத்தில் கொந்தளித்துள்ளது, ஓபிஎஸ் தரப்பின் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.. அதேசமயம், ஒற்றை தலைமை விவகாரம் மட்டுமே தலைதூக்கி வரும் நிலையில், இவர்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி ஏன் நீக்க வேண்டும்? என்றும் பரவலான கேள்வி எழுந்து வருகிறது. இதற்கு சில காரணமும் சொல்லப்படுகிறது.

பாஜக தலைவர்கள்
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர்.. பாஜகவின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றவர்.. ஓபி ரவீந்திரநாத், எம்பி ஆனது முதலே பாஜகவின் அபிமானியாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.. ஒவ்வொரு முறையும் இவர் பாராளுமன்றத்தில் பேசும்போதும், இவர் பாஜக எம்பியா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு, மத்திய அரசை புகழ்ந்து பேசுவதும், அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. ஆனால், இந்த முறை அதிமுகவில் தகராறு வெடித்துள்ள நிலையில், பாஜக அதிமுக விவகாரத்தில் தலையிடாமல் உள்ளது.

இழுபறி
ஓபிஎஸ் டெல்லி சென்றும், இப்போதுவரை மேலிட தலைவர்கள் பாராமுகத்துடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்தசூழலில்தான், பிரதமர் மோடி முன்னிலையில், ரவீந்திரநாத் பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பாஜகவும் அவரை இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும், சில தகவல்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கசிந்தன.. ஆனால், மத்திய இணையமைச்சர் பதவியை ரவீந்திரநாத் கேட்பதால், இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுவதாகவும் கூறப்பட்டது.. ஓபிஎஸ்ஸை பதவியில் இருந்து நீக்கும்போது, எந்நேரமும், ஓபிஎஸ் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் எடப்பாடி தரப்பு நீக்கும் என்ற கணக்கு ஏற்கனவே அதிமுகவில் சுற்றி வந்து கொண்டிருந்தது..

ரவீந்திரநாத்
அந்த சமயத்தில்தான், ரவீந்திரநாத் இப்படி ஒரு பேச்சுவார்த்தையை டெல்லியில் தொடங்கியதாகவும் செய்திகள் வந்தன.. சசிகலா தரப்புடன் ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு வலுவாக கிளம்பி உள்ளதோ, அதே அளவுக்கு பாஜகவில் ரவீந்திரநாத் எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என்ற பேச்சு, தற்போது மீண்டும் கிளம்பி உள்ளது.. இவை எல்லாம் யூகங்களாகவே நின்றுவிடுமா? அல்லது அதிமுக அரசியலில் மாற்றத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இருக்குமா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.. பார்ப்போம்..
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications