திமிங்கலம் தவெகவுடன் இணையுதா? அதுவிடுங்க, மா.செ கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் தரும் ஷாக்?
சென்னை: அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக தொண்டர்கள் மீட்புக் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான ஓபிஎஸ், இன்று சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்... இதற்கான அழைப்பையும் ஓபிஎஸ் விடுத்திருந்த நிலையில், எதற்காக இந்த கூட்டம்? இன்று ஓபிஎஸ் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடனான ஏற்பட்டு கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் காரணமாக விரிசல் ஏற்பட்ட நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம்.

இதையடுத்து, ஓபிஎஸ்ஸூடன் அதிமுகவின் சீனியர்கள் பலர் சென்றனர்.. ஆனால், ஓபிஎஸ்ஸுன் பின்னால் அணிவகுத்து நிற்பதைவிட, மாற்று கட்சியில் இணைவதே மேல் என்று பல தலைவர்கள் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவி கொண்டிருக்கிறார்கள்.
இப்போதைக்கு ஒரத்தநாடு வைத்திலிங்கம், முதுகுளத்தூர் ராமர் எம்பி உள்ளிட்டோர் மட்டுமே ஓபிஎஸ்ஸூடன் நிற்கிறார்கள்... இதில் வைத்திலிங்கம் கட்சி மாறக்கூடும் என்ற பேச்சு சமீப நாட்களாகவே கசிந்து கொண்டிருக்கிறது.. இதுவரை அதற்கு எந்த மறுப்பையும் அதிகாரப்பூர்வமாக வைத்திலிங்கம் தரப்பில் வெளியாகவில்லை.
அதிமுக ஒருங்கிணைக்க முயற்சி?
இதனிடையே, ஓபிஎஸ், தினகரனை கட்சிக்குள் விடவே மாட்டேன் என்று உறுதியாய் உள்ளார் எடப்பாடி பழனிசாமி... எனினும் இவர்கள் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகளை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது..
அதேபோல அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஓபிஎஸ்ஸும் களமிறங்கி உள்ளார்.. இதே கருத்துடன் செங்கோட்டையனும் பயணித்து வருகிறார்.
நேற்றைய தினம் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எங்களுக்கு என தனிக்கொள்கை உள்ளது. அந்த கொள்கைக்கு சிதைவு ஏற்படாமல், கூட்டணியில் எங்களுக்கும் வாய்ப்பளித்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவோம்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
பிரிந்து சென்றோர், வெளியே அனுப்பப் பட்டோர் மீண்டும் அதிமுகவுடன் இணைவதற்கு பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உடனான சந்திப்பும் நடக்கிறது; 3 பேரும் தினமும் பேசுகிறோம்.. என்னை பலவீனப்படுத்தி, தனிமைப்படுத்துவது ஒருபோதும் நடக்காது. தனிப்பட்ட முறையில், நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை என்பதால் அதனால், இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறியிருந்தார்.
இன்று சென்னை ஓட்டலில் கூட்டம்
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று ஓபிஎஸ் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை இன்று கூட்டியிருக்கிறார்.. சென்னை எழும்பூரில் பாந்தியன் சாலையில் இருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே இதே ஓட்டலில் பலமுறை ஆலோசனை கூட்டங்களை ஓபிஎஸ் நடத்தி முடித்திருக்கும் நிலையில் இன்று மீண்டும் மா.செ. கூட்டத்தை கூட்டி உள்ளார்.
ஓபிஎஸ்ஸின் புதிய கூட்டணி ?
ஆனால் இது எதற்கான கூட்டம் என்பது உறுதியாக தெரியவில்லை.. வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கான உத்திகள் குறித்தும், தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்தும் ஓபிஎஸ் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல வாய்ப்புள்ள கூட்டணியில் இணைவது குறித்தும் இன்று நிர்வாகிகளுடன் பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா, தினகரன், செங்கோட்டையனை சந்திப்பது குறித்து ஆலோசிக்கப்படும்
என்று தெரிகிறது.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே அமமுகவில் ஓபிஎஸ் இணைய இணைந்து, விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என்ற பேச்சு உள்ளது.. எனவே அதுகுறித்தும் இன்று விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications