Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை அட்டைதாரர்களுக்கு.இனி பாமாயில் கிடைக்காதா? ரேஷனில் மாற்றம் வருதா? தமிழக அரசின் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகள், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வைத்தபடியே உள்ளனர்.. அதற்கேற்றவாறு, ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுவது குறித்த பேச்சு பல மாதங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது..

Will Peanut oil Coconut Oil be provided by TN Government and Big request to provide Coconut Oil in the Tamil Nadu Ration Shops

என்ன காரணம்: அதற்கேற்றவாறு, உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளும் இதே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.

தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், தேங்காய் விவசாயிகளிடம் இருந்தே, தேங்காய்கள் கொள்முதல் செய்து இந்த விநியோகிக்க வேண்டும், கொப்பரைக்கு உரிய விலை வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தன.

சரிவுகள்: காரணம், கடந்த வருடத்திலிருந்தே தேங்காய் விலை சரிவை சந்தித்துவருகிறது.. இதனால், தென்னை விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். அதனால்தான், கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்று வலியுறுத்தியபடியே இருந்தனர்..

நாலாபக்கமிருந்தும் நெருக்கடிகள் வருவதால், ரேஷனில் தேங்காய் எண்ணெய்யை வழங்க, விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வராத நிலையில், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

ஆர்ப்பாட்டம்: அதுமட்டுமல்ல, திமுக அரசு ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தியும் கிளம்பியது.. இந்நிலையில், திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்..

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் நிறுவனத் தலைவர் ஈசன் மற்றும் செல்லத்துரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து சொன்னதாவது:

வாக்குறுதி: "தேங்காய், கடலை, எள் இப்படி எல்லாமே தமிழகத்திலேயே தாராளமாக கிடைக்கிறது.. அப்படியிருக்கும்போது, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்களை விற்பனை செய்யாமல் உடலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்க கூடிய பாமாயில் எண்ணெயை அரசாங்கம் விற்பனை செய்வது ஏன்? திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது என்னாச்சு?

நியாய விலை கடைகளில் மானிய விலையில் பாமாயில் விற்பனை செய்வதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும். பாமாயில் விற்பனை செய்வதால் அரசுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசுக்கு பல்லாயிரம் கோடி நஷ்டத்தை தவிர்க்க எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

ஸ்டாலின்: இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்... தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், காவிரி நீர் பற்றாக் குறை ஏற்படுவதால், தென்னை விவசாயத்தை, பலரும் நம்பியுள்ளனர். அதனால் இந்த பிரச்சனையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர். முன்னதாக, கோஷம் எழுப்பிய விவசாயிகளை, வாகனத்தில் ஏற்றி கோமலீஸ்வரன் பேட்டை சமுதாய கூடத்தில், போலீசார் அடைத்து வைத்து, பிறகு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+