எம்ஜிஆர் எனக்குத்தான்.. சொந்தம் கொண்டாடுவதெல்லாம் சரித்தான்.. ஆனால் மக்கள் ஏத்துப்பாங்களா?!
சென்னை: எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடும் உரிமை கமலுக்கு இருக்கும் நிலையில் அவரை எம்ஜிஆராகவே மக்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல் என இல்லை அதிமுகவினரே சொந்தம் கொண்டாடினாலும் அவர்களை எம்ஜிஆராக மக்கள் பாவிப்பார்களா?
காமராஜர் ஆட்சியை கொடுப்போம். எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்போம். நல்லாட்சியை கொடுப்போம், லஞ்ச லாவண்யமற்ற ஆட்சியை கொடுப்போம்........ இவையெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் ஆகும்.
காமராஜர், நல்லாட்சி, லஞ்ச லாவண்யமற்ற ஆட்சி- இதற்கெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என கூறும் கமலுக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

மற்ற கட்சிகள்
அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆரின் பெயரை மற்ற கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் கமல்ஹாசனோ எம்ஜிஆர் மக்களின் திலகம், எந்த கட்சியின் சொத்தும் அவர் அல்ல என்கிறார். இப்படியான சூழலில் யார்தான் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட உரிமை உள்ளது?

கமல்
தற்போதைய அரசியல்வாதிகளில் யாருக்குமே எம்ஜிஆருடன் நெருக்கமே கிடையாது. அதிமுக நிர்வாகிகளே கூட எம்ஜிஆரை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் எம்ஜிஆருடன் மிகவும் நெருக்கமாக பழகியவர்களில் ஒருவர் என்ற முறையில் கமலை கூறலாம்.

எம்ஜிஆர் மடியில் உட்கார்ந்து
சிறு வயது முதலே எம்ஜிஆரின் மடியில் உட்கார்ந்து அவர் கூறும் அறிவுரைகளை கேட்டு வளர்ந்தவர். இதனால் எம்ஜிஆரை உரிமை கொண்டாடுவதில் கமலுக்கு உரிமை உள்ளது. இதை யாரும் தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது. பொது வாழ்க்கைக்கு வந்தவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைக்க முடியாது.

அண்ணா
காந்தி, காமராஜர், ராஜாஜி, நேரு, கக்கன், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானவர்கள். எனவே எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட கமலுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் மக்கள் அவரை எம்ஜிஆராக ஏற்றுக் கொள்வார்களா என்பது போக போகத்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications