சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மேட்டருக்கு" வந்த பாமக.. மீண்டும் ஜெயிச்சா 3 அமைச்சர்களாம்.. குழம்பிபோன அதிமுக.. இப்படி ஒன்னு ஓடுது

அரசு அதிகாரிகளிடம் எடப்பாடியார் போன் போட்டு பேசினாராம்

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் 2 நாளில் ரிசல்ட் வரும் பரபரப்பில் தமிழகம் உள்ள நிலையில், அதிமுக - பாமக கூட்டணி குறித்த ஒரு முக்கியமான விஷயம் ஓடிக்கொண்டிருக்கிறது..!

இந்த முறை யார் அரியணை ஏற போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்துள்ளனர்.. இதுவரை வெளிவந்த கருத்து கணிப்புகளில் திமுகதான் வெற்றியை சுவைக்க போகிறது என்று பெரும்பாலானோர் சொல்லிவிட்டனர்.

தமிழகத்தில் ஒரு பக்கம் இடி மின்னலோடு மழை... இன்னொரு பக்கம் வெயில் சுட்டெரிக்கும் தமிழகத்தில் ஒரு பக்கம் இடி மின்னலோடு மழை... இன்னொரு பக்கம் வெயில் சுட்டெரிக்கும்

கள நிலவரங்களும் இதைதான் வெளிப்படுத்தின.. ஐபேக் டீமும் இதைதான் சொல்லியிருந்தது.. அவ்வளவு ஏன், திமுகவுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் சில ஊடகங்களும்கூட, திமுகவுக்குதான் மெஜாரிட்டி என்ற கணிப்பை பதிவு செய்திருந்தது.

 அதிமுக

அதிமுக

இவ்வளவு தகவல்கள் வெளிப்படையாக இருந்தும், கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "ஓட்டு போட்ட அன்றைக்கு மாம்பழக் கட்சி 13 இடத்துல ஜெயிச்சிடும்னு தகவல் கேட்டு பலருக்கும் எரிச்சல் எனக்கு கிடைத்திருக்கிற தகவல்படி மாம்பழக் கட்சி 16 முதல் 18 இடங்களில் ஜெயிக்குமாம். மே 2ஆம் தேதி இது நிஜமாகும் போது பலருக்கும் இன்னும் அதிகமா எரியும்" என்று ட்வீட் போட்டிருந்தார்.

 ராமதாஸ்

ராமதாஸ்

16 முதல் 18 வரை பாமக ஜெயிக்குமா? எந்த அடிப்படையில் இவ்வளவு நம்பிக்கையுடன் ராமதாஸ் பேசுகிறார் என்று அப்போதே பல விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்தவாறே இருந்தன.. இந்நிலையில்,தான் மற்றொரு தகவல் கிளம்பி உள்ளது.. இப்போது அமைய போகும் அமைச்சரவையில் பாமக இடம்பெறபோவதாக அந்த கட்சியினர் சிலர் சொல்லி வருகிறார்களாம்.. இது திமுகவுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கே தூக்கி வாரிப்போட்டுள்ளதாம்..

பாமக

பாமக

அதாவது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 அமைச்சர் பதவிகளை பாமகவுக்கு ஒதுக்குமாறு பாமக தலைமை, அதிமுக தலைமையிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாம்.. எப்படியும் அதிமுகதான் ஆட்சியை பிடிக்க போவதால், ஆட்சி அமைந்தவுடன் அமைச்சராகிவிடுவோம் என்று பாமகவின் முக்கிய வேட்பாளர்கள் பூரித்து போய் சொல்லி வருகிறார்களாம்.

பதவி

பதவி

இதை கேட்ட வடமாவட்ட அதிமுக அமைச்சர்கள், "நாங்களே ஜெயிப்போமான்னு தெரியல.. அப்படியே ஜெயிச்சாலும் அமைச்சர் பதவி கிடைக்குமான்னு தெரியல.. இதுல இவங்க வேற" என்று நொந்து கொண்டுள்ளார்களாம்.. திமுக தரப்பில் அமைச்சர்கள் லிஸ்ட் தயாராகிவிட்ட நிலையில், அடுத்த சபாநாயகர் இவர்தான் என்று முடிவெடுத்துவிட்ட நிலையில், இவைகளையெல்லாம் திமுக அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறதாம்..!

English summary
Will PMK ADMK Win in the Assembly Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X