சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓஹோ.. ஸ்டாலின் ஓகே சொன்னது இதுக்குதானா?.. இப்ப "அங்கே" இருந்து தூது வருதாமே.. ஒர்க் அவுட் ஆகுமா?

திமுகவுடன் பாமக கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக உள்ளாட்சி தேர்தலுக்கு மும்முரமாக தயாராகி கொண்டிருக்கிறது.. ஆனால், அது யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பதுதான் பெரிய சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலேயே எப்படியாவது 70 சதவீத வெற்றியை திமுக பெற நினைத்தது.. ஆனால், பாதி சதவீதத்தையே எட்டி ஜஸ்ட் பாஸ் போல ஆகிவிட்டது.

அதனால், உள்ளாட்சி தேர்தலில் விட்டதை பிடிக்க திமுக ஆர்வம் காட்டி வருகிறது.. மாவட்ட செயலாளர்கள் இதற்காகவே தினமும் கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. களப்பணிகள் தீவிரமாகி கொண்டிருக்கின்றன.

 'வரும் காலத்தில் மேலும் பல பதக்கங்களை பெற வாழ்த்துகள்..' சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 'வரும் காலத்தில் மேலும் பல பதக்கங்களை பெற வாழ்த்துகள்..' சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வடமாவட்டம்

வடமாவட்டம்

உள்ளாட்சி தேர்தல் நடக்க போவது பெருவாரியான வடமாவட்டங்களில்தான்.. இப்படிப்பட்ட சூழலில் வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக அமல்படுத்தியது அரசியல் நோக்கத்திற்காகவா? என்ற சந்தேமுகம் எழுந்து வருகிறது.. உண்மையை சொல்ல போனால், ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலின் இதனை அமல்படுத்தவில்லையாம்..

 ஆளுநர் உரை

ஆளுநர் உரை

ஆளுநர் உரை விவாதத்தின்போதுகூட, பாமக தரப்பில், வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் என்னாச்சு என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடனும், அதிகாரிகளுடனும் பேசிவிட்டு அறிவிப்பதாக சொல்லி இருந்தார்.. ஒருவேளை அரசியல் நோக்கத்திற்காக என்றால், ஆட்சிக்கு வந்ததுமே, அதை அமல்படுத்தியிருப்பார்.. ஆனால், அவசரப்படவில்லை.. அதேசமயம், அதிமுக நிறைவேற்றியதையே, நாமளும் அமல்படுத்த வேண்டுமா என்ற குழப்பத்திலும் ஸ்டாலின் இருந்தாராம்.

குழப்பம்

குழப்பம்

இதற்கு முக்கிய காரணம், ஒரு சமூகத்துக்கு ஆதரவு தந்தால், மற்றவர்களுக்கு அதிருப்தி தோன்றிவிடுமே என்பதால்தான்.. (இதுதான் இந்த முறை தேர்தலில் அதிமுகவின் தோல்வியில் எதிரொலித்தது).. இதற்காகவே ஸ்டாலின் சட்ட நிபுணர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசித்தாராம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும், நடக்க போகும் தேர்தலில் திமுகவுக்கு இதனால் சாதகம்தான் நடக்கும் என்று, என்று அவர்கள் விளக்கம் தந்த பிறகே ஓகே சொன்னாராம்..

தூது

தூது

இப்போது விஷயம் என்னவென்றால், டாக்டர் ராமதாஸ் படுகுஷியில் இருக்கிறார்.. பலவருட போராட்டத்தை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்து, பலத்த ஆதரவுடன் இருக்கிறார்.. அதேசமயம், சத்தமில்லாமல் பாமக சார்பில் திமுக தரப்பிலும் தூதுவிட்டு வருகிறார்களாம்.. சீட் பேரமும் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.. அதற்கேற்றபடி சமீப காலமாக அன்புமணியும், ராமதாஸூம் மாறி மாறி திமுக அரசை புகழ்ந்தும் போற்றியும் வருவது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    மருத்துவ படிப்பில் OBC-க்கு 27% இட ஒதுக்கீடு.. Twitter-ல் Stalin-க்கு நன்றி சொல்லும் வட இந்தியர்கள்!
     உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    ஆனால், திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முயன்று கொண்டிருக்கிறது.. அவர்களுக்கும் வடமாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.. ஒருவேளை பாமக உள்ளே வந்தால், தேமுதிக இந்த முறை உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கக்கூடும்.. ஒருவேளை பாமகவுக்கு சீட் பேரம் ஓகே ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்து கழண்டு கொள்ளவும் தயாராகிவிடும் என்கிறார்கள்.. எது நடக்க போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்..!

    English summary
    Will PMK alliance with DMK in the Local Body Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X