நேரடியாக வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு ரூ.1000? அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: பொங்கல் பரிசுத் தொகையை ஏன் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தக் கூடாது என்று சமீபத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகை இல்லாமல், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை என 21 பொருட்களைக் கொண்ட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் மற்ற பொருட்கள் எதுவும் இல்லாமல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டார்.

பொங்கல் பரிசு
அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் இன்று முதல் நடைபெறுகிறது. ரேஷன் ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று பொங்கல் பரிசுக்கான டோக்கனை வழங்கி வருகின்றனர். பொங்கல் பரிசுத் தொகையைச் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 9ஆம் தேதி தொடங்கி வைக்கும் நிலையில், மற்ற மாவட்டங்களில் மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றம்
இதற்கிடையே தஞ்சாவூர் சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் பொங்கல் பரிசு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்குப் பொங்கல் பரிசுப் பொருட்களைத் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக் கோரி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று இது தொடர்பான விசாரணை நடைபெற்ற போது மனுதாரர் தரப்பில், ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத் தொகையைச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வங்கிக் கணக்கில்
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, பொங்கல் விழாவுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமா என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் நடந்து வருவதைக் குறிப்பிட்ட நீதிபதி, அதேபோல ரேசன் கார்ட் உடன் வங்கிக் கணக்கை இணைக்கலாம் என்றும் அதன் பின்னர் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே எனக் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்த தமிழக அரசு பதிலளிக்கக் கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

அமைச்சர் விளக்கம்
இந்தச் சூழலில் இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 293ஆவது பிறந்த நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக அரசு சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வாய்ப்பில்லை
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், "பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 1000 வங்கியில் கணக்கில் செலுத்த வாய்ப்பு இல்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி நியாய விலை கடைகளில் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பிற்காக கரும்புகள் வெளி மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படாது. தமிழகத்தில் இருந்து தான் கரும்புகள் கொள்முதல் செய்யப்படும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா பாதிப்பால் இருந்தது. இதன் காரணமாகவே பொங்கல் தொகுப்பில் ரூ 5000 வழங்க வேண்டுகோள் விடுத்தனர்.

5000 ரூபாய்
இப்போது கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது கொரோனா பாதிப்பு மோசமான சூழ்நிலை இல்லை.. தொடர்ந்து கால சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து துறைகளும் நவீனமாக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் கூட்டுறவுத்துறையும் நவீனமாக்கப்படும்.. நஷ்டத்தில் இயங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலைமையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications