"துக்ளக்" படிப்பவங்க அறிவாளின்னு சொன்னாரே ரஜினி.. இந்த வருஷமும் பேசுவாரா!
சென்னை: ரஜினிகாந்த் ஸாரி சொல்லி விட்டுப் போய் விட்டார்.. இருந்தாலும் அவரை விட்டு விட யாருக்கும் மனமில்லை போலும்.. அவரையே சுற்றிச்சுற்றி வருகிறார்கள். காரணம், அந்த அளவுக்கு அவர் ஏற்படுத்தி வைத்து விட்டுப் போயிருக்கும் தாக்கம்தான்.
இப்பக் கூட பாருங்க.. துக்ளக் ஆண்டு விழா வருகிற 14ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவார்னு சொன்னாங்க. ஆனால் கடைசியில் அது ரத்து செய்யப்பட்டு விட்டது. அவருக்குப் பதில் நட்டா வரலாம் என்று சொல்கிறார்கள்.
இப்ப அது இல்லை மேட்டர்.. ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரா வர மாட்டாரா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ரஜினியின் துக்ளக் பேச்சு
காரணம் இருக்கு.. கடந்த வருடம் நடந்த துக்ளக் பொன் விழா ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சை இப்ப வரைக்கும் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அது வைரலானது.. விமர்சிக்கப்பட்டது.. விவாதமும் ஆனது. அவர் தனது பேச்சின்போது திமுகவை வம்பிக்கிழுத்திருந்தார். அதாவது "முரசொலி வைத்திருப்பவர் திமுக காரர்.. அதேபோல துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள்" என்று கூறினாரே அந்த பேச்சுதான் அது.

முரசொலி பதிலடி
இதற்கு முரசொலி பதிலடி கொடுத்தது.. "முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவன் என்று பொருள். எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ எண்ணம் கொண்டவன் என்று பொருள். ஒடுக்கப்பட்ட சமூகத்தவன், தன்னை ஒடுக்கியவர் யார் என உணரத் தொடங்கியவன் என்று பொருள். தான் யாருக்கும் அடிமையில்லை; தனக்கு யாரும் அடிமையில்லை என்பவன் என்று பொருள்.

துக்ளக் வைத்திருந்தால்
முரசொலி வைத்திருந்தால், இந்தித் திணிப்பை எதிர்ப்பவன் என்றும் சமஸ்கிருத மயமாக்கலை எப்போதும் எதிர்ப்பவன் என்றும் மொழிக்காக தனக்குத்தானே சிதைவைத்த தியாகத்தின் தொடர்ச்சி என்று பொருள். சமூகத்தின் உயர்வுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனப்படும் சமூக நீதியே அடித்தளம் என நினைப்பவன் என்று பொருள். முரசொலியை நீங்கள் வைத்திருந்தால், மனிதன் என்று பொருள்" என்று பதிலடி கொடுத்திருந்தது முரசொலி.

மீண்டும் வருவாரா
இப்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டிருந்தார் ரஜினி. அதே துக்ளக் விழா மீண்டும் வருகிறது. ஜனவரி 14ம் தேதி சென்னையில் விழா நடைபெறவுள்ளது.. அதில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவர் வருவாரா.. வந்து மறுபடியும் ஏதாவது கலகலப்பாக பேசுவாரா அல்லது வீடியோ காலிலாவது வந்து ஏதாவது பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளர்ந்து எழுகிறது.

பேச வாய்ப்பிருக்கா
இந்த எதிர்பார்ப்பில்தான் பலரும் உள்ளனர். ஏன் அமித் ஷாவே கூட ரஜினி வரலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் சென்னைக்கு வருவதாக திட்டமிட்டிருந்தார் என்று சொல்கிறார்கள். அவர் வராமல் ரத்து செய்திருப்பதைப் பார்த்தால் நேரடியாக விழாவுக்கு ரஜினி வர வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. தேவைப்பட்டால் வீடியோ காலில் அவர் பேசக் கூடும் என்றும் சொல்கிறார்கள்.

பேச வாய்ப்பிருக்கா
அப்படியே வந்தாலும் ரஜினி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருக்கிறது. காரணம், அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்லி விட்டார். மன்னிப்பும் கேட்டு விட்டார். போராட்டம் நடத்தாதீங்க என்று ரஜினி ரசிகர்களுக்கும் மன்றம் தடை விதித்து விட்டது. ஆக எல்லாப் பக்கமும் அணை கட்டி வைத்து விட்ட நிலையில் ஒரு வேளை ரஜினி வீடியோ காலில் பேசினாலும் கூட அரசியல் பேசுவாரா என்பது சந்தேகம்தான். ஒரு வேளை பேசினாலும் கூட தன்னை அரசியலுக்கு வர விடாமல் தடுத்து விட்டார்கள் என்று கூறுவாரா என்று தெரியவில்லை.. ஏதாவது பேசலாம்.

காத்திருப்போம்
ஒரு வேளை மறுபடியும் அவர் அரசியல் பேசினால் அவரது பெயர் இன்னும் மோசமாகவே டேமேஜ் ஆகக் கூடிய வாய்ப்புகளே அதிகம்.. எனவே ரஜினி இந்த ஆண்டு விழாவில் பேசுவாரா இல்லையா என்பது கண்டிப்பாக ரஜினிக்கு மட்டுமே வெளிச்சம். வழக்கம் போல காத்திருப்போம்.. ஏதாச்சும் சவுண்டு வருதான்னு!
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications