சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடித்தது "ஜாக்பாட்".. ரூ. 7 லட்சம் வரையில் இனி ஜீரோ வருமான வரி.. அதிரடி அறிவிப்பு.. முழு விபரம்!

மிடில் கிளாஸ் மக்களின் சுமையை குறைக்கும் விதமாக பட்ஜெட்டில் இது தொடர்பான சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: 2023-24 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இதில் பல்வேறு மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதே சமயம் பழைய வருமான வரி விதிப்பு முறையில் (old regime) மத்திய அரசு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது.

மிடில் கிளாஸ் மக்களின் சுமையை குறைக்கும் விதமாக பட்ஜெட்டில் இது தொடர்பான சலுகைகள் எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் நிர்மலா சீதாராமன் தன்னை மிடில் கிளாஸ் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மிடில் கிளாஸ் மக்களுக்கான சலுகைகளை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்தது.

வரி....வட்டி...கிஸ்தி..மன்னர் காலம் தொடங்கி மக்களாட்சி வரை என்னென்ன வரிகள்? ஏன் கட்ட வேண்டும்?வரி....வட்டி...கிஸ்தி..மன்னர் காலம் தொடங்கி மக்களாட்சி வரை என்னென்ன வரிகள்? ஏன் கட்ட வேண்டும்?

வருமான வரி

வருமான வரி

முக்கியமாக இந்த பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. கடந்த 2018-19 பட்ஜெட்டில் கடைசியாக வருமான வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின் இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்த வருடம் 9 மாநில தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் வருமான வரியில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

வருமான வரி விதி முறை

வருமான வரி விதி முறை

தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும். முதல் முறை - பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால்

  • 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.
  • 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
  • 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும்.
  • இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் இந்த முறையும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய முறை

புதிய முறை

பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு முன்பு வரை, நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். அதுவே 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். நடைமுறையில் இருந்த இந்த புதிய வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறை

மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறை

இப்போது இந்த புதிய வரி விதிப்பு முறையில்தான் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால்

  • உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் .
  • 300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் .
  • 600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும்
  • 900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும்
  • 1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும்
  • 15 மேல் வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் .
  • புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது. ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்.

English summary
Will Regular Income Tax Slabs and Existing Tax Slabs change in Finance minister Nirmala Sitharaman 's Indian Budget?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X