Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலாவின் சைலண்ட்.. டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை.. அசராது நிற்கும் மாஜிக்கள்.. வருவாரா? மாட்டாரா?

பொதுக்குழு மட்டுமே முடிவு செய்யும் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவை கட்சிக்குள் சேர்த்து கொள்வது குறித்து அதிமுக மேலிட தலைவர்களிடம் இருவேறு கருத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்கும் முயற்சிகள் தலைதூக்கி வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல, தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ், அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் நடந்து முடிந்த நிலையில் அதிமுகவில் எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொற்றி கொண்டுள்ளது.

தினகரன்

தினகரன்

தேர்தல்களின் தொடர் தோல்வி காரணமாக சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்த டென்ஷன் மேலும் எகிறி கொண்டிருக்கிறது. அதிமுகவின் தோல்விக்கு பிளவு தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கட்சியில் இணைத்து, அமமுகவை அதிமுகவுடன் இணைத்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று தொண்டர்கள் ஓபிஎஸ்ஸிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

 சசிகலா

சசிகலா

பெரும்பாலான தொண்டர்களின் மனநிலைமையும் இதுபோலவே உள்ளது.. அதேபோல, மாஜிக்கள், நிர்வாகிகளின் எண்ண ஓட்டமும் இதுபோலவே உள்ளது.. சசிகலா தலைமை ஏற்கவேண்டும் என்று ஒரு வெளிப்படையாகவே சொல்லி வருகிறது.. சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொண்டால்தான் கட்சி பலப்படும் என்று நம்பப்படுகிறது.. ஆனால், மீண்டும் சசிகலாவை சேர்க்கக்கூடாது, அதிமுகவுக்கு ஒற்றை தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கவேண்டுமென்று தென் சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் உட்பட பல்வேறு சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 கடம்பூர் ராஜு

கடம்பூர் ராஜு

ஆனாலும் சசிகலா கட்சிக்குள் வருவது கிட்டத்தட்ட உறுதியாகி கொண்டேயிருக்கிறது.. தன்னுடைய ஆதரவாளர்களிடம் "காலம் கனியும். காத்திருங்கள்" என்று ஓபிஎஸ் பதிலளித்துள்ளது கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.. ஓபிஎஸ் கூட்டத்திற்கு பிறகும்கூட, அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் நிர்வாகிகள் அதே பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.. அந்த கூட்டத்திலும் அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும், சசிகலா, தினகரனை நிபந்தனையின்றி கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்...

 தீர்மானம்

தீர்மானம்

அந்த தீர்மானத்தை ஓபிஎஸ்ஸிடம் அதிமுக நிர்வாகிகள் தந்தனர்.. இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.. ஆனால், கட்சியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பது குறித்து பொதுக்குழு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றினால் கட்சிக்குள் பிளவுதான் ஏற்படும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 2 நாட்களாகவே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடு வருகிறார்.

வெயிட்டிங்

வெயிட்டிங்

மாஜி அமைச்சர் தங்கமணி, அதிமுக எம்.பி. சந்திரசேகர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டு வந்தாலும், கடம்பூர்ராஜு இவ்வாறு கூறியிருப்பது ஓபிஎஸ் தரப்பில் அதிர்ச்சியை தந்து வருகிறது... மற்றொரு பக்கம், அதிமுகவின் ஒட்டுமொத்த முடிவுக்காக தாம் காத்திருப்பதாக டிடிவி தினகரன் ஓபனாகவே நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் சொல்லி இருந்தார்.. எனவே, சசிகலா விவகாரத்தில் இன்னும் ஒரு முடிவு மேல்மட்ட தலைவர்களிடம் எட்டப்படாமலேயே உள்ளது என்பது தெளிவாகி வருகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+