ம்ஹூம்.. போன் மேல போன்.. யார் அந்த புள்ளிகள்.. கண்டுபிடிங்க.. ஆர்டர் போட்ட எடப்பாடி பழனிசாமி

சசிகலா அதிமுகவை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா வருகையை ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார், இப்போது சசிகலாவின் அரசியலை அவ்வளவு எளிதாக யாராலும் அலட்சியப்படுத்திவிட முடியாது என்று கூறப்படுகிறது.

"சசிகலாவுடன் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கட்சியை விட்டு நீக்கவேண்டும்" என்று அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

அப்படி இருந்தும் இன்னமும் சிலர் சசிகலாவிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அந்த வகையில், 20-க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டும் உள்ளனர்.

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

சசிகலாவின் ஒவ்வொரு ஆடியோவிலும், "கொரோனா முடியட்டும். தொண்டர்களை வந்து சந்திப்பேன். என்னை நம்பின யாரையும் கைவிட மாட்டேன்" என்று சசிகலா தொடர்ந்து ஒரே பேச்சை சொல்லி வருகிறார்.. அதுவும், கோவை, தர்மபுரி, ஈரோட்டை சேர்ந்த நிர்வாகிகளிடம் அதாவது கொங்கு மண்டல நிர்வாகிகளிடம் இப்படி சொல்லி உள்ளார்.

 டெல்டா மாவட்டம்

டெல்டா மாவட்டம்

ஆரம்பத்தில் இந்த ஆடியோ விவகாரத்தை அலட்சியமாக நினைத்த எடப்பாடி பழனிசாமி, மெல்ல மெல்ல கலக்கமடைந்ததாகவும் தெரிகிறது.. டெல்டா மாவட்டத்தில் தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலர் மூலமாக, யாரும் சசிகலா பக்கம் செல்ல வேண்டாம்' என ஆதரவு திரட்ட தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது... கொங்கு மண்டலத்தில் யார் யாருடன் சசிகலா பேசி வருகிறார் என்பதையும் கண்காணிக்க சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது.

 நிகழ்வுகள்

நிகழ்வுகள்

இதெல்லாம் எதற்காக? சசிகலாவை ஆரம்பத்தில் இருந்தே அலட்சியப்படுத்தி விட்டாரா எடப்பாடி? என்ற சந்தேகமும் எழுகிறது.. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து அவர்களின் கருத்தையும் கேட்டோம்.. அவர்கள் சொன்னதாவது:

 தொண்டர்கள்

தொண்டர்கள்

"முதலில் யாரோ 4 பேர் போனில் பேசுகிறார்கள் என்றார்கள்.. ஆனால், நூற்றுக்கணக்கானோர் பேசி கொண்டு வருகிறார்கள்.. பிறகு, சாதாரண தொண்டர்களிம்தானே சசிகலா பேசுகிறார் என்றார்கள்.. ஆனால், கட்சி நிர்வாகிகள் பலரும் பேசினர்... அவ்வளவு ஏன், எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவின் முக்கிய தலைவராக இருந்து வரும் புலவர் புலமைப்பித்தன் சசிகலாவுடன் பேசுவதாக தெரிகிறது..

 தீர்மானம்

தீர்மானம்

இதன் உச்சக்கட்டமாக, தூத்துக்குடி மாவட்ட அதிமுக கிளையில், சசிகலாவை வரவேற்று தீர்மானமே நிறைவேற்றி விட்டது... இது இனி அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் தொடரும். இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதே எடப்பாடிக்கு இழுக்குதான்.. இந்த நாள் வரை சாதி மட்டுமே அவரை காப்பாற்றி வருகிறது.‌.. அதுமட்டுமல்ல, அவரை ஒரு சக்தி வாய்ந்த தலைவராக மக்கள் ஏற்கவுமில்லை..

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஓபிஎஸ் விஷயத்தில், அவரை எடுபடாமல் செய்து, முக்கிய பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பெற்றிருந்தாலும், சசிகலா விஷயத்தில் அவரால் ஈடுகொடுக்க முடியாது.. 20 வருஷம் ஜெயலலிதாவின் அரசியலில் லாபி செய்தவர், இப்போது மட்டும் எப்படி சோடை போவார்? ம்ஹூம்.. எவ்வளவுதான் குட்டிக்கரணம் அடித்தாலும், இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சறுக்கல்தான்.. ஆரம்பத்திலேயே இதை தடுக்க தவறிவிட்டார்.

 ஆளுமை

ஆளுமை

அதேசமயம், ஓபிஎஸ் இப்போதே உஷாராகி கொள்ள வேண்டும்.. இன்னமும் எடப்பாடி பேச்சுக்கு ஓகே சொல்லி கொண்டிருந்தால், மேலே வரவே முடியாது.. ஆனால், ஒன்று, இவர்கள் எல்லாம் எதிர்க்கும் அளவுக்கு சசிகலா ஒன்றும் மோசம் இல்லை.. அது ஊழல் விவகாரத்திலும் சரி.. ஆனால், ஆயிரம் குறை சொன்னாலும் சசிகலாவிடம் ஒரு ஆளுமை உள்ளது.. கட்சியை கட்டி இழுத்து செல்லும் திறமை உள்ளது.. ஒரு தலைமைப் பண்பு உள்ளது.. இதைதான் அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் யோசிக்க தொடங்கி உள்ளனர்" என்றனர்.

"சசிகலாவுடன் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கட்சியை விட்டு நீக்கவேண்டும்" என்று அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

அப்படி இருந்தும் இன்னமும் சிலர் சசிகலாவிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அந்த வகையில், 20-க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தது நீக்கப்பட்டும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+