எடப்பாடியாரை சந்திக்க போகிறாரா சசிகலா.. நிஜமாவா.. என்ன நடக்கிறது அதிமுகவில்..?

முதல்வரை சசிகலா சந்திக்க போவதாக தகவல் கசிந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் அரசியல் நகர்வுகள் இன்னும் என்னவென்று உறுதியாக தெரியாத நேரத்தில், இன்னொரு உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றும் றெக்கை கட்டி சோஷியல் மீடியாவில் பறந்து கொண்டிருக்கிறது..!

7 நாள் ரெஸ்ட்டுக்கு பிறகு, சசிகலா தி.நகர் வீட்டுக்கு வந்துள்ளார்.. ஆனால், இப்போது வரை அவர் என்ன நினைக்கிறார்? என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்? என்பது வெளிப்படையாக தெரியவில்லை.

கடந்த 2 நாளாக ஓய்வு எடுத்த நிலையில், இன்றுதான் அரசியல் சம்பந்தமான ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.. எப்படியும் செய்தியாளர்களை அழைத்து கண்டிப்பாக பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுதகவல்

புதுதகவல்

அதேசமயம், சசிகலாவை பற்றின ஏதாவது புது புது செய்திகள், தகவல்கள், அனுமானங்கள், என தினந்தோறும் மீடியாவில் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.. அந்த வகையில், இப்போதும் ஒரு செய்தி கசிந்துள்ளது.. அது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க போகிறார் என்பது.

ஆறுதல்

ஆறுதல்

இதே தகவல் 2 தினங்களுக்கு முன்புகூட வெளிவந்தது.. அதாவது, ஜெயிலில் சசிகலா இருந்த இந்த 4 வருஷத்தில் அதிமுகவில் உயிரிழந்த முக்கிய பிரமுகர்கள் இல்லத்திற்கு சென்று ஆறுதல் சொல்ல போகிறார் என்று கூறப்பட்டது.. இப்படி செல்வதால், அனைத்து நிர்வாகிகளின் ஆதரவையும் ஒட்டுமொத்தமாக பெற்றுவிட முடியும் என்றும், இதுவரை வேறு எந்த தலைவர்களும் இப்படி பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு கிளம்பி சென்றதில்லை என்பதால், சசிகலாவின் முயற்சி நிச்சயம் அவருக்கு கை கொடுக்கும் என்றும் கருதப்பட்டது.

பிளான்

பிளான்

அதுமட்டுமல்ல, இந்த 30 வருஷமாக, எத்தனையோ அதிமுக பிரமுகர்கள் சசிகலாவின் தயவை பெற்றவர்கள்தான்.. சசிகலாவின் கருணை இல்லாமல் பலர் பொறுப்புக்கே வந்திருக்கவும் முடியாது.. அதேசமயம், இதுபோன்றவர்களின் விசுவாசம் இல்லாமல் அதிமுகவும் இன்று இல்லை.. அந்த உணர்வின் அடிப்படையிலேயே சசிகலா இப்படி ஒரு பிளான் வைத்திருப்பதாக சொல்லப்பட்டது.

 எடப்பாடியார்

எடப்பாடியார்

அப்படி ஆறுதல் சொல்ல வரும் நிலையில், அந்த லிஸ்ட்டில் எடப்பாடி பழனிசாமியின் வீடும் உள்ளதாம்.. எடப்பாடியாரின் அம்மா சமீபத்தில் தவறி விட்டார். மு.க.ஸ்டாலின் கூட வீட்டுக்குப் போய் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார். இந்த நிலையில் முதல்வரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்த சசிகலா செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.. அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் எடப்பாடியை சசிகலா நேரடியாக சந்தித்து துக்கம் விசாரிக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விகள் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

உறுதி

உறுதி

ஆனால் முதல்வரை பொறுத்தவரை, சசிகலா விஷயத்தில் இப்போது வரை உறுதியாக இருக்கிறார்.. தெளிவாக இருக்கிறார்.. நேற்றுகூட வேலூர், ஆம்பூரில் அதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.. எனினும் அமமுகவின் நிலைப்பாடு வேறு மாதிரியாக உள்ளது.. "ஒருதாய் வயிற்று பிள்ளைகளான அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்பதே சசிகலாவின் விருப்பமாக உள்ளது.

 முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

எடப்பாடியாரை நேரில் சந்தித்து பேசுவதால் நிலவி வரும் பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும், அப்படி இரு தரப்பிலும் விரிசல் குறைந்துவிட்டால் அதிமுகவை பலப்படுத்தும் அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கலாம் என்றும் அமமுகவில் கணக்கு போடப்படுகிறாம். எனினும், இந்த தகவலை சசிகலா தரப்பு உறுதி செய்யவில்லை.. ஒருவேளை இந்த தகவல் உண்மையாகவே நடந்தால், அதனால் சந்தோஷப்பட போவது ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள்தான்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+