செந்தில் பாலாஜி வெளியே வந்தாலும் இன்னொரு சர்ச்சை இருக்கே! "அவரை" எப்படி சமாளிப்பது?
சென்னை: செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதில் எந்த கட்டுப்பாட்டையும் உச்சநீதிமன்றம் விதிக்காவிட்டாலும் அவர் மீண்டும் அமைச்சராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் விசாரணையில் இருந்த போதே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஓகா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த நிபந்தனையில் இருவர் அவருக்கு ரூ 25 லட்சம் பிணை செலுத்த வேண்டும்.
திங்கள், வெள்ளி ஆகிய இரு நாட்களும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை மிரட்டக் கூடாது, சந்தித்து் பேசக் கூடாது. அமலாக்கத் துறை வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வாய்தா மேல் வாய்தா வாங்கக் கூடாது உள்ளிட்ட விவகாரங்கள் நிபந்தனைகளாக கொடுக்கப்பட்டன.
இதன் மூலம் அவர் மீண்டும் அமைச்சராக பதவி வகிக்க எந்த தடையையும் உச்சநீதிமன்றம் வகிக்கவில்லை. இந்த நிலையில் அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அதாவது இன்னும் சில நாட்களில் துணை முதல்வர் பதவி உருவாக்கப்படவுள்ளது. அமைச்சரவையில் இலாகா மாற்றமும் நிகழ போகிறது.
இது போன்ற சாதகமான நேரத்தில்தான் செந்தில் பாலாஜி பிணையில் வெளியே வந்திருக்கிறார். எனவே அவருக்கு மீண்டும் மின்சாரத் துறையே வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செந்தில் பாலாஜியின் வருகையை கரூர் மாவட்டமே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் முதல் திமுக நிர்வாகிகள் வரை எல்லாரும் அவரது வருகையை எதிர்பார்க்கிறார்கள். இப்படியிருக்கும் போது ஜாமீனில் வெளியே வந்த நபர் மீண்டும் அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செந்தில் ப பாலாஜி கைது செய்யப்பட்டதும் அவர் அமைச்சராகவே தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஆளுநரும் ஒருவர்.
எனவே அவர் செந்தில் பாலாஜியை அமைச்சராக்கும் கோப்புகளில் கையெழுத்திட மாட்டார் என்றே அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர் ஏன் பொன்முடிக்கு ஆளுநர் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லையா, அதுபல்தான் செந்தில் பாலாஜிக்கும் செய்து வைப்பார் என்கிறார்கள்.
பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் அவர் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை பெற்றிருந்தாலும் அவரது மேல் முறையீட்டு வழக்கில் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அதனால் அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவிட்டார். ஆனால் செந்தில் பாலாஜி ஜாமீனில்தானே வெளியே வருகிறார். அவருக்கு எப்படி இது பொருந்தும் என்ற கேள்வியும் எழுகிறது.












Click it and Unblock the Notifications