பரங்கிமலை-வேளச்சேரி இடையே நாளை பறக்கும் ரயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் விளக்கம்
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டது. இதனால் சென்னை புறநகர் ரயில்களை நம்பியுள்ள மக்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள். ஒரே ரயிலில் போக முடியாமல் இரண்டு ரயில் மாற வேண்டிய நிலை உள்ளது. வேளச்சேரிக்கு எல்லாம் 3 ரயில்கள் மாற வேண்டியுள்ளளது. இந்நிலையில் பலரும் எதிர்பார்த்த பரங்கிமலை வேளச்சேரி ரயில் வழிததடம் திட்டமிட்டப்படி நாளை தொடங்காது. அனுமதி சான்று கிடைக்காததால் தள்ளிபோகிறது என்கிறார்கள் அதிகாரிகள்.
சென்னை போன்ற ஒரு பெருநகரத்தில், காலையில் அலுவலகம் செல்பவர்களுக்கும், கல்லூரிகளுக்கு விரையும் மாணவர்களுக்கும் 'பறக்கும் ரயில்' என்பது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்ல; அது அவர்களின் வாழ்வாதாரத்தோடு கலந்த ஒரு உணர்வு. கடந்த சில வாரங்களாக எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால், சாமானிய மக்கள் படும் அவதி சொல்லொணாதது.

இந்நிலையில், மார்ச் 10-ஆம் தேதி (நாளை) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பரங்கிமலை - வேளச்சேரி இடையிலான ரயில் சேவை மீண்டும் தள்ளிப்போயிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏன் இந்தத் தாமதம்?
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமார் கர்க் தலைமையிலான குழுவினர் கடந்த 5-ஆம் தேதி அதிநவீன சோதனைகளை மேற்கொண்டனர். தண்டவாளத்தின் உறுதித்தன்மை, வளைவுகளில் ரயிலின் வேகம், மற்றும் சிக்னல் அமைப்புகளை அவர்கள் ஆய்வு செய்தனர். பரிசோதனைகள் முடிந்துவிட்டாலும், "பாதுகாப்பு அனுமதிச் சான்று" இன்னும் வழங்கப்படவில்லை.
தண்டவாளத்தில் இன்னும் சில சிறிய அளவிலான சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் முடிக்கப்பட வேண்டியிருப்பதாக ஆய்வுக்குழு அறிவுறுத்தியுள்ளது. "மக்களின் உயிர் பாதுகாப்பு மிக முக்கியம்" என்பதால், இந்தச் சிறிய குறைகளையும் நிவர்த்தி செய்த பிறகே ரயிலை இயக்க அனுமதி கிடைக்கும். இதனால்தான் நாளை தொடங்க வேண்டிய சேவை தற்காலிகமாக முடங்கியுள்ளது.
யாருக்கெல்லாம் இது விடிவுகாலம்?
இந்தச் சேவை தொடங்கப்பட்டால் அது லட்சக்கணக்கான மக்களின் அன்றாடச் சுமையைக் குறைக்கும். ஐடி ஊழியர்கள் & நடுத்தர வர்க்கம்: வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் இருந்து சோழிங்கநல்லூர் அல்லது ஓஎம்ஆர் செல்லும் ஐடி ஊழியர்களுக்கும், அங்கிருந்து பரங்கிமலை வழியாக சென்ட்ரல் செல்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். கிண்டி மற்றும் பரங்கிமலை சுற்றியுள்ள கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து நெரிசலில் சிக்காமல், குறித்த நேரத்திற்குத் தேர்வுகளுக்குச் செல்ல இந்த ரயில் உதவும். எழும்பூர் மற்றும் சென்ட்ரல் பகுதியில் இருந்து பொருட்களை வாங்கி வரும் சிறு வியாபாரிகளுக்கு, போக்குவரத்துச் செலவு பெருமளவு குறையும்.
மக்களின் உணர்வுப் போராட்டம்
வெயிலில் மணிக்கணக்கில் பேருந்துக்காகக் காத்திருப்பது, போக்குவரத்து நெரிசலில் சிக்கி அலுவலகத்திற்குத் தாமதமாகச் செல்வது என சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாகவே இருக்கிறது. "நாளை முதல் ரயில் வரும்" என்று ஆவலோடு காத்திருந்த முதியவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்தத் தாமதம் ஏமாற்றத்தை தந்துள்ளது ஆனாலும், பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் அதிகாரிகள் இந்தப் பணிகளை விரைந்து முடிப்பார்கள் என்று நம்புகிறாரகள்.
தண்டவாளத்தில் அந்தச் சிறு சிறு திருத்தங்கள் முடிந்தவுடன், பரங்கிமலை - வேளச்சேரி இடையே ரயில் பயணம் இனிதாகும். 18 வருடம் காத்திருந்த மக்கள், அடுத்த சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது திறக்கப்பட்டால் சென்னையின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் ஒரு வலிமையான பாலமாக அமையும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications