விருந்துக்கு கமல் வீட்டுக்கு சென்றது போல.. திமுக நிர்வாகி வீட்டுக்கு ஸ்டாலின் சென்றாரா: உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் 4 மாதம்தான் இறுதி கட்ட ஆட்சி உள்ளது.. ஆனால் இன்றைக்கு நாள்தோறும் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் வருகிறது, இந்தியாவிலே முறைகேடு நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் முதன்மை மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது என்று திமுக அரசை கடுமையாக சாடியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார். மேலும், ஆண்டுக்கு ஆண்டு கடன் சுமை உயந்து கொண்டு வருவதை பற்றி திமுக அரசு கவலைப்படவேயில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

சென்னை போட் கிளப்பில் உள்ள தன்னுடைய வீட்டில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தனி விருந்துக்கு, கமல் ஏற்பாடு செய்திருந்தார்.

Kamal Stalin RB Udhayakumar

முதல்வர் ஸ்டாலின், அவரது மகனும் துணை முதல்வருமான உதயநிதி மற்றும் குடும்பத்தினர், கமல் வீட்டுக்கு சென்றதுமே, கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். மேலும், கமல் வீட்டில் இருந்த அவரது அண்ணன் சாருஹாசனிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.

குடும்பத்துடன் சென்ற முதல்வர்

முதல்வர் மனைவி துர்கா, உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோர், கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.. பிறகு வரவேற்பு அறையில் உட்கார்ந்து, நீண்ட நேரம் அனைவரும் பேசினார்கள்.. கமல் வீட்டில் தயார் செய்த உணவு வகைகளும், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகளும் சேர்த்து விருந்தில் பரிமாறப்பட்டன.

முதல்வர் குடும்பத்தினருடன் தன்னுடைய வீட்டுக்கு வருகை தந்திருந்தது குறித்து கமல்ஹாசனும், ட்வீட்போட்டு நன்றி தெரிவித்திருந்தார்.

தூங்கவிடாத சாதனை

இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது, "இன்றைக்கு திமுகவின் ஆட்சியின் சாதனையால் சிலரை தூங்க விடாமல் செய்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்றைக்கு நீங்கள் தான் பொதுமக்கள் அனைவரையும் தூங்கவிடாமல் செய்து சாதனை படைத்து வருகிறீர்கள்.

கடுமையான அரிசி பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, குப்பை வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, கட்டுமான பொருள் விலை உயர்வு, குப்பை வரி உயர்வு ,ஆம்னி பஸ் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பாட புத்தகம் விலை உயர்வு , டாஸ்மாக் விலை உயர்வு என விலைவாசி உயர்வால் சாதனை படைத்து இன்றைக்கு பொதுமக்களின் தூக்கத்தை நீங்கள் தொலைத்து உள்ளீர்கள்

பெண்கள் பாதுகாப்பு

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பள்ளிக்கு செல்லும் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, தொடர்ந்து தொடர்ந்து கட்ட பஞ்சாயத்து, சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் அப்பாவி மக்கள் தூக்கத்தை தொலைத்து தவித்து வருகிறார்கள்.

ஆண்டுக்கு ஆண்டு கடன் சுமை உயந்து கொண்டு வருகிறது, அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தீர்கள்? ஆனால், எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி இன்றைக்கு தமிழக மக்களின் தூக்கத்தை தொலைத்துள்ளது ஸ்டாலின் அரசு.

இன்னும் 4 மாத ஆட்சிதான்

இன்னும் 4 மாதம்தான் இறுதி கட்ட ஆட்சி, ஆனால் இன்றைக்கு நாள்தோறும் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் வருகிறது, இந்தியாவிலே முறைகேடு நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் முதன்மை மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது..

பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலக்காடுகளில் 100 கோடி லஞ்சம் பெற்று 16.77 ஏக்கர் நிலங்களை தாரை வார்த்தது. அதேபோல நகராட்சி குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு அதில் பல நூறு கோடி முறைகேடு இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை ஆதாரத்துடன் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.

அதேபோல கனிமவள கொள்ளை, கட்டுமானத்தில் முறைகேடு, மதுபானத்தில் முறைகேடு இப்படி முறைகேட்டால் திராவிட மாடல் ஆட்சியால் மக்கள் தூக்கத்தை தொலைத்து இருக்கிறார்கள்.தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதிகளில் பெரும் குளறுபடியால் அறுவடை செய்த நெல்களெல்லாம் மழையில் சேதமாய் வீணாகி போயின இதனால் விவசாயிகள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர் .

கமல் வீட்டில் விருந்து

இன்றைக்கு தன்னை எதிர்த்து கட்சியை தொடங்கிய கமல்ஹாசனிடம், என் அன்பால், தன் அதிகாரத்தால் அவரின் போர்வாளை மழுங்க செய்துவிட்டார். அரசியல் வியூகம் என்று நீங்கள் சொன்னாலும், தன்னுடைய தொண்டர்களின் அக்கறைக்காக நேரத்தை நீங்க சொல்லி விட்டீர்களா?

இப்படி எதிர்க்கட்சிகள் போர்வாளை மழுங்க செய்கிற காட்டும் அக்கரையில் இன்றைக்கு ஒட்டுமொத்த குடும்பமும் கமலஹாசன் பிறந்தநாள் விழாவில் அவரது வீட்டுக்கு, வீட்டோடு சென்று விருந்து சாப்பிட்டு வந்தீர்கள். ஆனால் இதே திமுகவிற்கு காலம், காலமாக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள் இல்லத்திற்கு நீங்க இது போன்று வரவில்லை.

உங்களின் தோல்வியான பெயிலியர் மாடல் அரசை திசைத்திருப்ப எதிர்க்கட்சிகளில் போர்வாள்களை இது போன்ற அரசியல் அதிகாரங்களை வைத்து மழுங்கச் செய்ய உள்ளீர்கள்.

திமுக பெயிலியர் மாடல்

அதேபோல ஏ.வ. வேலுவும் திறமை எங்கும் இருந்தால் ஸ்டாலின் பதவி தருவார் என்று புகழ் பாடுகிறார், ஆனால் இன்றைக்கு இந்த அதிகாரத்திற்கும், அடக்குமுறைகளுக்கும் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க தயாராகி விட்டார்கள்.

2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தின் அம்மா ஆட்சியை மலர செய்ய மக்கள் தயாராகிவிட்டனர். நீங்கள் எத்தனை போர்வாள்களை மழுங்க செய்தாலும் அதிமுக நிச்சயம் மலரும்" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+