கொத்தோடு பாஜக சாய்க்குது? வலையில் திமிங்கலம்? வேலையை காட்டுதா தாமரை? திமுகவின் அடுத்த கேம் ஸ்டார்ட்
சென்னை: தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும், அதற்கு பின்னணியில் மூலகாரணமாக இருக்க போவது பாஜகதான் என்றும் கூறப்படுகிறது.. இப்படி ஒரு கருத்தை சொல்லியிருப்பது யார் தெரியுமா?
பாஜகவை பொறுத்தவரை, மாற்று கட்சியின் அதிருப்தி தலைவர்களுக்கு குறிவைத்து, சரியான நேரம் பார்த்து தங்கள் கட்சிக்கு அலேக்காக தூக்கிவந்துவிடுவது வழக்கமாகும்.. தேர்தல் நேரங்களில் இதுபோன்ற கட்சி தாவல்கள், அனைத்து கட்சியிலுமே நடப்பது இயல்பான ஒன்று என்றாலும், பாஜகவின் வியூகம் இதில் சற்று அதிகமானது.

பாஜக வியூகம்: அதனால்தான், தேர்தலுக்கு முன்பிருந்தே, அதாவது 2 வருட காலமாகவே, அதிமுகவில் ஒருவித சலசலப்புகள் அதிகரித்து காணப்பட்டது.. குறிப்பாக, வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் விரைவில் பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வட்டமடித்து கொண்டேயிருந்தது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விட்டு, இதுவரை யாருமே அதிமுகவை விட்டு பாஜகவுக்கு செல்லவில்லை.
சமீபத்தில்கூட, விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த விஜயதாரணியை வரவேற்ற அண்ணாமலை, "விஜயதாரணி மட்டும் இல்லை, இன்னும் பல முக்கிய புள்ளிகள் பாஜகவுக்கு வருகிறார்கள்" என்று நாளையும், நேரத்தையும் குறித்தார்.
இதனால், யார் அந்த முக்கிய புள்ளிகள் என்ற விவாதம் சோஷியல் மீடியாவிலும் வெடித்தது. அப்போதுதான், ஒருவேளை எஸ்பி வேலுமணியாக இருக்குமோ? என்ற ஐயமும் கிளம்பியது.
ஆனால் எஸ்.பி. வேலுமணியே செய்தியாளர்களை சந்தித்து இதற்கான விளக்கத்தையும் தந்திருந்தார்.. "எங்கள் ஆலமரம் போன்ற கட்சியை விட்டுவிட்டு, வெறும் 3 சதவீதமோ, 4 சதவீதமோ ஓட்டு வங்கி வைத்திருக்கிற பாஜகவில் போய் நான் எப்படி இணைவேன்? இப்படி ஒரு வதந்திக்கு எல்லாம் எப்படி பதில் சொல்லுவாங்க?" என்று கூறியிருந்தார்.
செங்கோட்டையன்: இதற்கு பிறகு, அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன், பாஜகவில் இணைவதாக மற்றொரு தகவல் வலம்வந்தது.. இதற்கு காரணம், அதிமுகவின் மேற்கு மண்டலத்தில், உட்கட்சி பூசல் பெரிய அளவில் வெடிக்க தொடங்கியிருக்கிறது.. அதுமட்டுமல்ல, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், செங்கோட்டையன் நேரடியாகவே மோத தொடங்கிவிட்டாராம்.
எனவே, பாஜகவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் அக்கட்சியில் சேரவும் செங்கோட்டையன் தயார் என்று, ஒரு நாளிதழில் செய்தியும் வெளியாகியிருந்தது.. இதற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். "இப்படி ஆதாரமில்லாத செய்திகளை பத்திரிகை தர்மத்திற்கு எதிராக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
விளக்கம்: எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன் இருவருமே தனித்தனியாக தங்கள் மீதான வலுவாக மறுத்திருந்தும்கூட, மீண்டும் இவர்களை பற்றின தகவல்கள் கசிந்தவாறே உள்ளது.. அதேபோல, அண்ணாமலை சொன்னதுபோல, ஒருத்தருமே பாஜக பக்கம் போகவும் இல்லை.. தேர்தலும் முடிந்துவிட்டது.
இந்நிலையில், திமுக அமைச்சர ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா, வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும். அதிமுகவில் பாஜக பிளவை ஏற்படுத்தும்" என்று அமைச்சர் ரகுபதி கருத்து கூறியிருக்கிறார்.
மோடி பிரச்சாரம்: தொடர்ந்து ரகுபதி பேசும்போது, "பிரதமர் மோடியின் பிரச்சாரம் ஒன்றே போதும், பாஜக தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும்.. பாஜக கூட்டணி கட்சியில் தேர்தல் ஆணையமும் ஒன்று. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும்.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால் அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம், ஆனால் பாஜக நிச்சயம் செய்யும்" என்று அமைச்சர் ஆரூடம் கூறியிருக்கிறார்.
ஆட்டம்: இந்தமுறை தேர்தலிலாவது விட்டதை பிடிக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது... தமிழகத்தின் எதிர்க்கட்சி, தாங்கள் மட்டும்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. அதனால்தான், தமிழகமெங்கும் எடப்பாடி பழனிசாமி அனலடிக்கும் பிரச்சாரத்தை தனிநபராகவே மேற்கொண்டிருந்தார்..
அண்ணாமலை: முக்கியமாக, கோவையில் அண்ணாமலை, தேனியில் தினகரன், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், இவர்கள் எல்லாம் 2வது இடத்துக்கு வரவே கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு பிரத்யேகமாகவே கட்டளையிட்டிருந்தாராம் எடப்பாடி பழனிசாமி.. இவ்வளவு முன்னெடுப்புகளை செய்துள்ள நிலையில், மேற்கண்ட தொகுதிகளில் அதிமுக சறுக்கலை மேற்கொண்டால், அது பாஜகவின் கைங்கரியமாகவும் இருக்கலாம் என்று இப்போதே முணுமுணுக்கப்பட்டும் வருகிறது.
அப்படியிருக்கும்போது, அமைச்சர் ரகுபதி நேற்று பேசியிருக்கும் இந்த பேச்சுதான், இப்போது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் ஆட்டம் ஆரம்பமாகிறதா? அல்லது இதுவும் மற்ற வதந்திகளை போல, புஸ்ஸென்று போய்விடுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம்











Click it and Unblock the Notifications