ஓஹோ.. ஒரே கல்லில் 3 மேட்டர்கள்.. திமுகவுக்கு மாற்று பாஜக என்றார்களே.. அது இதுதானோ..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புது ரூட்டை தமிழக பாஜக கையில் எடுத்துள்ளது.. இதையடுத்து, திமுக மட்டுமல்ல, அதிமுகவும் சேர்ந்து பாஜகவை வியந்து பார்த்து வருகிறது.

எப்போது தேர்தல் வந்தாலும்சரி, முதல் நபராக கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கிவிடும் தமிழக பாஜக.. அதேசமயம், நாங்கள் தனித்து நின்றாலே வெற்றி பெற்றுவிடுவோம், கோட்டையில் விரைவில் காவி கொடி பறக்கும் என்பதையும் தவறாமல் சொல்லும்..

கடைசியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அக்கட்சி தரும் சீட்களை பெற்றுக் கொண்டு போட்டியிட்டுவிடும். ஆனால், இந்த நடைமுறை கடந்த நகர்ப்புற தேர்தலில் இருந்துதான் மாறுபட்டது. ஆரம்பமே அசத்தல் என்பதுபோல, சில இடங்களில் பாஜக வெற்றிகளையும் பெற்றது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை பெற்று தந்துள்ளது. அதற்கு பிறகுதான் அதிமுகவை பல விஷயங்களில் ஓவர்டேக் செய்து மேலெழும்பி கொண்டிருக்கிறது,

பாஜக

பாஜக

பாஜகவை பொறுத்தவரை, இதுவரை தங்கள் கட்சியின் குறிக்கோள்களை சொல்லி தமிழகத்தில் பெருமளவு ஓட்டு கேட்டதில்லை.. தங்கள் கட்சி சாதித்த சாதனைகளை சொல்லியும் ஓட்டு கேட்டதில்லை.. மாறாக திமுகவை டேமேஜ் செய்தும், திமுகவை குற்றஞ்சாட்டியுமே பிரச்சாரங்களை மேற்கொள்ளும்.. தமிழக மக்களுக்கு பாஜக ஒருவித அதிருப்திகள் இருந்தபோதிலும், திமுக மீதான வெறுப்பரசியல், பெரிய அளவிலான லாபத்தை பாஜகவுக்கு பெற்று தந்ததில்லை என்பதையும் மறுக்க முடியாது.

 மோடி அட்வைஸ்

மோடி அட்வைஸ்

விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ளது.. இந்த தேர்தலின் வெற்றிக்காக இப்போதே தயாராக வேண்டும், களப்பணியில் இறங்கவேண்டும், அடிமட்டத்தை பலப்படுத்த வேண்டும், இப்போதுள்ள பார்முலாபடியே தொடருங்கள் என்று டெல்லி மேலிடம் அறிவுறுத்தியிருந்த நிலையில், அதே பாணி அரசியலைதான் இந்த நிமிடம் வரை தமிழக பாஜக முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது. இப்போது அடுத்தக்கட்டமாக, பாஜகவின் சாதனைகளை விளக்கி மக்களிடம் நெருங்க ஆரம்பித்துள்ளது.. இதுதான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

 குடும்ப அட்டைதாரர்கள்

குடும்ப அட்டைதாரர்கள்

குறிப்பாக, கொரோனா காலத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் வழக்கமான அரிசியுடன் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.. 2 ஆண்டுக்கும் மேலாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது... கட்சியின் தொடக்க நாள் விழாவையொட்டி 14 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், இன்றைய தினத்தை குடும்ப அட்டை தாரர்களிடம் மத்திய அரசின் உதவியை சுட்டிக்காட்டும் தினமாக பாஜகவினர் கொண்டாடினார்கள்..

 ரேஷன் கடைகள்

ரேஷன் கடைகள்

அதன்படி, நம் தமிழகத்திலும் பாஜக தலைவர்கள் ரேஷன் கடைகளை பார்வையிட்டு அங்கு வந்த பொதுமக்களிடம் மத்திய அரசின் கொரோனா கால உதவியை எடுத்து சொன்னார்கள்..மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவையிலும், வானதி சீனிவாசன் ராஜாஅண்ணாமலைபுரத்திலும், எம்.ஆர்.காந்தி எம்ஏல்ஏ மாம்பாக்கத்திலும், கரு.நாகராஜன், நடிகர் செந்தில் ஆகியோர் மத்திய சென்னை தாமஸ்ரோட்டிலும், ரேஷன் கடைகளை பார்வையிட்டனர்..

 வங்கி கணக்கு

வங்கி கணக்கு

தமிழ்நாட்டில் 1 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3.15 லட்சம் டன் அரிசி கூடுதலாக ஒதுக்கப்பட்டதாகவும் கொரோனா காலத்தில் தொடர்ந்து 3 மாதங்கள் பெண்களுக்கு வங்கி கணக்கில் மாதம் ரூ.500 செலுத்தியதையும் மக்களிடம் எடுத்துக்கூறி பிரசாரம் செய்தனர். ஆக, திமுக அரசுக்கு போட்டியாக தங்கள் சாதனைகளையும் லிஸ்ட் போட ஆரம்பித்துவிட்டது பாஜக..

3 ரூட்கள்

3 ரூட்கள்

சுருக்கமாக சொல்லப்போனால், ஒருபக்கம் திமுகவை டேமேஜ் செய்வது, மறுபக்கம் பாஜகவின் சாதனைகளை சொல்வது, இதற்கு நடுவில் "திமுகவுக்கு மாற்று தாங்கள்தான்" என்று வலுவாக முழங்குவது என 3 விதமான ரூட்களில் செல்ல தொடங்கி உள்ளது.. இது அதிமுகவுக்கும் சற்று ஷாக்தான் என்றாலும், இதன் ரிசல்ட் அக்கட்சிக்கு எப்படி அமை போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+