சுட்டெரிக்கும் சூரியன்.. குளிர்ச்சியூட்ட சவூதி அரேபியாவின் சூப்பர் டெக்னிக் -பின்பற்றுமா தமிழக அரசு?
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இதை விட அதிக வெப்பத்தை எதிர்கொண்டு வரும் சவூதி அரேபியாவில் அதை சமாளிக்க அந்நாட்டு அரசு பின்பற்றும் வழிமுறையை பார்ப்போம்.
கோடை காலம் தொடங்கியதில் இருந்தே சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் மக்களை சுட்டெரித்து வருகிறது. இதனால் கடுமையான தாகம், சோர்வு, வியர்வை, நாவறட்சி போன்ற பல்வேறு பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த கோடை காலத்தை மக்கள் எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வீடுகளை குளிர்ச்சியாக வைத்திருக்க மக்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரம் வீதிகள், சாலைகள், பொது இடங்களில் மக்கள் வெப்பத்தை சமாளிக்க அரசும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அந்த வகையில், சவூதி அரேபியாவில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறையை தமிழ்நாடு அரசும் பின்பற்றினால் பகல் நேரங்களில் சாலைகளில் செல்லும் மக்களுக்கு நிச்சயம் பயனளிக்கும். இதனால் பகல் நேரத்தில் பைக்குகளில் சென்று பணிபுரியும், பைக் டாக்சி ஓட்டுநர்கள், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள், ரிக்சா ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள் என பலரும் பயனடைவார்கள்.
அதுதான் தண்ணீர் ஸ்ப்ரே கம்பம். சவூதி அரேபியாவில் உச்சி வெயிலில் சாலையில் செல்வோர் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் அவர்களை குளிர்ச்சியூட்டுவதற்காக இந்த தண்ணீர் ஸ்ப்ரே கம்பம் பயன்படுத்தப்படுகிறது. சாலைகளுக்கு நடுவே இருக்கும் விளக்கு கம்பம், மின் கம்பங்களை போன்றே அங்கு பல பகுதிகளில் இந்த தண்ணீர் ஸ்ப்ரே கம்பம் வைக்கப்பட்டு இருக்கும்.
குறிப்பாக ஹஜ் காலங்களில் கடுமையான வெப்பம் நிலவும்போது அதிகளவிலான இந்த தண்ணீர் ஸ்ப்ரே கம்பங்களை சவூதி அரேபிய அரசு பல இடங்களில் வைப்பது வழக்கம். மழைக் காலங்களில் பெய்யும் இதம் தரும் சாரல் மழையைபோல் இந்த தண்ணீர் ஸ்ப்ரே கம்பத்தில் தண்ணீர் ஸ்பேரே செய்யப்படும். கடந்த 2017 ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரசு ஜமராத் - மினா இடையிலான சாலையில் 750 தண்ணீ ஸ்ப்ரே கம்பங்களை நிறுவியது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 10 ஆயிரம் மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் ஸ்ப்ரே செய்யப்பட்டு மக்கள் குளிர்ச்சியூட்டப்பட்டார்கள். இந்த 750 தண்ணீர் ஸ்ப்ரே கம்பங்களுக்கும் 2 நிலையங்களில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இது அல்லாமல் சாலையோரங்களில் உயர் ரக டவர் ஏசிக்கள் போன்றவற்றையும் முக்கிய இடங்களில் வைத்து சூழலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது சவூதி அரேபியா.
தற்போது சென்னை உள்ளிட்ட நகரங்களில் நிலவி வரும் வெப்பத்தோடு, வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகையால் கூடுதலான வெப்பத்தை உணர முடிகிறது. நிலைமை இவ்வாறு இருக்க சவூதி அரேபியா மேற்கொள்ளும் முயற்சிகளை சென்னை போன்ற நகரங்களில் பயன்படுத்தினால் பயனளிக்கும். குறிப்பாக பல நிமிடங்கள் மக்களை காக்க வைக்கும் முக்கிய சிக்னல்களிலாவது முதல் கட்டமாக இந்த தண்ணீர் ஸ்ப்ரே கம்பங்களை நிறுவலாம். மக்களின் உடலும் உள்ளமும் குளிரும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications