பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் வங்கி கணக்கு, சேவை முடங்குமா? ஆர்பிஐ முடிவு என்ன?
சென்னை: பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவிற்கு வந்துள்ளது.
நாம் வைத்து இருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது.
நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதலில் 1 வருடம் அவகாசம். பின்னர் கூடுதலாக 6 மாதம் அவகாசம். அதன்பின் கடந்த மார்ச் வரை 500 ரூபாய் அபாரதத்துடன் அவகாசம், பின்னர் ஜூன் இறுதிவரை 1000 ரூபாய் அபாரதத்துடன் அவகாசம் வழங்கப்பட்டது.

பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும்.
பான் அட்டை: லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது.
இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜூன் 30ம் தேதியுடன் இதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்களுக்கு பின்வரும் பாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன.

பாதிப்புகள்: பான் அட்டை ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.
இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா, வங்கி கணக்கு முடங்குமா என்று இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக ஆர்பிஐ விரைவில் விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வட்டார தகவல்களின்படி இனிமேல் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
ஆதார் கார்ட் தற்போது நாட்டில் முக்கியமான அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியம் ஆகி உள்ளது. அதே சமயம் இந்த கட்டாய விதியில் இருந்து சிலருக்கு விலக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. பின்வரும் நபர்களுக்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.

1. அஸ்ஸாம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் வசிப்பவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.
2. வருமான வரிச் சட்டம், 1961 இன் படி குடியுரிமை பெறாதவர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.
3. முந்தைய ஆண்டில் எண்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது. அதாவது கடந்த வருடம் உங்களுக்கு 80 வயது ஆகி இருந்தால் இதை இணைப்பது கட்டாயம் கிடையாது.
4. இந்திய குடிமகன் அல்லாதவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது. வெளிநாட்டில் இருந்து வந்து இங்கே இருக்கும் பட்சத்தில் உங்களிடம் பான் அட்டை இருந்தாலும் அதை இணைக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் உங்களிடம் ஆதார் இருக்காது.
5. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது என்றாலும் இவர்கள் விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications