தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை
சென்னை: கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மார்ச் 25ம் தேதி தொடங்கிய நாடு தழுவி ஊரடங்கு 49 நாட்களை கடந்துவிட்ட நிலையில் மே 17ம் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது 53 நாட்களுடன் ஊரடங்கு முடிய உள்ளது. இந்த ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மே 17ம்தேதி வாக்கில் தெரிவிக்கப்படும் என்றும் ஆனால் ஊரடங்கு வேறுமாதிரிஇருக்கும் என்றும் பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்து இருந்தார்.

மாநில அரசுகளின் கருத்துக்கள் படியே ஊரடங்கு விஷயத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் பிரதமர் அண்மையில் தெரிவித்தார். அதாவது ஊரடங்கை நீட்டிப்பதும் நீட்டிக்காமல் இருப்பதும் மாநில அரசுகளின் முடிவுக்கே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் சுமார் 50 நாட்களாக முடங்கி கிடக்கும் நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிக அதிகமாக உள்ளது.பரவலும் குறைவாக இல்லை.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் இன்று விவாதித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த சில நாட்களில் சரியாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், கொரனா பரவலை தடுக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை ( நாளை) ஆலோசனை நடத்த உள்ளார். அப்போத ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications