செட்டில்மென்ட் பத்திரம்.. பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு.. வாபஸ் பெறுகிறதா தமிழக அரசு? இன்று தெரியும்
சென்னை: பத்திரப்பதிவு துறையில், திடீரென கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், அதுகுறித்து பரிசீலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான கருத்து கூட்டமும் இன்றைய தினம் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பல காலமாகப் பதிவுத்துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
பொது அதிகாரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை, கட்டுமான ஒப்பந்தம் போன்ற பத்திரங்களின் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது...

கட்டணம் உயர்வு: ஏனென்றால், இந்த கட்டண உயர்வால், புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஒருவித தயக்கம் ஏற்படும் என்றும், அதிலும், செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்ய, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, வெகுஜன மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், செட்டில்மென்ட் பத்திரத்துக்கான கட்டண உயர்வை பழைய நிலைக்கே அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், கட்டுமான ஒப்பந்த பதிவுக்கு, ஏற்கனவே 1 சதவீதம் கட்டணம் இருந்த நிலையில், இப்போது 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது... இதே போன்று, பொது அதிகார பதிவுக்கு 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவைகளுடன் பிற கட்டணங்களையும் சேர்த்தால், சொத்தின் மதிப்பில், 4 சதவீதத்தை கூடுதலாக செலவிட வேண்டி வருகிறது..
தவிரவும், நிலத்துக்கு மட்டுமே வழிகாட்டி மதிப்பு இருக்கும் நிலையில், கட்டடத்துக்கான மதிப்பை எப்படி கணக்கிடுவது என்பதில் குழப்பமும் ஏற்பட்டுள்ளதால், இந்த கட்டண உயர்வை, திரும்ப பெற அரசை வலியுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்க தொடங்கி உள்ளன.
பிஏஐ மனு: இப்படிப்பட்ட சூழலில், பொது அதிகார ஆவண பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பிஏஐ எனப்படும் இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம், முதல்வர் ஸ்டாலினுக்கு மனு ஒன்றையும் அனுப்பியிருந்தது. அதேபோல, ரியல் எஸ்டேட்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் கிளம்பின. இதுபோலவே, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்க கூட்டமைப்பான, "கிரெடாய்" நிர்வாகிகளும், பத்திரப்பதிவு கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இப்படி நாலாபுறமும் அதிருப்திகள் வெடிக்கவும், கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்பு நடத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்குமுன்பு, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் அறிக்கையை ஒன்றை விடுத்திருந்தார்..
அதில், "பதிவுத்துறை சார்பில், பதிவு நடைமுறைகள் குறித்து, ஜூலை 27ல், சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கட்டடம், மனை விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து கூட்டமைப்புகள், சங்க நிர்வாகிகள் பங்கேற்கு கருத்து தெரிவிக்கலாம் என பத்திரப்பதிவு மற்றும் வணிக வரிகள் துறை அமைச்சர் மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாபஸ் ஆகுமா?: அந்தவகையில், இன்றைய தினம் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்க போகிறது.. இந்த கூட்டத்தின்முடிவில், பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டதில் தளர்வு வருமா? அல்லது கட்டணங்கள் நீக்கப்பட்டு பழைய நடைமுறையே அமலுக்கு வருமா? என்று தெரியவில்லை..
காரணம், தமிழகத்தில் பதிவுத்துறை சார்பில் வருடந்தோறும் வருவாய் அளவு அதிகரித்தே வருகிறது.. மாநிலம் முழுவதும் கடந்த 2017-18ம் நிதியாண்டில் ரூ.9,121.50 கோடியாகவும், 2018-19ம் ஆண்டில் ரூ.11,071 கோடியாகவும் இருந்த வருவாய் அளவு, அடுத்தடுத்த நிதியாண்டுகளில் கொரோனா தொற்றால் குறைந்துவிட்டது.

பொதுமுடக்கம்: மாநிலம் முழுவதும் பதிவுத்துறை அலுவலகங்கள் மூடல், பொதுமுடக்கம் போன்ற காரணங்களினால், 2019-2020ம் ஆண்டில் வருவாய் அளவு ரூ.11,028 கோடியாக இருந்தது. இது மேலும் குறைந்து, 2020-21ம் நிதியாண்டில் ரூ.10,643 கோடியாக சரிந்துவிட்டது. கொரோனா தொற்று முடிந்து இயல்பு நிலைமைக்கு திரும்பிய சூழலில் 2021-22ம் நிதியாண்டில் வருவாய் 13,913 கோடியாக உயர்ந்தது.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த நிதியாண்டு அதாவது 2022.-23 மற்றும் இந்த நிதியாண்டு 2023-24-ல் பதிவுத்துறை வருவாய் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் வரும் நிதியாண்டில் ரூ.15 கோடியை வருவாய் அளவு தாண்ட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
கட்டணம்: அந்தவகையில், பதிவுத்துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படவில்லை என்பதால்தான், இப்போதுதான் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றாலும், பொதுமக்களின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வலுவாகவே எழ ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில், பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை செயலர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications