நீயா படத்தில் வருவது போல் ஆண் பாம்பை அடித்துக் கொன்றால் பெண் பாம்புகள் பழிவாங்க வருமா?
சென்னை: ஒரு வீட்டிற்குள் நல்லப் பாம்புகள் எதற்காக வருகின்றன? பாம்பை அடித்தால் பாம்புகளுக்கு பழிவாங்கும் குணம் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் நமச்சிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு வீட்டில் நல்லபாம்பு வருவதற்கான அறிவியல் காரணங்கள் மற்றும் கிராமத்தில் எனது அனுபவத்தில் கண்ட அனுபவ பூர்வமான காரணங்கள் வருமாறு :

1)பாம்பின் உணவான எலிகளின் நடமாட்டம் அந்த வீட்டில் வெளி இடங்களை விட அதிகம் இருக்கலாம்.
2) பாம்பு தன் பாதையில் செல்லும்போது எதிர்பக்கம் மனிதர்கள் அல்லது பாம்பின் பகை விலங்குகளான கீரி, நாய் போன்றவைகளோ / மயில், கழுகு , போன்ற பெரிய பறவைகளோ எதிர்ப்படும்போது தப்பிக்க வேண்டி, அருகில் பொந்துகள் ஏதும் இல்லாத நிலையில், அருகில் உள்ள வீட்டில் நுழைகிறது.
3) மனிதர்கள் குடியிருக்காத ஒரு மண் தரையுள்ள வீட்டில் பொந்துகள் மூலம் உள்ளே நுழையும் பாம்பு தொடர்ந்து தன் பாதுகாப்புக்காக அல்லது அங்கிருக்கும் அபரிமிதமான தனது உணவான எலிகளுக்காக அங்கேயே தங்கி இருந்து அவ்வப்போது வெளியே வந்து போகும்.
வீட்டிற்கு வந்த ஒரு பாம்பை அடித்து கொன்றுவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வருமாறு:-
எந்த ஒரு பாம்பையும் நாம் அடிக்கும்போது அல்லது அடித்துக் கொல்லும் போது அதன் கழிவு வெளியேறும் உறுப்பில் (Vent) இருந்து ஒருவிதமான நாற்றமுள்ள திரவம் வெளியேறி கீழே சிந்துகின்றது.
இவ்விதம் அடிபட்ட பாம்பின் எதிர் பாலின பாம்புகள் இந்த வாடையால் கவரப்பட்டு இனச்சேர்க்கைக்காக அங்கு தேடி வருகின்றன.
இதனை அறியாத மக்கள் அடிபட்ட பாம்பு பழிவாங்க வந்ததாக தவறான கருத்து கொண்டுள்ளனர். ஏனெனில் மறுமுறை வந்த பாம்புக்கும் முதலில் அடிபட்ட பாம்புக்கும் வித்தியாசம் அவ்வளவாக தெரியாது !.
மேலும், நினைவு வைத்திருந்து தேடி வந்து மனிதர்களை பழிவாங்கக் கூடிய நினைவாற்றலும் பாம்புகளுக்கு கிடையாது !.
பாம்புகளுக்கு காற்றில் உள்ள வாசனையை தனது பிளவுபட்ட நாவால் அடிக்கடி உள்ளிழுத்து , தனது மேல் தாடையில் உள்ள 'ஜேக்கப்சன்' எனும் உறுப்புக்கு அனுப்பி உணர்கின்றது. வாசனையினால் தனது இரையையும் எதிரிகளையும் பாம்புகள் அடையாளம் காணுகின்றன.
மேலும் நல்ல பாம்புகள் நமது வீடுகளுக்கு அருகில் கூட வசித்து வருவதுடன் ஓரளவுக்கு மனிதர்களுடன் இணக்கமாகவே இருந்து வருகின்றன.
ஆனால், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற பாம்புகள் மனிதர்களிடமிருந்து விலகி வாழும் இயல்புடையன. மிக்க ஆபத்துள்ளவை. மேலும், கையாள இலகுவானவையல்ல!. இதனாலேயே பாம்பாட்டிகள் அனைவரும் நல்லப் பாம்பை மட்டுமே தங்களுடன் வைத்திருக்கின்றனர்!
இதனாலேயே நல்லப் பாம்புகள் குறித்த கட்டுக் கதைகள் அனேகம் உருவாகி மக்களிடையே வலம் வருகின்றன ! என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications