ஆளுநரை மாற்ற கோரிக்கை வைக்கப்படுமா? வந்து விழுந்த கேள்வி.. முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
சென்னை: தமிழக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில், ஆளுநரை மாற்ற கோரிக்கை வைக்கப்படுமா? என முதல்வர் மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. இந்த ஆண்டின் முதல் சட்ட சபைக் கூட்டத் தொடரில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் உரையில் சில பத்திகளை வாசிக்காமல் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சட்டமன்றத்தில் தமிழக அரசின் உரை இடம் பெறும் வகையில் ஆளுநரின் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதுபோக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி நிலுவையில் வைத்துள்ளார். அதேபோல், ஒரு மசோதா நிலுவையில் வைத்து இருந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றுதான் பொருள் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதும் திராவிட மாடல் காலாவதியான மாடல் என பேசியதும் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மேலும் அதிகரிக்க காரணமாக இருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நாம் வெளிநாடு சென்று பேசி அழைப்பதால் மட்டும் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். பேரம் பேசுவதில் அவர்கள், மிக கடினமான தன்மை கொண்டவர்கள். எனவே அதற்கான சூழலை நமது மாநிலத்தில் உருவாக்க வேண்டும். அதுவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்ககூடியதாக இருக்கும் என்று கூறினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அதற்கு எதிராக வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள் என்று ஆளுநர் ஆர்.என். ரவி சூசகமாக பேசி சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு முதல்வரும் மறைமுகமாக பதில் கொடுத்து இருந்தார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் கூறும் போது, திராவிட மாடல் ஆட்சியில் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை 2 கண்களாக நாம் போற்றி பாராட்டி கொண்டிருக்கிறோம். அதை செயல்படுத்தியும் கொண்டிருக்கிறோம். கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவும், மக்கள் நலம் பேணுவதில் மிகச்சிறந்த தமிழ்நாடாகவும் நமது மாநிலம் தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி மாநிலத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கும் மட்டும் புலப்படவில்லை" என பதிலடி கொடுத்து இருந்தார்.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் மு. க ஸ்டாலினிடம், ஆளுநர் நிலுவையில் மசோதாக்கள் வைத்திருப்பது குறித்தும் தெலுங்கானா அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தமிழக அரசு இவ்விவகாரத்தை எப்படி அணுக போகிறது என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் மு. க ஸ்டாலின், நாங்களும் நீதிமன்றத்தை நாடலாமா என்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசிக்கொண்டு இருக்கிறோம்" என்றார்.
அப்போது ஆளுநரை மாற்ற கோரிக்கை எதுவும் வைக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த முதல்வர், நாங்கள் நினைப்பது நடந்தால் ஆளுநர் விவகாரத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இல்லை. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தாமதத்திற்கு ஆளுநரே காரணம். பல்கலைக்கழக வேந்தராக முதல் அமைச்சர்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். என்று கூறினார்.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications