Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடைகளில் அரிசிக்கு தட்டுப்பாடு வருமா? திடீரென பரவிய தகவலால் பரபரப்பு.. அதிகாரிகள் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்டா மாவட்டங்களில் நெல் விளைச்சல் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்முதலும் கணிசமாக குறைந்துள்ளதால் ரேஷன் கடைகளில் அரிசிக்கு தட்டுப்பாடு வருமா என்ற கேள்விகள் எழுந்தது. இதற்கு அதிகாரிகள் அளித்த பதிலை பார்ப்போம்.

தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 90 சதவீதத்திற்கு மேல் உள்ள குடும்ப அட்டைகள் அரிசி அட்டைகளாகவே உள்ளன. இவற்றிற்கு மத்திய அரசின் சார்பிலும் மாநில அரசின் சார்பிலும் அரிசி வழங்கப்படுகிறது.

Will there be shortage of rice in ration shops? What is the truth?

உதாரணமாக அரிசி ஒதுக்கீடு 18 கிலோ என்றால், 15 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 3 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும், 20 கிலோவாக இருக்கும் போது 15 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 5 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரிசி உற்பத்தி குறைந்துள்ளதால் ரேஷனில் அரிசிக்கு தட்டுப்பாடு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் கடந்த, 2023 செப்டம்பர் 1ம் தேதி துவங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசனில், நேற்று முன்தினம் வரை, 11.43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இது, முந்தைய சீசனில் இதே காலகட்டத்தில், 15.50 லட்சம் டன்னாக இருந்து வந்தது. சுமார் 5 லட்சம் டன் நெல் குறைந்துள்ளதால், ரேஷன் கடைகளில் அரிசிக்கு தட்டுப்பாடு வருமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி கூறுகையில், 'காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் விளைச்சல் கணிசமாக பாதிக்கப்பட்டது. கிடங்குகளில் மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி இருப்பு இருக்கிறது. இந்திய உணவு கழகத்திடம் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் அரிசி வருவதால், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை' என்று கூறினார்.

ரேஷனில் மசூர் பருப்பு: வெளிநாடுகளில் இருந்து மசூர் பருப்பு இறக்குமதி செய்யும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்த மனுவில், துவரம் பருப்புக்கு பதில், அதே சத்துக்களை கொண்ட, விலை குறைவான மசூர் பருப்பை பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருந்தது.. பின்னர், மசூர் பருப்பை போல தோற்றமளிக்கும் களையான கேசரி பருப்பும் புழக்கத்தில் உள்ளதாகக் கூறியதுடன், மசூர் பருப்புக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற்று 2007-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அறிவியல் முறைகளை கையாண்டு, மசூர் பருப்பை அடையாளம் கண்டு, அதை பொது விநியோக திட்டத்தில் வினியோகிக்கலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி மசூர் பருப்புக்கு அனுமதியளித்து 2017-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் ஒரு கிலோ ரூ.130 வீதம் 45 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பை சுமார் 583 கோடியே 42 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்திருக்கிறது. அதே எடையில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படும் மசூர் பருப்பு கொள்முதல் செய்ய 382 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால், துவரம் பருப்புடன் சேர்த்து மசூர் பருப்பையும் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ''மனுதாரரின் கோரிக்கை மனுவை தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் பரிசீலித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். வழக்கு விசாரணையை முடித்து வைக்கிறேன்'' என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் காரணமாக ரேஷனில் மசூர் பருப்பு விரைவில் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+