உளவுத்துறைக்கு போட்டுத்தந்த கருப்பு ஆடு! தாம்பரத்தில் சிக்கிய 4 கோடி! நயினாருக்கு செக்? அப்போ நெல்லை
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய் காரணமாக நெல்லை தேர்தல் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், நேற்று முதல்நாள்
இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பணம் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர்.
இந்த பணம் எந்தக் கட்சி சார்பாக, எந்த வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அதிகார்பூர்வமாக இதுவரை அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் விசாரணையில் பெறப்பட்ட முதல்கட்ட தகவல்கள் மட்டுமே தற்போதைக்கு வெளியாகி உள்ளன.
ரெய்டு: தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு மத்திய சென்னை தொகுதி தேர்தல் நுண் பார்வையாளர் சாகுல் ஹமீது நேரில் வந்து விசாரணை செய்து வருகின்றனர். அங்கே தற்போது ரெய்டும் நடைபெற்று வருகிறது.
இது போக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் கணேஷ் மணியின் வீட்டில் செய்யப்பட்ட ரெய்டில், ₹2 லட்சம் ரொக்கம், 100 வேஷ்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் சிக்கி உள்ளனர். இது தொடர்பாகவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.,
இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் தொடர்பு இல்லை. யாராவது புகார் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை. அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.
என் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி சிலர் செய்கின்றனர். நான் பிரபலமாக இருப்பதால் இப்படி சிலர் செய்கின்றனர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை: இந்த பண விஷயம் முதலில் உளவுத்துறைக்குத்தான் கிடைத்துள்ளதாம். உளவுத்துறை அந்த தகவலை தேர்தல் ஆணையத்திடம் பகிர இந்த சோதனை நடந்து உள்ளது. அதன் மூலம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த தகவலை சொன்னது திமுகதான் என்று பாஜகவில் சிலர் கூறுகின்றனர். ஆனால் சிலரோ பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர் ஒருவர்தான் இந்த விவகாரத்தில் கருப்பு ஆடு , அவர்தான் விஷயத்தை பகிர்ந்தது என்றும் கூறி வருகிறார்களாம்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய் காரணமாக நெல்லை தேர்தல் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் வேலூரில் பணம் கைப்பற்றப்பட்ட காரணத்தால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் இந்த முறையும் நடக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications