• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

15 "தாமரைகள்".. நயினாரா இப்படி?.. பக்கத்திலேயே வி.பி. துரைசாமி.. மிச்சம் 10 இடம்தானாம்.. தடதட பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், அதற்கான பிளான்களுடன் தயாராகி உள்ளது தமிழக பாஜக.. அதேசமயம், குறிப்பிட்ட அளவு தொகுதிகளை தமிழகத்தில் இருந்து வென்றாக வேண்டும் என்ற முனைப்பும் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

  ஜெயக்குமார் நினைத்தால் அதிமுக ஒன்றுபடும் - நயினார் நாகேந்திரன்

  நேற்றைய தினம், சென்னையில் பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இதில் மத்திய இணையமைச்சர் எல் . முருகன், மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன், விபி துரைசாமி, எச்.ராஜா, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

  பரபரக்கும் மகாராஷ்டிர அரசியல் சதுரங்கம்.. ஏக்நாத் ஷிண்டே முன் இருக்கும் ”5 வாய்ப்புகள்” பரபரக்கும் மகாராஷ்டிர அரசியல் சதுரங்கம்.. ஏக்நாத் ஷிண்டே முன் இருக்கும் ”5 வாய்ப்புகள்”

  இவர்கள் அனைவருமே நேற்றைய தினம், சொல்லி வைத்ததுபோல், ஒரே ஒரு விஷயத்தை சொன்னார்கள்.. தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெல்ல வேண்டும், இதில், 15 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என்று உறுதிபட தெரிவித்தனர்.

   நயினார் நாகேந்திரன்

  நயினார் நாகேந்திரன்

  நயினார் நாகேந்திரன் பேசியபோது, "அண்ணாமலை தமிழகத்தின் தலைவராக பொறுப்பேற்றபிறகு, எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. இப்படி பொதுக்கூட்டங்கள் நடப்பது ஆச்சரியமில்லை.. பொதுக்கூட்டங்களை இப்போது எந்த கட்சியும் நடத்துவதில்லை என்பது வேறு.. பொதுக்கூட்டங்களை நடத்தினால் இவ்வளவு கூட்டம் வருமா என்று நினைத்து பார்த்தால் கிடையாது.. ஆனால், அண்ணாமலை வருகிறார், வருகிறார், என்று சொன்னால் அதற்காக இளைஞர்களின் கூட்டம் ஒருபக்கம், ஒரு ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்பதற்காக ஒரு கூட்டம்..

  நயினார்

  நயினார்

  மனமாற்றம் ஏற்பட்டால், ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது நிச்சயம்.. அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.. 1967ல் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியவர் அண்ணா அவர்கள்.. இன்றைக்கு இருக்கும் இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்றம் செய்ய போகிறவர் அண்ணாமலை.. அன்று அண்ணா, இன்று அண்ணாமலை.. இந்த மாற்றம் எப்போது வரும் என்று எல்லாருமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.. இன்னும் 2 ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது தான் பாஜகவின் ஒரே லட்சியம்.. ஆனால் 15 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் " என்றார்.

   31 கமிஷன்

  31 கமிஷன்

  இதற்கு பிறகு பேசிய அண்ணாமலை, எந்த பிரச்சனையாக இருந்தாலும் நமது முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்.. அவருக்கு "கடிதம் முதலமைச்சர்" என்று இன்னொரு பெயர் இருக்கிறது.. இதே போல தமிழகத்தில் முதலமைச்சர் 31 கமிஷன் அமைத்துள்ளார்... எந்த பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க முடியவில்லை என்றால் உடனடியாக கமிஷன் அமைப்பது தான் இவருக்கு வேலை.. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 இடங்களை கைப்பற்றும்.. 15 இடங்கள் உறுதியாகிவிட்டது.. இன்னும் 10 இடங்களுக்கு மட்டுமே உழைக்க வேண்டும்" என்றார்.

   அமித்ஷா

  அமித்ஷா

  இந்த தலைவர்கள் ஒரே மாதிரியாக பேசியதுதான், அரசியல் கட்சிகளுக்கு குழப்பத்தையும் கலக்கத்தையும் தந்து வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு அமித்ஷா வந்தபோது, என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது.. இந்த முறை டபுள் டிஜிட்டில் சீட் வென்றாக வேண்டும்.. அதில் 5 பேர் டெல்லிக்கு கட்டாயம் தேவை என்று அசைன்மென்ட்டை, மாநில தலைவரிடம் தந்துவிட்டு போனதாக செய்திகள் வெளியாகின.. அமித்ஷா வந்து போய் 2 மாத காலம்கூட முடிவடையாத நிலையில், 15 இடங்கள் உறுதியாகிவிட்டது என்று அக்கட்சி தலைவர்கள் கோரஸாக சொல்லி உள்ளனர்..

   10 சீட்

  10 சீட்

  அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தாலும் வரலாம், அப்படி வந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்ற புது தகவலையும் வெளியிட்டுள்ளனர்.. வரும் தேர்தலில், கைப்பற்ற போகும் அந்த 10 இடங்களைவிட, உறுதியாகிவிட்ட அந்த 15 இடங்கள் எது என்று தெரியவில்லை.. திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும் என்று சொன்ன நயினாரும் சரி, விபி துரைசாமியும் சரி, இருவருக்குமே அன்று அரசியல் பாதையை வகுத்து தந்ததும், வாரி அணைத்ததும் இதே திராவிட கட்சிகள் என்பதை தமிழகமே அறியும்.

  சீனியர்கள்

  சீனியர்கள்

  என்றாலும், பாஜக அடுத்து கையில் எடுக்க போகும் அஸ்திரம் "கட்சி தாவல்' என்கிறார்கள். அதிமுகவில் அதிருப்திகளும், பூசல்களும் எழுந்துள்ள சூழலில், சில முக்கிய புள்ளிகளுக்கு வலை விரித்துள்ளதாக கூறப்படுகிறது.. இதைதவிர, உச்சக்கட்ட வெறுப்பிலும், வருத்தத்திலும் மாற்று கட்சியில் உள்ள சீனியர்கள் சிலருக்கும் குறி வைத்துள்ளதாம்...

   சாதி ஓட்டுக்கள்

  சாதி ஓட்டுக்கள்

  குறிப்பாக, அனைத்து சாதி ஓட்டுக்களையும் கவரும் விதமாகவே, இவர்களை எல்லாம் ஸ்கெட்ச் போட்டு, பாஜக பக்கம் கொண்டுவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எந்த சமுதாய மக்களும், பாஜகவை நிராகரித்திடாத வகையில், அனைத்து சமூகத்தினரின் ஆதரவை மொத்தமாகவே பெற, இந்த வியூகம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இது தொடர்பான மூவ் தற்போது ஆரம்பமாகி உள்ள நிலையில், பாஜகவின் அதிரடிகள் பிற கட்சிகளுக்கு வியப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.. எனினும், நிஜமாகவே அந்த 15 இடங்கள் உறுதியா? என்பதுதான் தெரியவில்லை..!

  English summary
  Will TN BJP win 15 seats in mp election and What is the advice given by Amit sha திமுகவை எதிர்கொள்ள பாஜக சில திட்டங்களை தயார் செய்து வருகிறதாம்
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X