"ஓவர்.. ஓவர்".. ஸ்டாலினுக்கு புது சிக்கல்.. அன்னைக்கே நேரு சொன்னாரே.. கதர்கள் வைத்த செக்.. என்னாகும்

தமிழக காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி தொடருமா என்ற சிக்கல் எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேஎஸ் அழகிரி ஒரு திரியை கொளுத்தி போட்டுள்ளார்.. அது இப்போது அறிவாலயத்தில் சரசரவென பற்றி கொண்டு எரிய ஆரம்பித்துள்ளது.. நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி தொடருமா? முறியுமா? என்ற சந்தேகத்தையும் அது கிளப்பி விட்டு வருகிறது.

திமுக - காங்கிரஸ் இடையேயான உறவு முன்பு போல இப்போது இல்லை.. குறிப்பாக கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, கூட்டணி சுமூகமாக இல்லை என்பது பல நிகழ்வுகள் மூலம் நமக்கு தென்பட்டு வருகிறது.

கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலின்போது, இது அதிகமாக வெடித்தது.. அப்போதே அழகிரியும், கேஆர் ராமசாமி கூட்டாக சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

நேரு

நேரு

அதில் "திமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை" என்பதை ஓபனாகவே காட்டமாகத் தெரிவித்திருந்தனர்..,. இது திமுக தலைமையை கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கியது.. அதனால்தான், அப்போது, டெல்லியில் காங்கிரஸ் கூட்டிய சிஏஏ எதிர்ப்புக் கூட்டத்தைகூட திமுக புறக்கணித்தது மேலும் இதற்கு திமுக அழகிரி அறிக்கையை காரணம் காட்டி டெல்லி தலைவர்களிடமும் தெரிவித்தது.

கமல்

கமல்

இந்த விஷயத்தை குறிப்பிட்டு, கமலும் ஒரு பேட்டி தந்திருந்தார்.. "திமுகவும் காங்கிரஸும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுப் பிரிவார்கள் என்று தான் முன்பு சொன்னதே இப்போதும் நடக்கிறது" என்றார். ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகும், கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் திரும்பவும் பிரச்சனை வெடித்தது.

கூட்டணி

கூட்டணி

காரணம், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என கடந்த ஓரிரு வருடங்களாகவே மாதங்களாகவே திமுகவுக்குள் குரல்கள் ஒலித்து வருகின்றன.. ஒருமுறை இந்த அதிருப்தி குரலை கேஎன் நேரு வெளிப்படையாகவே சொல்லி இருந்தார்.. காங்கிரசுக்கு அதிக சீட்டுகள் கொடுத்து நமது வெற்றிவாய்ப்பை இழக்க வேண்டாம் என்று பல சீனியர்கள் ஸ்டாலினை வலியுறுத்தி வந்ததையும் மறுக்க முடியாது.

தடாலடி

தடாலடி

இதற்கெல்லாம் என்ன காரணம்? கேஎஸ் அழகிரியின் தடாலடி அறிக்கைகளும், அனுசரணையான போக்கும் இல்லாததுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்... 7 பேர் விடுதலை விவகாரத்திலேயே காங்கிரஸ் சூடாகி உள்ளது.. பேரவையில் ஸ்டாலின் இது குறித்து என்ன சொல்ல போகிறாரோ? என்ற அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்தது.. இப்போதும் எதிர்பார்த்து உள்ளது.. ஒருவேளை, பாதகமான அறிவிப்பை திமுக எடுத்தால், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற பேச்சும் உள்ளது.

 அறிவிப்பு

அறிவிப்பு

இப்படிப்பட்ட சூழலில்தான் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. எனவே காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் அழகரி தலைமையில் நடந்துள்ளது.. இங்கு அழகிரி பேசிய பேச்சு, ஏற்கனவே நிலவி வரும் சந்தேகங்களை ஊர்ஜிதப்படுத்துவதாக அமைந்து வருகிறது.. அழகிரி பேசும்போது, கட்சியை இன்னும் அமைப்புரீதியாக வலுப்படுத்தினால்தான் தேர்தலில் சீட் பேரத்தை அதிகப்படுத்தி பேச முடியும் என்று சொன்னாராம்.

 சீட் பேரம்

சீட் பேரம்

அதுமட்டுமல்ல, "சட்டமன்ற தேர்தலுடன் காங்கிரஸின் தேனிலவு காலம் முடிந்துவிட்டது, புகழ்பாடும் காலம் முடிந்துவிட்டது, திமுகவின் குறைகளை சுட்டிக்காட்ட தயக்கம் வேண்டாம்" என்றெல்லாம் அழகிரி சொன்னதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. ஆக இதையெல்லாம் பார்த்தால், சீட் பேரத்தை உயர்த்துவது என்பதும், தேனிலவு காலம் முடிந்துவிட்டது என்று சொன்னதும், திமுகவுக்கான மெசேஜ் ஆகவே பார்க்கப்படுகிறது.

 கூட்டணி

கூட்டணி

ஏற்கனவே அதிரடியாக பேசி பேசிதான், கலங்கி போய், கண்ணீர் விட்டு சீட் வாங்கும் நிலைமைக்கு தமிழக காங்கிரஸ் ஆளானது.. இப்போது மீண்டும் இப்படி தடாலடியாக பேசி வருவது, தமிழக காங்கிரசுக்கு அழகில்லை என்றும், அமைப்பு ரீதியாக அந்த கட்சி மேலும் பலமாக வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. அழகிரியால் தமிழக காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலைமைக்கு வந்துவிடுமா? 7 தமிழர் விவகாரத்தில் திமுக என்ன முடிவெடுக்க போகிறது? காங்கிரஸ் கேட்கப்போகும் சீட்டுகளை ஸ்டாலின் அள்ளி தருவாரா? தெரியவில்லை.. பார்ப்போம்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+