இறங்கி அடிக்கும் அன்புமணி.. நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக உயர்த்துமா அரசு? இன்னுமா வெட்டி அரசியல்
சென்னை: தமிழகத்தில் நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதாக தன்னுடைய அறிக்கை ஒன்றில் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி, காவிரி டெல்டா மாவட்டங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கலாம் என மத்திய அரசு அனுமதி தந்துள்ளது..

அதுபோலவே, உடைந்த, மங்கிய, முளைவிட்ட நெல் பூச்சி அரித்த நெல் போன்றவை கொள்முதல் செய்யும் நெல்லின் மொத்த அளவில் 7 சதவீதம் வரை இருக்கலாம்
நெல் கொள்முதல்
ஒருவேளை குளிர், மழை, பனியால் நெல்கள் நனைந்துவிடும்பட்சத்தில், அந்த நெல்களின் ஈரப்பதம் 23 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்து விடுகிறது.. இந்த அளவுக்கு ஈரப்பதமுள்ள நெல்லை, தமிழக அரசு தன்னிச்சையாக கொள்முதல் செய்ய முடியாது. இதற்கு மத்திய அரசின் அனுமதியும் வேண்டும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈரப்பதம் இருந்தால், அதனை உலரவைத்துதான் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், வெளி மார்க்கெட்டிலும் ஈரப்பதத்தை காரணம் காட்டி விலையை குறைத்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறார்களாம்.
ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை குறைத்துவிடுகிறார்களாம்.. இதனால் விவசாயிகள், தங்களது பணத்தை இழக்கும் நிலைமை உள்ளது..
14 சதவீதம் ஈரப்பதம்
உதாரணத்துக்கு13 முதல் 14% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்தால் 68% அரிசி கிடைக்கும்... 22% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வதால் 56% அரிசி கிடைக்கும். 11% ஈரப்பதம் நெல்மணிகளை ஒரு வருடத்துக்கு வைத்திருக்க முடியும்... எனினும், நெல்லை அரசு மட்டும் கொள்முதல் செய்தால் பாதுகாப்பது கடினம். அடுத்த 3 மாதத்திற்குள் நெல்லை அரிசி ஆக்காவிட்டால் அனைத்தும் பாழாகிவிடும்.
அதுமட்டுமல்லாமல், தற்போது வடகிழக்கு பருவமழையும் துவங்க போகிறது.. ஈரக்காற்றும் வீசி வருகிறது. அதனால்தான், 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் பேசி அனுமதியை பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்திபடி உள்ளனர்.
வெட்டி அரசியல் விளம்பர அரசியல்
இந்நிலையில், நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதாக விமர்சனமும் செய்துள்ளார்.
இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் வரலாறு காணாத அளவில் இந்த முறை நெல் விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையால், அதன் பயன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற ஐயமும், அச்சமும் எழுந்துள்ளது. நெல் கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகளின் நலன்களைக் காப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது.
குறுவை சாகுபடி
நடப்பாண்டில் குறுவை சாகுபடி முன்கூட்டியே தொடங்கப்பட்டதாலும், நெல்லை நேரடியாக தெளிப்பு முறையில் விதைப்பது உள்ளிட்ட புதிய முறைகளை கடைபிடித்ததாலும் அதிக விளைச்சல் கிடைத்திருக்கிறது. ஏக்கருக்கு சராசரியாக 25 குவிண்டால் நெல் விளைச்சல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிய அடைந்திருக்கின்றனர்.
ஆனால், நெல்லை விற்று பணமாக்குவதற்குள் ஏராளமான தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் அவர்களின் மகிழ்ச்சி கலக்கமாக மாறி வருகிறது.
நெல் மூட்டைகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மிகக்குறைந்த அளவிலேயே நெல் கொள்முதல் செய்யப்படுவதாலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கிக் கிடப்பதால், பல கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த அவலத்தை கடந்த 7-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் சுட்டிக்காட்டி, நிலைமையை சீரமைக்கும்படி வலியுறுத்தியிருந்தாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான குவிண்டால் நெல்லை குவித்து வைத்துக் கொண்டு கொள்முதலுக்காக விவசாயிகள் காத்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையில் அவை நனைந்து வீணாகிவிட்டன. வயல்களில் புதிதாக அறுவடை செய்யப்படும் நெல்லும் ஈரப்பதம் நிறைந்ததாகவே உள்ளது. நனைந்த நெல்களின் ஈரப்பதம் 25% வரை இருப்பதாக உழவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
தன்னிச்சையான கொள்முதல்
மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். ஆனால், இப்போது மழையில் நனைந்த நெல்களின் ஈரப்பதம் 23 முதல் 25% வரை உள்ளது. இவ்வளவு ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு தன்னிச்சையாக கொள்முதல் செய்ய முடியாது.
மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டும் தான் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய முடியும். எனவே, 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் பேசி அனுமதி வாங்கும்படி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து ஈரப்பதம் அதிகரித்ததற்கு தமிழக அரசு தான் காரணம் ஆகும். அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று 10 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் காத்திருந்தும் கூட, உரிய காலத்தில் அவற்றை கொள்முதல் செய்யாததால் திடீர் மழையில் நனைந்து நெல் ஈரப்பதம் நிறைந்ததாக மாறிவிட்டது. எந்த நேரம் வேண்டுமானாலும் மழை பெய்யும் சூழல் இருப்பதால் அவற்றை காய வைப்பது சாத்தியமில்லை; அவ்வாறு காய வைத்தாலும் கூட மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு 17%க்கும் கீழ ஈரப்பதத்தின் அளவைக் குறைக்க முடியாது.
விவசாயிகளை காப்பாற்ற ஒரே வழி
இன்றைய சூழலில் விவசாயிகளைக் காப்பாற்ற ஒரே வழி மத்திய அரசுடன் பேச்சு நடத்தி, 25% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி பெறுவது தான். கடந்த சில ஆண்டுகளாகவே நெல்லின் ஈரப்பத வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்த போதெல்லாம் நிலைமையை உணர்ந்து ஈரப்பதத்தின் அளவை 19% ஆகவும், 20% ஆகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
நடப்பாண்டிலும் இப்போது மத்திய அரசிடம் விண்ணப்பித்து 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய முடியும். ஆனால், அதற்கான எந்த முன்னெடுப்பும் தமிழக அரசால் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லாதது தான் இதற்குக் காரணம் ஆகும்.
லஞ்சம் வாங்கும் பணியாளர்கள்
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னொரு பெரும் சிக்கல் நெல்லை கொள்முதல் செய்வதற்காக கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படும் கையூட்டு தான்.நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் ரூ.60 வீதம் கையூட்டு வாங்கும் பணியாளர்கள், மூட்டைக்கு 2 கிலோ நெல்லை குறைத்து கணக்கு காட்டுகின்றனர்.
அதனால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.150 வீதம் கையூட்டு, ரூ.125 மதிப்புள்ள 5 கிலோ நெல் என ரூ.275 வரை கையூட்டு வழங்க வேண்டியுள்ளது. அதன்படி பார்த்தால் ஓர் விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்லை விற்க ரூ.6875 கையூட்டாக வழங்க வேண்டும். இவ்வளவு அதிக தொகையை கையூட்டாக வழங்கினால் உழவர்களுக்கு ஒரு லாபமும் கிடைக்காது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களிலும், பிற அமைப்புகளிலும், கொள்முதல் நிலையங்களில் நடத்தப்படும் பகல்கொள்ளைக்கு முடிவு கட்டுமாறு விவசாயிகள் கதறுகின்றனர். மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாய்வு நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை சிரமப்படுத்தக்கூடாது என்று ஆணையிடுகிறார்.
கையூட்டு கலாச்சாரம்
உணவுத்துறை அமைச்சரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தலைவரும் காவிரி பாசன மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், இந்த கையூட்டு கலாச்சாரம் மட்டும் இன்னும் ஒழியவில்லை.
தீபாவளி திருநாளுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள்ளாக நெல் மூட்டைகளை அவர்கள் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து, பணம் பெற்றால் மட்டும் தான் அவர்களால் தீபாவளிக்கான தேவைகளை நிறைவேற்றி கொண்டாட முடியும். அக்டோபர் 16 முதல், அதாவது இன்னும் 6 நாள்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், விவசாயிகள் கண்ணீர் சிந்துவதை தடுக்க முடியாது.
எனவே, தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதை விடுத்து நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்கவும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications