திமுகவுக்கு சிக்கல்.. அந்த 3 அமைச்சர்களுக்கு குறி?.. ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட்..அடுத்து என்னாகும்?

திமுக சீனியர் அமைச்சர்களுக்கு சிக்கல் என்ற தகவல் பரபரத்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில மூத்த அமைச்சர்களின் பதவிக்கு சிக்கல் என்ற தகவல் வட்டமடித்து வரும் நிலையில், தமிழக அரசியல் களமே சூடுபிடித்துள்ளது... என்ன நடக்கிறது?

அமைச்சரவை அமைக்கும்போதே, அனுபவமும், இளமையும் கலந்திருக்கூடியதாக அமைச்சரவை இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தார்... அதன்படியே அமைச்சரவையை உருவாக்கினார்... அதன்படியே துடிப்புடன் செயல்படக்கூடியவர்களுக்கு முக்கிய பதவிகளை ஒதுக்கினார்..

தன்னால் கண்டிப்பு காட்ட முடியாத சீனியர்களுக்கு சில இலாகாக்களை குறைத்தே வழங்கினார். இதனால் சீனியர்கள் அதிருப்திக்கு ஆளானார்கள்.. இப்போது வரை அந்த அதிருப்தியும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
குறை

 இலாக்கா

இலாக்கா

தாங்கள் கேட்ட துறையை ஒதுக்காமல், ஒதுக்கிய துறையிலும் இலாக்காக்களை குறைத்ததால் இந்த அதிருப்தி நீடிக்கிறது.. அத்துடன் கேட்ட துறையை அப்படியே செந்தில்பாலாஜிக்கு முதல்வர் ஒதுக்கிவிட்டாரே என்ற ஆதங்கமும் நீடிக்கிறது. இதற்கு நடுவில் ஒருசில சீனியர்கள் சர்ச்சையாக பேட்டி தந்துவிடுவதும் பேசிவிடுவதும் உண்டு.. அந்த வகையில் ஏற்கனவே 3 அமைச்சர்கள் குறித்த புகார் தலைமை வரையும் சென்றிருக்கிறது.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

இதை கேட்டு வருத்தமடைந்த முதல்வர், அவர்களின் இலாக்காக்களை பறிக்க வாய்ப்புள்ளதா? அமைச்சரவை மாற்றியமக்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. மற்றொருபக்கம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஊழல் புகார் உள்ள திமுக அமைச்சர்கள் மீது புதிய ஆளுநரிடம் புகார் தந்துள்ளதாகவும், அது குறித்த நடவடிக்கையை எடுக்க வேண்டி கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வந்தன.. அந்த வகையில் ஆளுநர் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா? என்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

அதிருப்தி

அதிருப்தி

இந்த இரு சந்தேகங்களை, நாம் ஒருசில அரசியல் நோக்கர்களிடம் முன்வைத்தோம்.. அவர்கள் சொன்ன கருத்தாவது,"இப்போதைக்கு அமைச்சரவையை மாற்றியமைக்கும் எண்ணம் முதல்வருக்கு இல்லை.. அதெல்லாம் வதந்தியாக இருக்கும்.. வேண்டுமானால் அதிருப்திக்கு ஆளாகி இருக்கும் அமைச்சர்களை அழைத்து பேசலாம்.. கண்டிப்பு காட்டலாம்.. அல்லது அவர்களின் இலாக்காக்களை மாற்றி வழங்கலாம்.. மற்றபடி அமைச்சரவையை மாற்றியமைக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.

 சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

நேற்றுகூட துரைமுருகன் பேசும்போது, "கட்சிக்கு துரோகம் செய்கிறவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இந்த துரைமுருகன் நினைத்தால் 24 மணி நேரத்தில் கட்டம்கட்டிவிடுவான்... எத்தனை காலத்துக்கு துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது... அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம்... அதன் பிறகு எம்ஜிஆரை பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்தோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்" என்று சொன்னது பெரும் புகைச்சலை தந்து வருகிறது.. இது நிச்சயம் திமுக கூட்டணியை அசைத்து பார்க்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

 லஞ்ச ஒழிப்புத்துறை

லஞ்ச ஒழிப்புத்துறை

அதேசமயம், ஊழல் புகாருக்கு ஆளான திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை கேட்டு எடப்பாடி பழனிசாமி மனு தந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.. பொதுவாக, அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கொண்டு செல்லலாம்.. அடுத்து காவல்துறையிடமும் கொண்டு செல்லலாம்.. அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இறுதியாக ஆளுநரிடம் புகார் கொண்டு போவார்கள்..

முதல்வர்

முதல்வர்

இப்படித்தான் கடந்த முறை ஸ்டாலினும் அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் புகார் தந்தார்.. டாக்டர் ராமதாஸும் தந்தார்.. டிடிவி தினகரனும் தந்தார்.. இந்த புகார் மனுவில் தலையிட ஆளுநருக்கு உரிமை உண்டு என்றாலும், இந்த முறை திமுக அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா? அவர்களுக்கு குறி வைப்பாரா? என்பது சந்தேகம்தான்.. காரணம், இப்போது அமைச்சர்களாக உள்ளவர்களின் மீதான ஊழல் வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.. நிலுவையில் உள்ள வழக்கை எடுத்து ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியாது..

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

வேண்டுமானால் ஊழல் புகாருக்கு ஆளானோரின் வழக்குகளை ஆளுநர், துரிதப்படுத்த செய்யலாம்.. அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லலாம்.. விசாரணைகள்தான் நகருமே தவிர, அதைவைத்து ஆளுநரால் அமைச்சர்களின் பதவிகளுக்கு பாதிப்பு வரும்படி செய்ய முடியாது.. திமுகவுக்கு டேமேஜ் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏராளமாக இருந்தாலும், அதை எப்படி அமைச்சர்கள் கையாள போகிறார்கள் என்பதிலேதான் இந்த ஆட்சியின் வெற்றி அடங்கி உள்ளது" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+