சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எம்எல்ஏ".. வெளியே சொல்லாதீங்க.. தினகரனுக்கு இவ்ளோ நம்பிக்கை கூடாது.. அடிச்சதெல்லாம் வீணாப் போச்சே!

டிடிவி தினகரன் வீட்டு திருமண பத்திரிகையில் எம்எல்ஏ என்று அச்சிடப்பட்டுவிட்டதாம்

Google Oneindia Tamil News

சென்னை: ஓவர் கான்பிடன்ஸ் வந்துவிட்டதால், தேவையில்லாத ஒரு விஷயத்தை செய்து, பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகிவிட்டாராம் டிடிவி தினகரன்..!

இந்த முறை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து அதிகமாக எதிர்பார்க்கப்பட்டவர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தான்.

நேற்று 21, இன்று 8 ஐஏஎஸ் அதிகாரிகள்.. அதிரடி பணியிடமாற்றம்.. கைத்தறி துறை செயலாளராகிறார் பீலா ராஜேஷ்நேற்று 21, இன்று 8 ஐஏஎஸ் அதிகாரிகள்.. அதிரடி பணியிடமாற்றம்.. கைத்தறி துறை செயலாளராகிறார் பீலா ராஜேஷ்

அதிமுகவின் வாக்குகளையே தினகரன் பிரிக்கக்கூடும் என்றும், இதனால் அமமுக நிச்சயம் இந்த முறை 8 சதவீத ஓட்டு வங்கியை எட்டும் என்றும் கூறப்பட்டது.

 தோல்வி

தோல்வி

ஆனால் அதிமுகவும் அந்த அளவுக்கு சோடை போகவில்லை.. அமமுகவும் வென்றுவிடவில்லை.. இது அதிர்ச்சி தோல்வியாகவே தினகரனால் பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், 2 விஷயங்கள் கசிந்து வருகிறது.. 3 மாதம் டைம் குறித்துள்ளது அமமுக..

 செல்வாக்கு

செல்வாக்கு

அதன்படி, அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள்,மற்றும் முன்னாள்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.. மற்றொரு பக்கம் ஓபிஎஸ் போன்றோரின் ஆதரவுடன் அமமுகவின் செல்வாக்கை உயர்த்தி, அதன்மூலம் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது.

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இதற்காகவே தினகரன் வீட்டு கல்யாணம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. இந்த கல்யாணம் சசிகலா தலைமையில் நடைபெறும் என்றும், அன்றைய தினம் சசிகலா முக்கிய உரையாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.. அதுமட்டுமல்லாமல், இந்த கல்யாணத்துக்கு ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு விடுக்கப்படுவதாகவும், ஓபிஎஸ் இந்த திருமணத்தில் பங்கேற்றால், சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என புது கூட்டணி உருவாக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன.

 எம்எல்ஏ

எம்எல்ஏ

இதே திருமணத்தை வைத்து மற்றொரு செய்தியும் கசிந்து வருகிறது.. அடுத்த மாதம் நடக்க போகும் திருமணத்துக்கு, கடந்த மாதமே அதாவது தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பேயே பத்திரிகை அடிக்க தந்துள்ளனர்.. அந்த பத்திரிகையில் தினகரன் பெயருக்கு பின்னால் எம்எல்ஏ என்று பிரிண்ட் செய்யப்பட்டுவிட்டதாம்.. அதற்கு பிறகுதான் ரிசல்ட் வந்து, தினகரன் அப்செட்டுக்கு ஆளாகி உள்ளார்..

 பத்திரிகைகள்

பத்திரிகைகள்

பிறகு அந்த பத்திரிகைகளை தூக்கி போட்டுவிட்டு, வேற பிரிண்ட்டுக்கு ஆர்டர் தந்தாராம்.. வீணானது எல்லாமே காஸ்ட்லி பத்திரிகைகளாம். எப்படியும் இந்த முறை ஜெயிச்சிடுவோம்னு நம்பி எம்எல்ஏன்னு பேர் போட சொல்லிட்டேன்.. விஷயத்தை பெரிசாக்காதீங்க என்று அந்த பிரிண்டிங் பிரஸ்ஸிடம் தினகரன் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது...!

English summary
Will TTV Dinakaran Join with OPS soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X