அல்லாடும் மதிமுக.. ஸ்டிரிக்ட் திமுக.. அறிவாலயத்தில் குழம்பும் வைகோ.. இதுதான் முடிவா? திணறுது பம்பரம்
சென்னை: மதிமுக - திமுக கூட்டணி இழுபறியாக உள்ள நிலையில், விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்றும் நமக்கு கிடைத்துள்ளது.
மதிமுகவை பொறுத்தவரை, திமுகவுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு 1+1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழகம் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கு அனுப்பி, அதன் வெற்றியையும் அறுவடை செய்திருந்தது திமுக கூட்டணி.

ஆனால், இந்த முறை, கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.. அதிலும், சின்னம் விவகாரத்தை வைகோ கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லையாம். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும்நிலையில், திமுக தரப்பிலோ, 1+1 மட்டுமே தருவதற்கு தயாராக இருக்கிறதாம்..
பம்பரம்: ஆனால், எப்படியாவது, 4 லோக்சபாவும் 1 ராஜ்யசபாவும் பெற்றாக வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம் வைகோ.. மேலும், பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என்றும் உறுதியாக சொல்லிவிட்டாராம். இதனால் கடந்தவாரம், ஸ்டாலின் தரப்பில் வைகோவிடம் பேசப்பட்டுள்ளது..
அப்போது, "வேட்பாளர்களே இல்லாத கட்சிக்கு 4 சீட் என்பது அதிகம்.. 1 சீட் நியாயமானது என்பதால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.. பம்பரம் சின்னமே மதிமுகவுக்கு இல்லை. இல்லாத ஒரு சின்னத்தில்தான் போட்டியிடுவோம்னு ஏன் அடம் பிடிக்கிறீங்க? முதலில் பம்பரம் சின்னம் மதிமுகவுக்கு கிடைக்கிற வழியைப் பாருங்க. எந்த சின்னத்தில் போட்டியிடுவதுங்கிறதை பிறகு பேசிக்கலாம்" என்று வைகோவிடம் சொன்னார்களாம். எனினும், இதற்கு இதுவரை வைகோ தரப்பிலிருந்து சாதகமான பதில் வரவில்லையாம்.
சின்னம் பிரச்சனை: எனினும், மதிமுகவுக்கு 1 லோக்சபா சீட் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் திமுக தலைமை. இந்நிலையில், தற்போது இதுகுறித்து கூடுதல் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன..
அதாவது, 2019-ல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய எண்ணிக்கையே இப்போதும் தொடரும் எனில் 1 லோக்சபா + 1 ராஜ்யசபா சீட் மதிமுகவுக்கு ஒதுக்குங்கள் என வைகோ தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஸ்டாலின்: இதற்கு திமுக தரப்பில், "மதிமுகவுக்கு ராஜ்யசபா என்பது உங்களுக்காக (வைகோ) தலைவர் (ஸ்டாலின்) தந்தார். உங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத் தரப்பட்டது. உங்களின் பதவி காலம் முடியட்டும்.. ராஜ்யசபாவுக்கான தேர்தல் வரட்டும், அப்போது தலைவர் பரிசீலிப்பார். அதற்காக இப்போதே உறுதி தரமுடியாது. வேண்டுமானால் தலைவரிடம் நீங்களே பேசிக்கொள்ளுங்கள் என கட் அண்ட் ரைட்டாக திமுகவின் பேச்சு வார்த்தைக் குழு தெளிவுபடுத்தி விட்டதாம்.
ராஜ்யசபாவுக்கு வாய்ப்பில்லை என்றால், 2 லோக்சபா இடங்கள் ஒதுக்குங்கள் என தற்போது திமுக தலைமைக்கு தகவல் தந்திருக்கிறதாம் மதிமுக.
உதயசூரியன்: இதனிடையே, 2 லோக்சபாவிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறீர்களா? என வைகோவுக்கு தகவல் பாஸ் செய்துள்ளதாம் அறிவாலயம். இதற்கிடையே, துரைமுருகனை தொடர்புகொண்டு வைகோ தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
அதற்கு துரைமுருகன், "தேர்தல் கூட்டணி, சீட் ஷேரிங் உள்ளிட்ட எந்த விவகாரத்திலும் என்னால் தலையிட முடியாது. இந்த தேர்தலில் நான் ஒரு சாதாரண தொண்டன்.. அதிகாரமில்லாத தொண்டன். உங்களுக்கு உதவமுடியாத நிலையில் இருக்கேன் வைகோ. எனக்கு தெரிந்து 1 சீட்டுக்கு ஒப்புக் கொண்டால் கூட்டணியில் நீங்கள் தொடர முடியும்னுதான் நான் நினைக்கிறேன்" என்று அவரது ஆதங்கத்தை பதிலுக்கு வெளிப்படுத்தினாராம் துரைமுருகன்.
என்ன முடிவு: இதற்கும் வைகோ இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லையாம். 1 சீட் என்பதிலேயே திமுக உறுதியாக உள்ளதால், அந்த 1 சீட்டை மதிமுக பெற்றுக் கொள்ளுமா? அப்படியே 1 சீட் கிடைத்தாலும் அதை யாருக்கு ஒதுக்கப்படும்? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள்












Click it and Unblock the Notifications