வேளச்சேரி பள்ளிக்கரணை தப்பிக்குமா... ஒக்கியம் மடுவு மேம்பாலத்தில் இரவு பகலாக சென்னை மெட்ரோ தீவிரம்
சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி, வெள்ளப் பாதிப்புகளைத் தாங்கும் வகையிலும் அதன் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தவும், ஒக்கியம் மடுவு பாலத்தின் விரிவாக்கப் பணிகளை சீராக மேற்கொண்டு வருகிறது. ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டு, பருவமழைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்ய இரவு பகலாகப் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு சிக்கல் தீர்ந்தால் மட்டுமே வேளச்சேரி பள்ளிக்கரணை உள்பட தென்சென்னை முழுக்க வெள்ள பாதிப்பு குறையும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னையில் அக்டோபர் தொடங்கி படிப்படியாக பருவ மழை அதிகரித்து, டிசம்பரில் உச்சகட்டம் அடையும். டிசம்பரில் பெய்யும் உச்சகட்ட மழையில் பெரும்பாலான சென்னை பாதிக்கப்படும். குறிப்பாக தென் சென்னை பகுதிகளான பள்ளிக்கரணை, வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும். இதற்கு, நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முக்கிய காரணம் ஆகும்.

நாராயணபுரம் ஏரி உடைப்பு
இதேபோல், ஏரிகள் முறையாக தூர்வாரி சீரமைக்கப்படாததால், போதிய மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஒவ்வொரு வருடமும் ஏற்படுகிறது. ஏரிகளின் கரைப்பகுதி வலுவிழந்து காணப்படுவதால், மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டு, சுற்றுப் பகுதி வீடுகள் வெள்ளத்தில் மிதக்கும்.கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் நாராயணபுரம் ஏரி அருகே உள்ள பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு அந்த வெள்ளம் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கீழ்கட்டளை, வேளச்சேரியை கடுமையாக பாதித்தது.
உபரி நீர் செல்லாது
பொதுவாக இந்த பகுதிகளில் வெள்ள நீர் பள்ளிக்கரணை ஏரி வழியாகவே செல்லும். ஆனால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த காரணத்தால், மழைக்காலங்களில் போதிய நீரை சேமிக்க முடியாமல், உபரி நீராக வெளியேறி வந்தது. அவ்வாறு வெளியேற்றப்படும் உபரிநீர், ஒக்கியம் மடுவு வழியாக கடலை நோக்கி சென்றடையும். பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், நேரடியாக கடலுக்கு எந்த கால்வாயும் இயற்கையாக கிடையாது. இதனால் நீண்ட தூரம் பயணிக்கும் வெள்ளம், இறுதியாக முட்டுக்காட்டில் தான் கடலில் கலக்கும். தென்சென்னை வெள்ளத்தில் இருந்து தப்பிக்க இந்த கால்வாய் சரியாக இருக்க வேண்டும்.
மிக்ஜாம் புயல்
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் மழை வெள்ளம் ஏற்பட்ட போது, ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் வெள்ளநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே நிரம்பிய ஏரிகள் மீது தொடர்ந்து 36 மணிநேரம் பெய்த மழையால் நிலைமை மோசமாகியது.
ஒக்கியம் மடுவு பாலத்தில் தண்ணீர் வெளியேற முடியாத அளவிற்கு பாதை மிக சிறிய அளவில் இருந்தது. இதுவும் தண்ணீரின் வேகத்திற்கு ஏற்ப செல்ல முடியாததால், தண்ணீர் தேங்கி வெள்ளமாக மாறியது. இதுவும் தென்சென்னை வெள்ள பாதிப்புக்கு காரணமாக இருந்தது.
200 மீட்டர் நீளம்
அதிக மழையை தாங்கும் திறன் இல்லாததும், பாலத்தில் நீர்வழிப்பாதை நீளமும், பாலத்தின் உயரம் குறைவாக இருந்ததே இதற்கு காரணம் என கண்டறிந்த அதிகாரிகள் ஒக்கியம் மடுவு பாலத்தின் நீர்வழிப்பாதையை 80 மீட்டரில் இருந்து 200 மீட்டர் நீளத்திற்கும், பாலத்தின் உயரத்தை 1.5 மீட்டர் அதிகரிக்கவும் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து ஒக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒக்கியம் மடுவு பாலம்
அதன்படி, நீர்வழி பாதை விரிவாக்கம் மற்றும் 5 வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி, வெள்ளப் பாதிப்புகளைத் தாங்கும் வகையிலும் அதன் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தவும், ஒக்கியம் மடுவு பாலத்தின் விரிவாக்கப் பணிகளை சீராக மேற்கொண்டு வருகிறது.
என்ன செய்கிறது சென்னை மெட்ரோ
டிசம்பர் 2023-இல் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து, அதிக மழைப்பொழிவைதாங்கும் திறன் இல்லாத நிலையில் உள்ள தற்போதைய ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போதுசுமார் 90 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு மற்றும் நீர்வளத் துறையுடன் கலந்தாலோசித்த பிறகு, நீர்வழிப்பாதையை 205 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
தற்போது நடைபெறும் பணிகளின் முன்னேற்றம்;
பாலத்தின் அமைப்பு: தற்போதுள்ள பாலத்தின் மேல்புற மற்றும் கீழ்ப்புறப் பகுதிகளில், மூன்று 40 மீட்டர் நீளத்தில் ஸ்டீல் பாலத்தின் கட்டுமானப் பணிகளும், அதன் மேல் தளத் தகடுகளை அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட நீர்வழிப்பாதை: 90 மீட்டராக இருந்த நீர்வழிப் பாதை, இப்போது 120 மீட்டராக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகள் நிறைவு பெற்றவுடன், பாலத்தின் முழு அகலம் சுமார் 205 மீட்டர் ஆகும்.
நீர்வழிப்பாதையை சீர்செய்தல்: பாலத்தின் மூன்று நீர்வழிப்பாதையும் கட்டி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்காலிகமாகப் போடப்பட்ட மண் மேடு அகற்றப்பட்டது. இப்போது, பாலத்தின் மேல்பக்க நீர்வழிப்பாதை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கீழ்ப்புற நீர்வழிப்பாதையில் 80% பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பகுதிகள் செப்டம்பர் 8 முதல் 10, 2025-க்கு இடையில் சுத்தம் செய்யப்படும்.
அடுத்தக்கட்ட திட்ட பணிகள்:
• பாலங்கள் அமைக்கும் பணிகள் இருபுறமும் நடைபெற்று வருகின்றன.
• பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டதும், புதிய பாலம் பொது பயன்பாட்டிற்காக தற்போதைய சாலையுடன் இணைக்கப்படும்.
ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையில் நடைபெற்று வரும் பணிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன், பொது மேலாளர் (வழித்தடம்) திரு. சி. செல்வம், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
சித்திக் ஐஏஎஸ் விளக்கம்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் ஐஏஎஸ் ஆய்வின்போது கூறுகையில், "ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டு, பருவமழைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகிறோம். தற்போதுள்ள ஒக்கியம்மடுவின் நீர்வழிப்பாதையை அடித்தள நிலை வரை சரிசெய்யும் பணியில் குழு கவனம் செலுத்தி வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும், இந்த பாலம் நீரின் ஓட்டத்தை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும். மேலும், அருகிலுள்ள பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைத்து, பள்ளிக்கரணை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள பாதிப்புகளிருந்து தீர்வை அளிக்கும்" இவ்வாறு கூறினார்." மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ளது
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications