சல்லி சல்லியா போகுதோ திமுக பிளான்? தவெகவில் திருப்புமுனை.. தைலாபுரம் போகும் விஜய்? யாருடன் கூட்டணி
சென்னை: புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவினர் பொதுக் கூட்டத்தை நாளை நடத்த உள்ளனர்.. இதற்கான பாதுகாப்பு மற்றும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. கரூர் சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக மக்கள் முன்பு விஜய் பேச உள்ளதால், தவெக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில் தவெகவில் ஒரு முக்கிய நிகழ்வு நடக்க போவதாக செய்யாறு பாலு விரிவாக வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் வருகையினால், விஜய் முதலமைச்சராகிவிட முடியாது, ஆனால், அந்த கட்சிக்கு பலம் கிடைக்கும்..

கூத்தாடி நடிகர்
"கூத்தாடி, நடிகர், ட்விட்டரில் கட்சியை நடத்துபவர், பனையூரில் கொடியேற்றியவர்" என்றெல்லாம் விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.. ஆனால், கட்சி ஆரம்பித்த 2 வருடங்களிலேயே இத்தனை சீரியர்கள் தவெகவுக்கு வருவது ஒரு பலம்தானே?
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிக்கு ஒரு மூத்த பேச்சாளர் தேவைப்படும் நிலைமை உள்ளது.. அந்தவகையில், நாஞ்சில் சம்பத் மேற்கொள்ளும் பேச்சுக்களால். தவெகவின் கூட்டங்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10ம் தேதிக்கு பிறகு அதிமுகவில் இருந்து 2 பெரிய தலைகள் தவெகவுக்கு வரப்போவதாக செய்திகள் வருகின்றன.. திமுகவில் இருந்தே 2 அமைச்சர்கள் தவெகவுக்கு வரப்போகிறார்கள் என்று ஆதவ் அர்ஜூனாவே ஒரு பேட்டியில் சொன்னதாக செய்திகள் கசிந்தன..
தவெகவில் பிரபலங்கள்
ஆனால், இந்த பேச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை.. காரணம், வலுவான திமுகவில் இருந்து விஜய் பக்கம் வர வாய்ப்பே இல்லை. ஒருவேளை அதிமுக, திமுகவில் இருந்து தவெகவுக்கு பிரபலங்கள் வர நேர்ந்தால், இதைவிட பெரிய பலம் கட்சிக்கு இருக்க போவதில்லை.
அதேபோல திருப்புமுனை காட்சியாக, திருப்பு முனை செயலாக ஒரு நிகழ்வு தவெகவில் நடக்க போகிறதாம்.. தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸை விஜய் மீட் பண்ண போகிறாராம்.. மருத்துவரிடம் நலம் விசாரிக்க போகிறாராம்.. இப்போதைக்கு பாமக இரண்டு அணியாக உள்ளது..
அன்புமணி தவெக கூட்டணிக்கு வருவாரா
இதில் அன்புமணி தவெக கூட்டணிக்கு வருவாரா தெரியவில்லை.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தந்தால் கூட்டணிக்கு வரக்கூடும் என்கிறார்கள்.. மற்றொருபுறம் இந்த தேர்தலைவிட, மக்களவை தேர்தலில்தான் அன்புமணியின் கவனம் தீவிரமாக உள்ளதாகவும் சொல்கிறார்கள். ஒருவேளை அன்புமணி தவெகவுடன் கூட்டணி என்றால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம், எங்கள் கொள்கைக்கும், கோட்பாடுக்கும்" என்று ஏற்கனவே சொல்லி உள்ளனர்.
அதேபோல வன்னியர்களின் பெரும்பான்மையான மூத்த ஓட்டுக்கள் ராமதாஸிடம் உள்ளது.. இந்த ஓட்டுக்களை கவருவதற்காகவும், வடமாவட்டங்களில் தவெகவை பலப்படுத்துவதற்காகவும், மருத்துவர் ராமதாஸை விரைவில் விஜய் சந்திப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளதாக கூறப்படுகிறது.
விஜயின் அடுத்த மக்கள் சந்திப்பு
இப்படி கூட்டணி பரபரப்புகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, விஜய் எப்போது மீண்டும் மக்களை சந்திப்பார்? என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.
புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டத்தை விஜய் நடத்த போகிறார்.. அதேபோல சமீபத்தில் காஞ்சிபுரத்தில் 2000 பேரை ஒரு அரங்கில் சந்தித்ததுபோல, வேலூர் அல்லது சேலத்தில் மக்களை விஜய் சந்திக்க தவெகவில் திட்டமிடப்பட்டு வருகிறதாம்.. அதற்கான அனுமதியும் விரைவில் கேட்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏனென்றால், மக்களை சந்திக்காமல் யாராலும் பலத்தை காட்ட முடியாது.. அதிலும் விஜய் போல, மக்களின் ஆதரவை பெற்றவர்கள், மக்களை நேரில் சந்தித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
தவெகவுடன் கூட்டணி நிஜமா?
செய்யாறு பாலு தந்துள்ள இந்த பேட்டி மிகுந்த கவனத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.. தவெகவுடன் ராமதாஸ் தரப்பு இணைவார்களா? என்பது தெரியவில்லை.
காரணம், கரூர் சம்பவத்துக்கு முன்பிருந்தே விஜய்யுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வருகிறார் அன்புமணி.. உதாரணத்துக்கு, கரூரில் செப் 27ல் மேற்கொள்ளவிருந்த தன்னுடைய நடைப்பயணத்தை 28ம் தேதிக்கு அன்புமணி மாற்றியிருந்தார்.. விஜய் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதற்காக தனது நடை பயண தேதியை மாற்றியதாக கூறப்பட்டது.
ராமதாஸ் முடிவு என்ன?
அதேபோல சம்பவம் நடந்தபோதுகூட, எந்த வகையிலும் உயிரிழப்புகளை நியாயப்படுத்த முடியாது. ஆனால் பிரச்சார ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை போலீசார் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும் என்று அன்புமணி கூறியிருந்தார்.
ஆனால், நிறுவனர் ராமதாஸ், "கரூர் சம்பவத்திற்கு முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? முதல்வர் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்திருக்கிறார்" என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
அந்தவகையில், டாக்டர் அன்புமணி, நிறுவனர் ராமதாஸ் இருவரின் நிலைப்பாடும் மிகுந்த எதிர்பார்ப்பை தவெகவுக்குள் ஏற்படுத்தி வருகிறது.
-
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள்












Click it and Unblock the Notifications