பெரும்பான்மை கிடைக்காவிட்டால்.. ஆட்சியை உதறிவிட்டு கெஜ்ரிவால் மாதிரி தேர்தலை சந்திப்பாரா விஜய்!
சென்னை: என்னதான் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் பெரிய கட்சியாக உருவெடுத்து இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையை எட்டவில்லை. எனவே மற்ற கட்சிகளுடன் கூட்டணிக்கு பேசி வருகிறது. ஒருவேளை பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த முடிவை விஜய் எடுக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
கடந்த 2013-ல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாஜக: 31 இடங்கள்
ஆம் ஆத்மி (AAP): 28 இடங்கள்
காங்கிரஸ்: 8 இடங்கள்
அப்போது, காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக முதலமைச்சரானார். கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தவுடன் தனது முக்கிய வாக்குறுதியான ஜன் லோக்பால் மசோதாவை (ஊழல் எதிர்ப்புச் சட்டம்) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கவில்லை.
மசோதாவை நிறைவேற்ற முடியாததால், கொள்கை ரீதியாகப் பதவி விலகுவதாகக் கூறி, ஆட்சியில் அமர்ந்த 49-வது நாளில் (2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி) தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த பிறகு, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சுமார் ஒரு வருடம் கழித்து, 2015 பிப்ரவரியில் மீண்டும் பொதுத்தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் மக்களிடம் சென்று மீண்டும் ஆணை கேட்போம் என கெஜ்ரிவால் களம் இறங்கினார். முடிவில், டெல்லியின் 70 இடங்களில் 67 இடங்களை வென்று இமாலயப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
இதேபோல இப்போது விஜய்யின் நிலைமை இருக்கிறது. தவெக ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை. எனவே காங்கிரஸ், இடதுசாரிகளிடம் விஜய் கோரிக்கை வைத்திருக்கிறார்.
காங்கிரஸ் ஆதரவளிக்க முன் வந்திருக்கிறது. இடதுசாரிகள் வரவில்லை. எனவே, விஜய்க்கு சிக்கல் நீடிக்கிறது. இப்படி பெரும்பான்மை நிரூபிக்காமல் போய்விட்டால் விஜய் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க வருவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications