"சாதி கோஷம்.." ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்!
புதிய பதவி கேட்டு வருகிறாராம் அமைச்சர் சிவி சண்முகம்
சென்னை: சாதி கோஷம் அதிமுகவில் கிளம்பி உள்ளது.. அந்த வகையில் முக்கிய பதவிக்கு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விரைவில் ஜாக்பாட் அடிக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால் அதற்கு குறுக்கே சிவி சண்முகம் இருப்பாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு உடம்பு சரியில்லை.. ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கிறார்..உடல்நிலை ரொம்பவும் மோசமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் உயிரை காப்பாற்ற முடியாமல் டாக்டர்கள் தினமும் போராடி வருகின்றனர்.

அவர் ஆஸ்பத்திரியில் உள்ளதால், அவரது இலாகா பணிகள் அப்படி அப்படியே தேங்கி உள்ளன.. எந்த ஃபைலும் நகரவில்லை.. அதனால், அந்த பதவியை இப்போதைக்கு யாரிடமாவது ஒதுக்க எடப்பாடி அரசு யோசித்து வருகிறது. ஆனால், மிக சரியான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்கவும் முயன்று வருகிறது.. காரணம், வேளாண் சட்டங்கள், நெல் கொள்முதல் விவகாரம் என நிறைய பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்துள்ளன.
இதையெல்லாம் சமாளிக்க கூடியவரை நியமனம் செய்ய வேண்டும் என்பதால் யோசனை நடந்து வருகிறது. இந்த சமயத்தில் துரைக்கண்ணுவின் பதவி தனக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் முயன்று வருகிறார்.. அதற்கு அவர் சொல்லும் காரணம், துரைக்கண்ணு வன்னியர் சமுதாயம் என்பதால், இன்னொரு வன்னிய சமூக அமைச்சருக்குத்தான் தர வேண்டும் என்பது சிவி சண்முகம் எடுத்து வைக்கும் நியாயம்.
ஆனால், டெல்டா மாவட்ட அமைச்சரின் பதவியை, அதே டெல்டாவை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்குவதுதான் சரியாக இருக்கும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவர்களில் யாராவது ஒருத்தருக்கு ஒதுக்கலாம் என்பதே ஒரு சில சீனியர் அமைச்சர்களின் எடுத்து வைக்கும் நியாயம்..
இதில் காமராஜ் அல்லது விஜயபாஸ்கர் பெயர் லீடிங்கில் உள்ளதாம்.. இதையடுத்து, சிவி சண்முகமா? விஜயபாஸ்கரா? காமராஜா? இவர்களில் யாருக்கு அந்த பதவி தற்காலிகமாக தரப்படுகிறது என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.
-
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications