விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன?
சென்னை: விஜய் மீதுள்ள வழக்குகள் சம்பந்தமான விவரங்களை, பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. ஆனால் திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 6 மாலை 6 மணிக்குள், பெரம்பூர் தொகுதியில் திருத்தப்பட்ட மனுவை மீண்டும் தாக்கல் செய்யலாம். மாறாக, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனு விஜயால் திருத்தப்படாமல் போனால், அவர் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்ட ரீதியாக என்ன வாய்ப்பு விஜய்க்கு உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், சென்னை பெரம்பூரிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த இரண்டுமே திமுக 2021ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாகும். பெரம்பூரை பொறுத்தவரை விஜய் ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதாவது தவெக நிர்வாகிகள் எண்ணிக்கை தமிழ்நாட்டிலேயே அதிகம் உள்ள தொகுதியாகும். அடுத்தாக திருச்சி கிழக்கை பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் வாக்கு அதிகமுள்ள தொகுதியாகும். இந்த இரண்டுமே விஜய்க்கு சாதகமாக இருப்பதால் இரு தொகுதியிலும் விஜய் நிற்கிறார்.

வழக்கு விவரங்கள்
இந்த இரண்டு தொகுதியிலும் அடுத்தடுத்த நாளில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. இதில் விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்பு மனுவில் தன் மீதான வழக்கு விவரங்களை தெரிவிக்கவில்லை.. அதேநேரம் திருச்சி கிழக்கு தொகுதி வேட்புமனுவில், 2025 ஆகஸ்ட் மாதம் மதுரையில் பரப்புரையின் போது போடப்பட்ட வழக்கும், மார்ச் 30ம் தேதி பெரம்பூர் பரப்புரையில் போடப்பட்ட வழக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை வழக்கு
மதுரை வழக்கை பொறுத்தவரை "கடந்த 21.08.2025 மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தலைவர் விஜய் நடைமேடையில் நடந்து வரும்போது தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் புகார்தாரர் ஏறியதாகவும் அப்பொழுது 10 புகார்தாரரை இடிந்து தள்ளியும் அசிங்கமாக பேசியும் இடித்து தள்ளியதில் நெஞ்சுக்காயம் மற்றும் உள்காயம் ஏற்பட்டதாக புகார்" அளிக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்த குற்றவழக்கு பற்றி காவல்துறையிடமிருந்து எந்தவித சம்மனோ, தகவலோ வரவில்லை. தற்போது தான் இந்த வழக்கின் விவரம் தெரிய வந்ததால், இவ்வழக்கு குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது" என விஜய் தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்கள் சொல்வது என்ன
இதையடுத்து மார்ச் 6 மாலை 6 மணிக்குள், பெரம்பூர் தொகுதியில் திருத்தப்பட்ட மனுவை மீண்டும் தாக்கல் செய்யலாம். மாறாக, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனு விஜயால் திருத்தப்படாமல் போனால், அவர் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்பு, திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டுமே வேட்பாளராக களமிறங்கும் நிலை ஏற்படும் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
மாற்று வேட்பாளர்கள்
இதனிடையே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய்க்கு கவரிங் வேட்பாளர்கள் போடப்பட்டுள்ளனர். பெரம்பூரில் சிவா என்பவரும், திருச்சி கிழக்கில் கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவியும் Covering வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒருவேளை இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒரு வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், இவர்களில் ஒருவர் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கிற நிலை உள்ளதாக நெட்டிசன்கள் மற்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
நாளை விஜய் துணை வேட்புமனு
ஆனால் பெரம்பூர் தொகுதியில் போடப்பட்ட வழக்கு என்பது விஜய் பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் தான் போடப்பட்டது. அந்த வழக்கை குறிப்பிட முடியாது. குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் மதுரை வழக்கை குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி மிஸ்ஸானாலும் பெரிய பிரச்சனை இல்லை.. அவர் அது பெரிய விவகாரம் அல்ல. விடுபட்ட கூடுதல் தகவலை ஒரு Supplementary/Additional Affidavit ஆக Apr. 4 அல்லது 6 ஆம் தேதி மீண்டும் அதே பெரம்பூர் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யலாம். விஜய் தரப்பு ஏப்ரல் 4 அன்று Supplementary/Additional Affidavit தாக்கல் செய்யதாக கூறப்படுகிறது. எனவே எந்த சிக்கலும் வராது என்கிறார்கள்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்!












Click it and Unblock the Notifications