பட்டென இப்படி முடிவு எடுத்துட்டாரே சசிகலா.. அதிரும் எடப்பாடி பழனிசாமி.. புருவத்தை உயர்த்தும் திமுக
எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க சசிகலா புதுக்கட்சி தொடங்குவார் என்கிறார்கள்
சென்னை: அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் ஒரு ஷாக் செய்தி அரசியல் களத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.. இதற்கு காரணம் சசிகலா தரப்பில் கசிந்து கொண்டிருக்கும் முக்கிய தகவல்தான்..!
தொண்டர்களுடன் ஆடியோ ரிலீஸ், ஆன்மீக சுற்றுப்பயணம் என்று மறைமுகமான நடவடிக்கைகள் சசிகலாவுக்கு சறுக்கலை பெற்று தந்துவிட்டன.
சசிகலாவின் மெத்தனங்கள், எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பலத்தை பெற்று தந்துவிட்டன.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை, அமமுகவில் இணைந்து தேர்தலை சசிகலா சந்தித்திருந்தால், இந்த அளவுக்கு சசிகலா பலத்தை இழந்திருக்க மாட்டார் என்றே தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி
எப்படியும் குறைந்தபட்சம் 10 சதவீத வாக்குகளையாவது பெற வாய்ப்பு இருந்திருக்கும்.. அதிமுகவுக்கும் ஒரு கிலியை தந்த மாதிரியாக இருந்திருக்கும்.. அமமுக என்ற கட்சியையே சசிகலா விரும்பாதது மட்டுமின்றி, அக்கட்சியை கலைத்துவிடும்படி தினகரனை வலியுறுத்தி வந்ததும், அதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பையும் மறுத்துவிட முடியாது.

எடப்பாடி முடிவு?
இப்போதைக்கு சசிகலா என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. அமமுகவுடன் இனியாவது இணைந்து கட்சியை பலப்படுத்துவாரா? அல்லது அப்பீல் என்றெல்லாம் போகாமல், எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சுமூகமாக பேசி முடித்து கொள்வாரா? என்று தெரியவில்லை.. இந்த சூழலில்தான் 2 விதமான செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. முதலாவதாக, வெளிப்படையாகவே சீனியர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆதரவை பெறலாமா என்று யோசித்து வருகிறாராம் சசிகலா..

சீனியர்கள்
காரணம், இப்போதைக்கு அதிமுகவின் சீனியர்கள்தான் சசிகலாவின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், இவர்களை மீறி எதையும் செய்ய முடியாது என்ற நிர்ப்பந்தமும் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது.. எனவே, இவர்களை எல்லாம் சரிக்கட்டினால்தான், அதிமுகவை கைப்பற்ற முடியும் என்பதை தற்போதுதான் உணர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, தனிக்கட்சி தொடங்கவும் சசிகலாவுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது..

ஜாதி கட்சிகள்
சமீபத்தில், தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், "என் அரசியல் பயணத்திற்கான நேரம் வந்து விட்டது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மத்திய அரசால் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த நெருக்கடியும் இல்லை" என்று சொல்லியிருக்கிறார்.. அதாவது, ஏற்கனவே, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, தேனி கண்ணன் உள்ளிட்ட சில ஜாதி கட்சிகளின் தலைவர்கள் சசிகலாவின் தீவிர அரசியல் பயணத்தை வரவேற்றிருக்கும்நிலையில், இதுவும் சசிகலாவுக்கு தெம்பூட்டி வருவதாக கூறப்படுகிறது.

தனிக்கட்சியா?
அதனால்தான், இனியும் அதிமுகவை நம்பி இருக்க வேண்டாம், பேசாமல் "சசிகலா பேரவை" என்று துவக்கி நேரடி அரசியலில் ஈடுபடலாம் என்று ஆலோசனையை தந்து வருகிறார்களாம். இப்படி தனிக்கட்சி தொடங்க காரணமும் சொல்லப்படுகிறது.. சசிகலா தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளாராம்.. தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய மக்களை குறி வைத்து கடந்த சட்டசபை தேர்தலிலேயே அதிமுகவுக்கு எதிராக களமிறங்கியிருக்கலாம்..

காவிரி டெல்டா
அந்த தேர்தலை புறக்கணித்தால்தான், அதிமுக அங்கு வலுவாகி விட்டது.. தென்மாவட்டமும், காவிரி டெல்டா பகுதிகளும்தான் சசிகலாவின் மொத்த பலமே.. இங்கும் அதிமுக கொடி நாட்டப்பட்டு விட்டதால், சொந்த பகுதியிலேயே செல்வாக்கை நிரூபிக்க வேண்டி உள்ளது.. அதனால்தான், வரப்போகும் எம்பி தேர்தலிலாவது சசிகலா நேரடியாக போட்டியிட வேண்டும்.. அதற்கு சொந்த கட்சி துவங்கினால்தான் சாத்தியமாகும் என்பதே அவருடைய ஆதரவாளர்கள் வழங்கி வரும் ஆலோசனைகளாகும்...

எடப்பாடிக்கு செக்
அந்த வகையில், சசிகலா பேரவை சார்பில் 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும், அவர்கள் வாங்குகிற ஓட்டு சதவீதம் கணக்கின் பலம் நிரூபிக்கும்பட்சத்தில், அதிமுகவில் சசிகலா இணைவதற்குரிய முக்கியத்துவம் தானாக தேடி வரும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். அத்துடன், பாஜகவுக்கும் சசிகலாவின் பலத்தை மெய்ப்பிக்க வேண்டி வரும் என்கிறார்கள்.. இந்த முடிவை சசிகலாவும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. ஒருவேளை தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அமமுகவையும் இணைத்து கொண்டு தேர்தலை சந்தித்தால், கூடுதல் பலத்தை சசிகலாவுக்கு பெற்று தரும் என்றே கூறப்படுகிறது.

முக ஸ்டாலின்
இந்த கணக்குகள் அனைத்தும் சாத்தியமானால், அது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்து சொல்கிறார்கள்.. எந்த அளவுக்கு, அதிமுக - சசிகலா - அமமுகவுக்குள் பூசல்கள் உள்ளதோ, அவை அத்தனையும் திமுகவுக்கு பலத்தை தந்துவிடும்.. ஆனால், இவைகள் பலமாகும் பட்சத்தில், திமுகவுக்கு சறுக்கலை ஏற்படுத்தும் நிலைமையும் உள்ளது.. எனினும், சசிகலா தனிக்கட்சி தொடங்குவரா? அமமுக இணையுமா? அதிமுகவுக்கு செக் வைப்பார்களா? திமுக இதனால் பாதிக்கப்படுமா? இதெல்லாம் நடக்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications