சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"குறி"?.. டெல்லி அவசர மீட்டிங்.. "அந்த" 3 தொகுதிகள்.. வாக்குப்பதிவு நடக்குமா? எகிறும் எதிர்பார்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: நாளை காலையில் வாக்குப்பதிவுக்கு தமிழகமே தயாராகி வரும் நிலையில், ஒரு முக்கிய செய்தி நம் மாநிலத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இதனால் தேர்தல் பரபரப்பு எகிறி வருகிறது!

அதிமுக, திமுக இரு கட்சிகளுமே தங்களை நிலைநிறுத்தும், பலத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதனால்தான், எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை தேர்தல் ஆணையம் படுதீவிரத்தை கையில் எடுத்தது..

அதேபோல, எந்த முறையும் இல்லாத இந்த முறை ஏகப்பட்ட பண மூட்டைகளையும் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்துள்ளனர்.. இது சம்பந்தமாக எங்கெங்கே எவ்வளவு பணத்தை பிடித்தோம் என்ற தகவலும் வெளியானது.

 வாக்காளர்கள்

வாக்காளர்கள்

அதாவது, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 412 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. இதை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்திருந்தார்... இந்த பணம் எல்லாம் அந்தந்த தொகுதிகளின் முக்கிய நபர்கள் வீட்டிலேயே பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது..!

 வீடியோ

வீடியோ

இதுபோக ஆங்காங்கே வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளிவந்தபடியே இருந்தன. இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தலை நிறுத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம்தான் ஆலோசித்து முடிவெடுக்கும் என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்த நிலையில், இன்னொரு தகவலும் தற்போது வலம் வருகிறது.

ஆலோசனை

ஆலோசனை

நேற்று டெல்லியில் அவசர அவசரமாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு மீட்டிங் போட்டுள்ளனர்.. அதில், நாளை நடக்க போகும் மாநிலங்களின் வாக்குப்பதிவு குறித்த ஆலாசனைகள் நடந்துள்ளது.. அதே சமயம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஐடி ரெய்டுகள் முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. அதிமுக, திமுக தரப்பில் ரெய்டுகள் நடந்ததே தவிர, இதுவரை அங்கு என்ன கைப்பற்றப்பட்டது என்று அதிகாரிகள் எதையுமே அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. அதுகுறித்த விவாதம்தான் நேற்று நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.

 பறிமுதல்

பறிமுதல்

அதேபோல, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடத்தப்பட்டு, மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்த ஆலோசனையும் நடந்துள்ளது.. இந்த பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதில் மொத்தம் 3 தொகுதிகள் டாப் லிஸ்ட்டில் உள்ளதாம்.. அது கரூர், திருவண்ணாமலை, திருச்சி (திருச்சியில் ஒரு தொகுதி, ஆனால் எந்தத் தொகுதி என்று தெரியவில்லை) என்று சொல்லப்படுகிறது..

 வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு

ஒருவேளை இந்த 3 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நிறுத்தப்படுமா அல்லது பிடிபட்ட பணப்பட்டுவாடா செய்யப்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுமா என்று தெரியவில்லை. ஆனால், இதுவரை தேர்தல் ஆணையம் இது சம்பந்தமாக எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை.. அதேசமயம் குறிப்பிட்ட இந்த 3 தொகுதிகள் குறித்த சந்தேகமும் இன்னமும் இருந்து கொண்டே இருக்கிறது..!

English summary
Will voting take place tomorrow in Three TN Constituencies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X